Header Ads



மேடையில் அல்குர்ஆன் ஓதி ஆச்சரியப்படுத்திய சஜித் பிரேமதாசா (படம் இணைப்பு)

 
எம்.டி.எம்.பர்ஹான்
 
சம்மாந்துறையில் இடம் பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அரபு மொழில் குர்ஆன் வசனங்களை  ஓதி சஜித் பிரேமதாசா முஸ்லிம்களை ஆச்சரியப்படவைத்தார்.
 
2012 .8 .30 அன்று சம்மாந்துறை அசரப் வட்டயில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு அசத்தினார்.
 
சஜித் பிரேமதாசா அங்கு கூறியது,
 
எனக்கு ஒரு பொழுது போக்கு உள்ளது அதுதான் யானைகளை படம் பிடிப்பது ஒருநாள் போத்துவிலில் யானை கூட்டத்தை படம் பிடிக்க சென்ற போது யானை கூடம் என்னை துரதிஷ்டவசமாக விரட்ட ஆரம்பித்தது. அந்த நேரம் நான் குர்ஆன்  வசனம் ஒன்றை ஓதி தப்பித்துக் கொண்டேன்.
 
ஆம், அதுதான் அலம்தர கைப பாஹல றப்புக்க பிகாஸ் ஹாபில் பீல் என அவர் ஓத துவங்கினார்.
 
(ஆம் அவர் அரபியில்  தான் ஓதினார்.  இந்த சூரா யானை கூட்டம் பற்றி குறிப்பிடும் ஒரு அத்தியாயம் ஆகும் என்பது இங்கு குறிப்பிடதக்க  விடயம்)
 
இதனை அவர் ஓதியதும் மக்கள் பெரும் கரகோசத்தை எழுப்பினர்.
 
மேலும் அவர் நான் முஸ்லிம்களை மதிப்பவன் எனது தந்தையும் அவ்வாறுதான் எனக்கு கற்றுத்தந்தார் நான் சின்ன பிரேமதாசா ஆகயால் அந்த பெரிய பிரேமாதசவின் வழியை நான் கடை பிடிக்கிறேன். எனது தந்தை முகம்மது (ஸல்) அவர்களின் போதனைகளையும் எனக்கு கற்று தந்துள்ளார் எனவும் குறிப்பிட்ட அவர் நான் மஸ்ஜித்துகளுக்கு புது பொலிவு எனும் வேலை திட்டத்தின் மூலம் பள்ளிவாசலுக்கு உதவி வருகிறேன் என்றார்.

 

7 comments:

  1. வெல்டன் குட்டி பிரேமதாச , அப்படியே இஸ்லாத்திற்கும் வந்திடுங்களேன் மரணத்தின் பின்னா் சுவா்க்கத்திற்கும் நிரந்தரமாய் சென்று வாழலாம்.

    ReplyDelete
  2. உயிர் பிரியும் பொழுது அல்லாஹ் தான் காப்பாற்றுகிறான் என்று உனக்கு விளங்குகிறது .அப்படியானால் பதவிக்காக தானே இஸ்லாமிய மார்க்கத்தை புறக்கனிக்கிறாய்உன்னை எப்படி நம்புவது.சந்தற்பவாதியை விட எதிரியே சிறந்தவன்

    ReplyDelete
  3. Eppadi ellaam nadikkiranga. In Jaffna meeting this actor will say he escaped because he recited a verse from Bagavath Geethai

    ReplyDelete
  4. இப்பவும் இதெற்கெல்லாம் கை தட்டும் முஸ்லிம்கள் உண்டு அப்ப பெரும்பாண்மை கட்சியிலும் சிலர் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுவர். பயம் வேண்டாம் சஜித். முஸ்லிம்கள் உண்மையான இஸ்லாத்தைத்தான் எதிர்ப்பார்கள்.,போலிகளுக்கு இவர்கள் சப்போட் கண்ணுவார்கள்.

    ReplyDelete
  5. If you believe The Quranic Sura protected you Then why don't you believe the Almighty Allah? Is it (believing Quran)for politics?

    ReplyDelete
  6. During his speech in Mawanella,he stated the same Aya towards the public... so
    Dear friends, politics is an art...beware of it

    ReplyDelete
  7. தூ!.. பாழாய்ப்போன அரசியலுக்காய் என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கின்றது?..

    ReplyDelete

Powered by Blogger.