குவைத் பைதுஸ் ஸக்காத் நிறுவன உதவியில் வறிய குடும்பங்களுக்கு பராமரிப்பு நிதி (படம்)
ஹப்றத்
குவைத் நாட்டின் பைதுஸ் ஸக்காத் நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஜமாஆத் அன்ஸாரி சுன்னதில் முஹம்மதியா ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தந்தையினை இழந்த குடும்பங்களுக்கான பராமரிப்பு நிதியும் புனித நோன்புப் பெருநாள் உடுப்புக்களும் வழங்கும் நிகழ்வு இன்று (05) சம்மாந்துறை மர்கசுல் தாறுல் ஈமான் கலா பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜமாஆத் அன்ஸாரி சுன்னதில் முஹம்மதியா அமைப்பின் பராமரிப்பு பரிவு பொறுப்பாளர் அஷ;Nஷஹ் எஸ்.செயினுத்தீன் பரீத், மௌலவி ஐ.எல்.எம்.முஸ்தபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த 325 குடும்பங்களுக்கு பராமரிப்பு நிதியும் புனித நோன்புப் பெருநாள் உடுப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டன.
Post a Comment