Header Ads



துருக்கி மீது ஈரான் ஷிஆக்கள் எச்சரிக்கை



அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் துருக்கி பிரதமர் ரிசப் தய்யப் எர் டோகன் ஆகியோர் அதிகரித்து வரும் சிரிய நாட்டு அகதிகளுக்கு உதவுவதற்கு இணக்கம் கண்டுள்ளனர். தொலைபேசியூடான உரையாடலின் போதே இருவரும் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர்.

சிரியாவின் மிகப்பெ ரிய எல்லையைக் கொண்ட அயல் நாடான துருக்கியில் ஆயிரக்கணக்கான சிரிய அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் அண்மைக்காலமாக அலப்போவில் தொடரும் போதல்களால் அங்கிருந்து தப்பி பலர் துருக்கியில் தஞ்சம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் துருக்கி அரசு சிறிய கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதாக சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் சிரியாவின் நெருங்கிய நட்பு நாடான ஈரான், துருக்கிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா மீது இராணுவ தலையீடு செய்யக்கூடாது என துருக்கியை சிரியா எச்சரித்துள்ளது.

'சிரியா எல்லைக்குள் தாக்குதல்கள் இடம்பெற்றால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் ஈரான்- சிரியாவுக்கு இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கையை செயற்படுத்த வேண்டிவரும்" என்று ஈரான் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைச் செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இதில் அமெரிக்காவும், துருக்கியும் இணைந்து வடக்கு சிரியாவில் ஆயுத கும்பல்களுக்கான பாதுகாப்பு தளம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும் படுகொலை முயற்சியைத் தடுக்க தேவைப்பட்டால் இராணுவத்தை பயன்படுத்த தயாராக இருப்பதாக துருக்கி கூறியுள்ளது.

2 comments:

  1. ஷீயாக்களின் உண்மையான கொடூர முகம் முஸ்லிம் உலகிற்கு தென் படுகின்ற ஒரு சந்தர்ப்பம்.
    இவர்கள் முஸ்லிம்களுக்காக நல்லது செய்வார்கள் என்று இன்னுமுமா சிலர் நம்புகின்றார்கள்???

    சிரியாவில் ஈரானிய கூலிப் படைகளும், ஹிஸ்புல்லாக்களும் முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதை ஊக்குவிக்கும் ஈரானின் ஷீயாக்கள், முஸ்லிம்களுக்கு துருக்கி உதவுவதனை பொறுக்க மாட்டாமல் குமுறுகின்றார்கள்.

    ReplyDelete
  2. Elloorum musleemkal thaan ithil idupaadu paddullavarkal.
    Iranian Qaafir alla.
    Appadi enraal Qaafirin Naaddil emakku enna velai such ad UK and other countries.
    Paranthu sinthikkavum
    Army yai konra pulikkuk kooda jananaayakaththil viduthalai enraal
    Shia vai patti een oru kaalppunarvu

    ReplyDelete

Powered by Blogger.