யாழ் - சோனகத்தெரு தெற்கு கிராம மக்களுக்கு வாழ்வாதார கடனுதவி
பா.சிகான்
யாழ் மாவட்டத்தில் சோனகத்தெரு தெற்கு கிராமப் பிரிவைச்சேர்ந்த மக்களுக்கு வாழ்வாதார கடன் வழங்கும் நிகழ்வு சோனகத்தெரு தெற்கு கிராம அபிவீருத்தி தலைவர் எம்.எம். மிஸ்னூன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
வாழ்வாதார கடனுதவிக்கென விண்ணப்பித்த 35 குடும்பங்களில் 16 குடும்பங்களுக்கான கடனுதவியே முதல் கட்டமாக வழங்கப்பட்டது.
இதில் பெண்களைத்தலைமைத்துவமாகக் கொண்ட சுயதொழில் செய்யக்கூடிய குடும்பங்களுக்கே ரூபா 25,000 வீதம் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர். சுழற்சி முறையிலான கடனுதவி என்பதனால் படிப்படியாகஏனையோருக்கும் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் பி.அஸ்கர் றூமி கிராம சேவையாளர் எஸ்.ஜூனூஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment