உணவில் இஞ்சி சேர்ப்பது நீரிழிவை கட்டுப்படுத்தும் - ஆய்வில் தகவல்
உணவில் இஞ்சி சேர்த்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இஞ்சி மிக சிறந்த மருத்துவ பொருள். இந்தியாவில் இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை சமையலில் சேர்த்து சாப்பிடுகின்றனர். இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீரமைக்கப்பட்டு நீரிழிவு நோய் வராமல் கட்டுப்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் இஞ்சியின் பயன்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை போதுமான அளவு மட்டும் இன்சுலின் சுரக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, இஞ்சி சாப்பிட்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர் பாசில் கூறியுள்ளார்.
Post a Comment