நான் சாகசம் நிகழ்த்தும் சர்க்கஸ்காரன் - ரவூப் ஹக்கீம்
செய்தியும், படமும் - டாக்டர் ஹபீஸ்
அரச சேவைகளுக்கு ஆட்களை சேர்ப்பதிலும், பதவி உயர்வகளை வழங்குவதிலும், இலங்கை நிர்வாக சேவைக்கு நியமனங்கள் வழங்குவதிலும், சுங்கத் திணைக்களம், இறைவரித் திணைக்களம் போன்றவற்றில் நியமனங்கள் வழங்குவதிலும், திறமை,மூப்பு அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்குவதிலும் இன்னோரன்ன ஏனைய பதவிகள் சம்மந்தப்பட்ட விடயங்களிலும் முஸ்லிம்களுக்கு உரிய இடம் வழங்கப்பட வில்லை. இவை பற்றி அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் எடுத்துக் கூறவுள்ளேன்.
இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
'கிண்ணியா விஷன்' கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (3) முற்பகல் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உடனான முக்கிய கலந்துரையாடலொன்றின் போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைத் கூறினார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் முஸ்லிம், சிங்கள வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இக்கலந்துரையாடலில் பங்கு பற்றினர். தேர்தலில் போட்டியிடும் ஹஸன் மௌலவி (அஸ்ஹரி) தொடக்க உரையை ஆற்றினார்.
அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அதன் ஆட்சியை தீர்மானிக்கும் கட்சியாக விளங்கும் முஸ்லிம் காங்கிரஸ் காலப்போக்கில் இந்த மாகாண சபையின் ஆட்சியையே கைப்பற்றக் கூடிய தனிப்பெரும் கட்சியாக உருவாகும். 1988 ஆம் ஆண்டு நடந்த இணைந்த வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 17 ஆசனங்களை பெற்ற எமது கட்சிக்கு அது பெரிய காரியமல்ல.
ஆனால் தற்போதைய கள நிலவரங்களின் யதார்த்தம் அத்தகைய எண்ணிக்கை ஆசனங்களை பெறுவது சாத்தியமில்லாத போதும் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமான ஆசனங்களை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அன்றிலிருந்து இன்று வரை கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வாக்குப் பலம் அதிகரித்துச் செல்லும் அதேவேளையில், தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஏனைய முஸ்லிம் கட்சிகள் அரசாங்கக் கட்சியியை கொழுகொம்பாகக் கொண்டு, சுற்றிப்படர்ந்து, முதுகில் சவாரி செய்து செய்து வாக்குகளைத் தேடவேண்டிய மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தாங்கள் ஆட்சிக்கதிரைகளில் ஓய்யாரமாக அமர்ந்து பவுசு அனுபவிக்கலாம் என அவர்கள் கனவு கண்டுள்ளனர். தங்களது பலவீனங்களை மறைப்பதற்காக அவர்கள் பேரினவாதக் கட்சிகளின் பின்னால் ஒழிந்து கொண்டிருக்கின்றார்கள். சரணாகதி அரசியல் என்பது அவர்களுக்கு கைவந்த கலையாகும். அவர்கள் அரசாங்க கட்சியில் ஒட்டுண்ணிகளாக இருக்கின்றார்கள்.
நான் சாகசம் நிகழ்த்தும் சர்க்கஸ்காரன் மெல்லிய நூலின் மேல் நடப்பது போல மிகக் கஷ்டமான காரியத்தில் இறங்கியிருக்கிறேன். எனது நியாயமான போராட்டத்தில் உச்சகட்டப் பொறுமையைக் கையாண்டு வருகின்றேன். முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம்களின் மனச்சாட்சியாகும். எந்த சந்தரப்பத்திலும் கட்சியை அடகு வைப்பதற்கு நாங்கள் தயாரில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது அரசாங்கத்தினருக்கு சிம்மசொப்பனமாக இருக்கின்றது. ஏன் தனித்துப் போட்டியிட விட்டோம் என கைசேதப்படுகின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்ற முடிவு கட்சியின் ஆதரவுத் தளத்தை மேலும் அதிகரித்துள்ளது. வெற்றிலை வேண்டாம், எங்களுக்கு மரத்தை தாருங்கள் என்றுதான் கட்சிப்போராளிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அது கைகூடி விட்டது. இந்த முடிவை கிழக்கில் முஸ்லிம்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள்.
