தலிபான்கள் இளைஞர்களை மதத்தின் பெயரால வளைத்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகின்றனர்
தலிபான் தலைவர் முல்லா உமர், பாகிஸ்தானில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் அங்கு இல்லை என்றும், வெளிநாட்டில்தான் அவர் வசித்து வருகிறார் என்றும் பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக கூறியது. ஆனால், தற்போது அது பொய் என்று அமெரிக்க ராணுவ தளபதி அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவம் மற்றும் நேட்டோ படைகளின் தளபதியான ஜான் ஆலென் இதுகுறித்து கூறியதாவது,
முல்லா உமர் பாகிஸ்தானில்தான் தன்னுடைய பல கமாண்டர்களுடன் உள்ளார். மிக பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு அவர்கள், அப்பாவி இளைஞர்களை பணத்தாசை காட்டியும், மதத்தின் பெயராலும், வளைத்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகின்றனர். ஆனால், அமெரிக்க ராணுவத்தின் தீவிர நடவடிக்கையால் ஆப்கானிஸ்தானில் அவர்கள் ஆதிக்கம் பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது. மக்கள் வசிக்கும் இடங்களில் அவர்களின் ஆதிக்கம் எதுவும் இல்லை.
முல்லா உமருக்கு வந்து கொண்டிருந்த நன்கொடைகள் நின்று விட்டன. போதை மருந்து கடத்தல் மூலம் சம்பாதிப்பதும் தடுக்கப்பட்டுவிட்டது. ஆப்கானிஸ்தானில் போதை செடிகள் பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், நேட்டோ படைகள் மற்றும் அந்நாட்டு அரசுதான் என்றார்.
தலிபான்கள் என்ற இயக்கத்துக்கு புத்துயிர் ஊட்டுவதே அமெரிக்காவின் அடாவடித் தாக்குதல்கள்தான்.
ReplyDelete