அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் முஸ்லிம் நாடுகள்
அமெரிக்காவின் ஆயுத விற்பனை மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலக ஆயுத சந்தைக்கு அமெரிக்கா அதிக ஆயுத விற்பனை செய்த ஆண்டாகக் கடந்த ஆண்டு பதிவானது. அமெரிக்க ஆயுத விற்பனை தொடர்பில் அந்நாட்டு கொங்கிரஸ் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்கா கடந்த ஆண்டில் 66.3 பில்லியன் டொலருக்கு ஆயுதம் விற்றுள்ளது. இது அமெரிக்கா 2010 இல் விற்ற ஆயுதங்களின் பெறுமதியை ஒப்பிடும் போது மும்மடங்காகும். 2010 இல் அமெரிக்கா 21.4 பில்லியன் டொலருக்கு உலகுக்கு ஆயுதங்களை விற்றுள்ளது.
உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக அண்மைய ஆண்டுகளாக சர்வதேச ஆயுத விற்பனையில் பாதிப்பு செலுத்தியுள்ளது. ஆனால் ஈரான் தொடர்பாக பெர்சிய வளைகுடா நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலை ஆயுத விற்பனை அதிகரிக்க காரணமாகியுள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கியுள்ளன. மேற்படி வளைகுடா நாடுகள் ஈரானின் எல்லையை ஒட்டி அமையாவிட்டாலும் இந்த நாடுகள் அதிக பெறுமதி வாய்ந்த யுத்த விமானங்கள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறையை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளன.
அமெரிக்கா கடந்த ஆண்டில் சவூதி அரேபியாவுக்கு மாத்திரம் 33.4 பில்லியன் டொலருக்கு ஆயுதம் விற்றுள்ளது. இது ஒரு நாட்டுக்கு மாத்திரம் அமெரிக்கா ஓர் ஆண்டில் விற்ற அதிக ஆயுதங்கள் ஆகும்.
சவூதி கடந்த ஆண்டில் 85 எப் -15 ரக யுத்த விமானங்கள், பல்வேறு ஏவுகணைகள், நவீன ரக ஹெலிகொப் டர்கள் என ஆயுதங்களை கொள்வனவு செய்ய அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தது. அதேபோன்று ஐக்கிய அரபு இராச்சியம் ராடார்கள் உட்பட வான்பாதுகாப்பு வலையம், ஏவுகணை எதிர்ப்பு முறை ஆகியவற்றை அமைக்க அமெரிக்காவுடன் 3.49 பில்லியன் டொலருக்கு ஒப்பந்தம் செய்தது.
தவிர, சினூக் ரக ஹெலிகொப்டர்கள் 16ஐ வாங்க 939 மில்லியன் டொலருக்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தது. ஓமான் அமெரிக்காவிடம் இருந்து எப்- 16 ரக யுத்த விமானங்கள் 18 ஐ வாங்குவதற்கு 1.4 பில்லியன் டொலருக்கு ஒப்பந்தம் செய்துகொண்டது. tn
நிச்சயமாக ஜியோனிச பிடியிலிருந்து பலஸ்தீனை விடுவிப்பதற்காக என்று இருக்க முடியாது.
ReplyDeleteARABIYARHAL AAYUDAM WANGI ANNA PAYAN? USE PANNAVUM AMERICA VARANUMEME? WASTE OF MONEY......
ReplyDeleteஅமெரிக்காவின் பஞ்சத்தைப் பயன்படுத்தி ஆயுதம் வாங்குவதில் தப்பில்லை. வாங்கும் ஆயுதங்களைக் கொண்டு உள்நாட்டுத் தயாரிப்பில் கவனம் செலுத்தி, எதிரிகள் அதிரும் பலத்தைப் பெறுவது தான் இலக்காக இருந்தால் நாம் மதிக்கிறோம். என்னவோ ஏதோ இஸ்லாமிய சமூகத்தின் கடைசி எதிர்பார்ப்பு, அல்லாஹ்வின் தூதரின் முன்னறிவிப்பு, எழுச்சி அங்கிருந்து தானே வரவேண்டும்! பஹ்ரைனுக்குச் சென்ற சவுதி அராபிய தளபதி சொன்னது போல் nato வுக்கு அடுத்தபடியாக ஆயுத பலம் வைத்திருந்து மட்டும் போதாது. உளதைரியம் வேண்டும். உங்களால் முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற வேண்டும். என்ன பிழைகள் விட்டாலும், அந்நியர்களை நண்பர்களாக்கிக் கொண்டிருந்தாலும் எதிர் பார்ப்பதென்றால் உங்களிடம் தான் எதிர் பார்க்கலாம். உங்களுக்குத் தான் முஸ்லிம் சமூகங்களில் அதிக செல்வத்தை இறைவன் தந்திருக்கிறான். யூதக் கொள்கை கொண்ட ஈரானிடம் நாங்கள் எதிர் பார்க்க முடியாதே. ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும்,அமெரிக்க-மேட்கத்தயருக்கும் பயப்படும் நீங்கள் அன்றைய அரபுக்கள் போல் அல்லாஹ்வுக்கு பயப்பட்டுப் பாருங்கள். முஸ்லிம்கள் எல்லோரும் பாதுகாப்பு பெறுவார்கள். தற்பொழுது நடந்து வரும் மாற்றங்களை வரவேற்கிறோம். உலகயே ஓட்டும் எண்ணெய் பலம் உங்களிடம் தான். உலகை வாங்கும் பணமும் உள்ளது, வீழ்ச்சி அடைந்துள்ள அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் நீங்கள் அவர்களின் வங்கிகளில் வைப்பிலிடும் பணத்தில் தான் வாழ்ந்து, முஸ்லிம்களின் குடியையும் கெடுக்கிறார்கள். ரசூலுல்லாஹ் கூறிய உலக ஆசை-மரணத்தை பற்றிய வெறுப்பு உங்களையும் காக்கவில்லை, ஏனைய முஸ்லிம்களையும் பாதிக்கிறது. அதற்காக எம்மவர்களிடம் அது இல்லை என்று சொல்லவில்லை.. 150 கோடியாக இருந்து கொண்டு அடி பட்டு, உதை பட்டு, கொல்லப் பட்டு, கற்பழிக்கப்பட்டு, சீரழிந்து, கேட்கப் பார்க்க யாரும் இல்லை.. யா அல்லாஹ் எங்களிடம் இருந்து இந்த வஹ்ளை(உலக ஆசை-மரணத்தை பற்றிய வெறுப்பு) நீக்கி விடுவாயாக.
ReplyDelete