அமைச்சர் றிசாத் பதியுதீன் சிறையில் அடைக்கப்படுவாரா...?
மன்னார் விவகாரம் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனை நாளை திங்கட்கிழமை, 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் நிலையில் அவர் சிறையில் அடைக்கப்டுவாரா என கேள்விகள் மேலோங்கியுள்ளன.
மன்னார் உப்புக்குள முஸ்லிம்கள் அமைதியாக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மன்னார் நீதிவானின் உத்தரவையடுத்து வன்முறையாக மாறியது. இதையடுத்து உரிமைக்காக போராடிய அப்பாவி முஸ்லிம்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரின் நெருக்குவாரங்களையடுத்து மன்னார் பிரதேச முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதிலும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியிலேயே அமைச்சர் றிசாத் பதியுதீன் நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். மன்னார் நீதிவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதிமன்றங்களும் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளன.
மன்னார் உப்புக்குள முஸ்லிம் மீனவர் விவகாரம் தொடர்பில் இரகசிய பொலிஸார் மன்னார் நீதிவானிடமும், அமைச்சர் றிசாத் பதியுதீனிடமும் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணை முடிவுகளும் நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மன்னார் நீதிமன்றம் தாக்கப்பட்ட விவகாரம் மற்றும் மன்னார் நீதிபதியாகிய தனக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்களுடன் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நேரடி சம்பந்தம் இருப்பதாக மன்னார் நீதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
இருந்தபோதும் தான் குற்றமற்றவர் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில் நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் சிறையில் அடைக்கப்படுவாரா..? அவர் தொடர்பில் நீதிபதி என்ன தீர்ப்பு சொல்லப்போகிறார்..?? என்ற கேள்விகள் மேலோங்கியுள்ளன.
சிறையில அடைக்கப்படுவார், ஆனால் அடைக்கப்படமாட்டார்.
ReplyDeleteஆனாலும் அரசியல் கைதியாக அரசாங்கச் சிறையில் விலங்கிடப்படுவார்.