Header Ads



வன்னி தேர்தல் மாவட்ட ஆசனங்கள் ஐந்தாகியது - முஸ்லிம்களுக்கு பாதிப்பு வரலாம்

நாடாளுமன்றத்தில் வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான ஆசனங்களின் எண்ணிக்கை ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது.  அதேவேளை மொனராகல மாவட்டத்துக்கான ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
தேர்தல் திணைக்களம், வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டு தோறும் நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீட்டை மேற்கொண்டு வருகிறது.
 
2011ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அடுத்தே, ஒரு ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.
 
2009இல் வன்னி தேர்தல் மாவட்டதில், 270,701 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.  2010இல் இந்த எண்ணிக்கை 236,449 ஆக குறைவடைந்தது.
2011ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் 221,409 வாக்களர்களே பதிவு செய்யப்பட்டுள்ளதால், வன்னித் தேர்தல் மாவட்டத்துக்கான ஆசன ஒதுக்கீடு ஆறில் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது.  இங்கு குறைக்கப்பட்ட ஒரு ஆசனம் மொனராகல மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை வன்னி தேர்தல் மாவட்டத்தில் தற்போது 3 முஸ்லிம் நாடாளுமன்ற ஆசனங்கள் உண்டு. எதிர்வரும் தேர்தல்களில் இந்த ஆசன எண்ணிக்கை குறைவடையலாம். தேர்தல் இடாப்புகளில் முஸ்லிம்கள் உரியமுறையில் பதிவுசெய்து கொள்வதன் மூலமே நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கையை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.