பேரினவாதக் கட்சிகளிடம் யாசகம் செய்து ஆசனம் கேட்க வேண்டிய அவசியம் எங்களது தனிப்பெரும் கட்சிக்கு இல்லை.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களை வென்று எங்களது பேரம்பேசும் சக்தியின் பிரயோக வலுவை அதிகரிக்க இருக்கின்றோம்.
முஸ்லிம் காங்கிரஸின் குட்டையில்தான் UNP யும் மீன் பிடிக்க எத்தனிக்கின்றது. ஆனால் அது சரிப்பட்டு வராது.
ஏங்கள் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. கழக்கு மாகாண சபையில் எங்கள் உறுப்பினர்களுக்கு உரிய அந்தஸ்து,அதிகாரங்கள் என்பன வழங்கப்படவில்லை.
உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டம், நாடு நகர அபிவிருத்தி சட்டம் என்பவற்றை எங்களை கலந்தாலோசிக்காமலே கொண்டு வந்து சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்க முயற்சிக்கப்பட்டது.
அரச சேவைகளுக்கு ஆட்களை சேர்ப்பதிலும், பதவி உயர்வகளை வழங்குவதிலும், இலங்கை நிர்வாக சேவைக்கு நியமனங்கள் வழங்குவதிலும், சுங்கத் திணைக்களம், இறைவரித் திணைக்களம் போன்றவற்றில் நியமனங்கள் வழங்குவதிலும், திறமை,மூப்பு அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்குவதிலும் இன்னோரன்ன ஏனைய பதவிகள் சம்மந்தப்பட்ட விடயங்களிலும் முஸ்லிம்களுக்கு உரிய இடம் வழங்கப்பட வில்லை. இவை பற்றி அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் எடுத்துக் கூறவுள்ளேன் என்றார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் சிங்கள பிரதேசங்களிலும் ஆதரவு அதிகரத்து வருகின்றது. பௌத்த நிக்காய ஒன்றின் பிரதான தேரர் ஒருவரும் அவரது சீடரும் எங்களது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்குபற்றி வருகின்றனர். சிங்கள பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் அணிகளும் செயற்படத் தொடங்கியுள்ளன.
இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
நீங்கள் நாங்கள் என்னதான் மெல்லிய நூலில் நடந்து சாகசம் செய்தாலும் மரத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் குள்ளநரி கும்பல் மஹிந்த மாத்தையாவின் எலும்புதுண்டைக்கண்டு அடிக்கும் பல்டி சாகசத்தின் முன்னாள் எடுபடாது.
ReplyDeleteungal saagasathalthan marhoom ulagai vittu ponaar. kilakkil muslimkal MP aaga varuvathu athisayam illai.aanal mulim congress aarampikkapatta kaalam thottu inruvarai naangal oru mp yai thanthom neengal engalukku enna seitheergal. maganaa sabai ilakshan mudintha piragu ungal members nalla vilaikku povargal. athan pin nenngal arasankathitku vaal pidippeergal
ReplyDeletekatturai matrum vimarsenengelil eluththuppilaihel athihem,,, thayevu saithu thiruththikkollungel,,, pz
ReplyDeleteகொள்கை எல்லாம் தலைவா,பதவி மற்றும் போதும் தானே,முஸ்லிம்களுக்கு இன்று என்ன தேவை ..... அரபு வசந்தம் என்று கூறி இளைஞர்களை சிறையில் தள்ளிவிட வேண்டாம்,அரபு வசந்தம் அரபிய தேசத்தில் உருவாகின்றது.இலங்கையானது சிங்கள தேசம் என்பதை மற்நத விடாமல் ஆவேசமான அறிக்கைகளை கட்டுப்படுத்துங்கள்,பேப்பர்களுக்கும்,நெட்களுக்கும் நல்லம்,நெஞ வாழ்வுக்கு தலைவா உங்களது பேச்சு வெறும் பூச்சுதான்......காலத்திற்கு ஏற்ப பேசுவதில் உங்களை எவரால் விஞ்ச முடியும்,அன்று ரனில் மஹத்தயா.இன்று மஹிந்த மஹத்தயா..நாளை சம்பந்தன் மஹத்தயா எல்லாரும் மஹத்-தை-யா தானே..புரிந்து கொள்ளுங்கள் தலைவா ,இன்று கிழக்கில் தனித்து நாளை மீண்டும் மஹிந்தவுடனாமே..தேவையா இந்த நிலை....திருந்துங்கள் இல்லாவிட்டால் திருந்த சொல்பவர்களின்சொல்லை கேளுங்கள்
ReplyDelete