Header Ads



பாராளுமன்றத்தில் மன்னார் நீதிபதி குறித்து பேசிய விடயங்கள் ஹன்சாட்டிலிருந்து நீக்கம்


மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியபோது, நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின்படி நீதித்துறை அதிகாரியொருவரின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேச முடியாது என அரசதரப்பு எம்.பி ஜனக பண்டார ரிஷாட்டை எச்சரித்துள்ளார்.

மன்னார் மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியவேளை, சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார மேற்கண்டவாறு எச்சரிக்கை செய்துள்ளார். 

இருப்பினும் ஜனக பண்டார முன்னாள் நீதிபதியாவார். எனினும் ரிஷாட்டின் கூற்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார பல தடவை எச்சரித்தார். ஆனாலும் தான் நீதித்துறை அதிகாரிகளை மதிப்பதாக கூறினார். 

எனினும் எந்தவொரு நபரும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்குறித்து திருப்தியடையாவிட்டால் அதைவிட உயர்ந்த நீதிமன்றத்திடம் மேன்முறையீடு செய்யலாம். அதை விடுத்து விவாதிப்பது தவறு என ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் நாடாளுமன்றில் மன்னார் சம்பவம் குறித்தும் நீதிபதி குறித்தும் அமைச்சர் பேசிய அனைத்தும் ஹன்சார்ட்டிலிருந்து நீக்கப்படும் என சபைக்குத் தலைமை தாங்கிய ஜனக பண்டார அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.