பசீர் சேகுதாவூத்தை ராஜினாமா செய்யுமாறு நான் கூறவில்லை - ரவூப் ஹக்கீம்
TM
பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூதை அவரது பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு நானோ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ கூறவில்லை என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'கொழும்பில் எனது இல்லத்தில் நானும் தவிசாளர் பசீர் சேகுதாவூதினும் மனம் விட்டுக் கலந்துரையாடினோம். அப்போது தனது பிரதியமைச்சர் பதவியை இராஜனாமாச் செய்யப்போவதாக அவர் என்னிடம் கூறினார்.
உடனடியாக அவ்வாறு செய்ய வேண்டாம் என நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன். இது கூட்டுப்பொறுப்பாகும். கூட்டாக சேர்ந்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும் எனவும் நான் கூறினேன்' என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
'எனினும் பின்னர் அவர் தனது இராஜினாமாக் கடிதத்தை அனுப்பிவைத்திருந்தார். அவரை ஒருபோதும் பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு நானோ, கட்சியோ கூறவில்லை. கட்சி அவ்வாறு எந்த முடிவையும் எடுக்கவில்லை' எனவும் அவர் கூறினார்.
Post a Comment