வடக்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாக குருநாகலில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
குருநாகலிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
வடக்கில் முஸ்லிம்களை வெளியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது புனையப்பட்டுள்ள போலி கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிகழமை குருநாகல் தெல்லியகொன்ன பிரதேசத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
தெல்லியாகொன்ன முஸ்லிம் நலன் புரி அமைப்பு விடுத்திருந்த அழைப்பின் பேரில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பமான பேரணி கண்டி வீதி வழியாக சென்று பாடசாலை முற்சந்தியில் தமது பேரணியினை நிறைவு செய்து கொண்டன.
இந்த பேரணியால் குருநாகல்-கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதுன், பேரணியில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை முழங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடக்கில் வாழந்த முஸ்லிம்களை மீண்டும் அவர்களது தாயக மண்ணில் மீள்குடியேற்று, அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போலி பிரசாரங்களை நிறுத்து, மீண்டும் புலிகளின் மறு பிறப்பை அரசாங்கமே தடை செய், ஜனாதிபதியே முஸ்லிம்களை பார் போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தி நின்றனர்.
இறுதியாக ஜனாதிபதிக்கு தமது கோறிக்கைகளை அடங்கிய மகஜரொன்றை அனுப்புவதென்றும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆரப்பாட்ட பேரணியில் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அப்துல் சத்தார், குருநாகல் பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.அமான்,ஆகியோரும் கலந்து கொண்டதை காணமுடிந்தது.
Good perfoments.thanks a lot
ReplyDeleteஅன்பார்ந்த குருநாகல் வாழ் முஸ்லிம்களே,வட புல முஸ்லிம்களுக்காக நிஞ்கள் செய்த இந்த தியாகம்,பெறுமதியானது இம்மக்களுக்காக துஆ கேளுங்கள்,முஸ்லிம் அரசியல் தலைமைகளுககும் சேர்த்து
ReplyDelete