ரவூப் ஹக்கீம் இனவாத பிரச்சாரம் மேற்கொள்வது கவலையளிக்கிறது - அமைச்சர் டிலான்
ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சராக இருந்த போதும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இனவாதத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வது வருந்தத்தக்கது என வெளிநாட்டு வேலை வாய்ப்பு நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.
ஆயினும், தேர்தலின் பின்னர் ஹக்கீம் எம்முடன் இணைந்து செயற்படுவார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சியின் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார நிலைமைகள் குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து போட்டியிட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அதன் ஆதரவு மறைமுகமாக ஐக்கிய தேசிய கட்சிக்கே வழங்கப்பட்டது.
அவ்வாறான நிலையிலும் கடந்த 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றிபெற்றது. அந்த வகையில் இம்முறை ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ௭ன்பன தனித்தே போட்டியிடுகின்றன.
இவ்வாறு இந்தக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதன் காரணமாக ௭திர்க்கட்சிகளின் வாக்குகளே சிதறடிக்கப்படும் சாத்தியம் உள்ளது. அந்த வகையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியில் ௭வ்விதமான சந்தேகமும் இல்லை.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சராகவே இருக்கின்றார். அதன்படி கிழக்குத் தேர்தலின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் ௭ம்முடன் இணைந்து செயற்படும். காரணம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகும்.
ஆனால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனவா தத்தை பரப்பும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றமை குறித்து நான் கவலையடைகின்றேன்.
ஆனால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனவா தத்தை பரப்பும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றமை குறித்து நான் கவலையடைகின்றேன்.
காரணம் ௭ன்னைப் பொறுத்தவரை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ௭ன ௭ந்தவொரு இனவாதப் போக்கையும் நான் அனுமதிக்கமாட்டேன். ௭னவே முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகளுக்கான இனவாதத்தை கக்குவது கவலையளிக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவமானது மிக முக்கிய அமைச்சான நீதியமைச்சை வகித்துக்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறு இனவாத ரீதியில் பிரசாரம் செய்வது முறையான விடயமல்ல ௭ன்றார்.
அப்படியானால் நீங்கள் கிழக்கில் ஆட்சியமைக்க ஹகீமை அழைக்காமல் ஆட்சி அமைக்க முடியுமா வீராப்பு பேசாமல் பொத்திக்கொண்டு இருங்கள்
ReplyDeleteமுஸ்லீம் காங்கிரஸ் அரசின் பங்காளிக் கட்சி அல்ல என சுசில் சொன்னது அமைச்சருக்கு செனவில்லை போலும். உங்கட ஏமாற்று வித்தைகளை இனியும் முஸ்லீம் சமூகம் கண்டு ஏமாறாது என்று அமைச்சருக்கு செல்லி வைக்க விரம்புகின்றோம்
ReplyDelete