இலங்கை கிரிக்கெட்ட வீரர்களை தாக்கியவர் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் சம்பவம்
2009 ம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி பாகிஸ்தானின் பஞ்சாப்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொதுமக்கள் கடந்து செல்லும் பாதையில் சிலர் பயணம் செய்வதாக வந்த தகவலை அடுத்து சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று காஜி காட் பாலம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது பயணிகள் பஸ் ஒன்றில் இருந்து தப்பி ஓட முயற்சித்த ஒருவர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் கொல்லப்பட்டவர் அப்துல் காஃபர் கியாஸ்ரனி என்ற ஷெய்ஃபுலா என்பது தெரியவந்துள்ளது.
அவர்டம் இருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் உடைமைகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இவர் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்குதலில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த இவர், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்பதும், தற்போது முல்டன் பகுதியில் தாக்குதல் ஒன்றை நடத்த சென்று கொண்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Post a Comment