அமைச்சர் றிசாத் பதியுதீனுக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகோள்..!
நாளை திங்கட்கிழமை அமைச்சர் றிசாத் பதியுதீன் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள நிலையில் அவருக்காக பிரார்த்திக்குமாறு மன்னார் ஜம்மியத்துல் உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எமது இணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புலம்பெயர்ந்த புலி ஆதரவு சக்திகளின் பண பலத்தில், உள்நாட்டு சக்திகள் சில அமைச்சர் றிசாத் பதியுதீனின் மக்கள் பணிக்கு இடையூறு விளைவிக்க உறுதி பூண்டுள்ளன. அமைச்சரை அரசியலிலிருந்து ஒதுங்கச் செய்வதன் மூலம் வடக்கு முஸ்லிம்களுக்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் அவருடைய சேவை கிடைக்காமல் செய்வதே இதன் நோக்கமாகும்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது எந்தவித குற்றசாட்டும் இதுவரை நிரூபிக்கப்படாத நிலையில் அவரை குற்றவாளியாக நோக்கும் சில தமிழ் ஊடகங்கள் அமைச்சருக்கு எதிராக அப்பட்டமான பொய்களை எழுதி வருகின்றன. தமிழ் - முஸ்லிம் உறவுக்கு பங்கம் ஏற்படுத்துவதும் இந்த சக்திகளின் நோக்கமாகும். இவ்வாறான சக்திகள் இனவாதம் கக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களுக்காகவும், சில மத சக்திகளுக்காகவும் தொடர்ந்து செயற்பட்டுவருவதுடன் அமைச்ர் றிசாத் பதியுதீனை அரசியலிலிருந்து விலக்கிவைக்கவும் முற்பட்டுள்ளன.
வடமகாண முஸ்லிம்களுக்கும், இலங்கை முஸ்லிம்களுக்காகவும் ஓய்வின்றி குரல் கொடுக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனை இலங்கை முஸ்லிம் சமூகம் தமது பெறுமதிமிக்க சொத்தாகவே கருதும் நிலையில், ஏனைய தீய சக்திகளிடமிருந்து அமைச்ரை பாதுகாக்கும் உயர் பொறுப்பு சமாதனத்தை நேசிக்கும் அனைத்து பிரிவினரையும் சார்ந்துள்ளது.
மன்னார் - உப்புக்குள முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்ததற்காக நாளை திங்கட்கிழமை நீதிமன்றம் செல்லவிருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்காக நாம் பிரார்த்திப்பதுடன், தீய சக்திகளிடமிருந்து அவர் விடுதலை பெறவும் அவருக்காக நாம் துணை நிற்க வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் மன்னார் கிளை வேண்டுகோள் விடுக்கிறது.
அதேவேளை றிசாத் பதியுதீன் தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் அத்தனை சதிகளையும் தகர்த்துவிட்டு வடமாகாண முஸ்லிம்களுக்காகவும், இலங்கை முஸ்லிம்களுக்காகவும் தொடர்ந்து பாடுபட வேண்டுமெனவும் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
நாங்கல் துவா கெட்கிரொம்.
ReplyDeleteஅனால், நம்ம ஆள், ரவூப் ஹக்கீம் தான் நீதி அமைச்சர் ஆக இருக்கிராரே?
முச்லிம்கல்ட பிரச்சினக்கு அவரு உதவ மாட்டாரா?
I won't be surprised, if Hakeem also behind these forces who try to oust Rishad. After all politics is a dirty game, they had to kill each other to survive.
ReplyDeleteஅராங்கமும் நீதி அமைச்சும் என்ன செய்கின்றன?
ReplyDeleteதேர்தல்கள் நெருங்கும் நேரத்தில், ஆளும்கூட்டனியின் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றம் எடுக்கும் எந்தத் தீர்மானமும்
ஆளும் கட்சியின் வாக்குகளைப் பாதிக்கும் சாத்தியமுள்ளது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்காக இந்தச் சந்தர்ப்பத்தில் துஆ கேட்கும் அதே வேளை, முஸ்லிம்களுக்காக உண்மையாகவே பாடுபடும் நபர்களுக்காக பொதுவாக துஆ கேட்பதனை வழமையாக்கிக் கொள்வது நல்லது.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.....
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ், மகிழ்ச்சியான செய்தி, அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், 5 லட்சம் ரூபா ரொக்கப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அநீதிபதியின் அக்கிரமம் காரணமாக அநியாயமாக 5 லட்சம் ரூபா இழக்கப் பட்டுள்ளது.
ReplyDeleteDon't worry sir, we are praying for you.
ReplyDelete