இலங்கையில் இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கமா..?
யு. எச். ஹைதர் அலி
எமது நாட்டில் வாழும் பெரும்பான்மை இனமும் ஏனைய சிறுபான்மை இனங்களும் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை பற்றி தவறான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு இந்த நாட்டில் ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழும் முஸ்லிம்கள் விட்ட தவறுதான் என்ன ? ஏன் எம்மைப்பற்றி இந்த தப்பபிப்பிராயங்களும் எமக் எதிரான காழ்ப்புணர்ச்சிகளும்?.
சர்வதேச ரீதியாக முஸ்லிம்களைப்பற்றி தவறான கட்டுக்கதைகளையும் பிரச்சாரங்களையும் மேற்கத்தேய ஊடகங்கள் மிகச் சூட்சுமமாக மேற் கொண்டு முஸ்லிம் உம்மாவை ஒரு பயங்கரவாத சமூகமாக சர்வதேச ரீதியாக காட்ட முயற்சித்து அவை வெற்றியும் கண்டுவிட்டன. இவற்றுக்காண பின்னனியில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒரு சில முஸ்லிம் நாடுகளுக்கும், இஸ்லாமிய குழுக்களுக்கும், அமைப்புக்களுக்கு ஆயுதங்களை வழங்கி தமது சொந்த இனத்துக்கு ஏதிராகவே போராடச் செய்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கூறுபோட முயற்சித்து வெற்றியும் கண்டுள்ளனர்.
தற்போது இலங்கையில் சிங்கள பெரும்பான்மை இனமும் முஸ்லீம்களும் ஏனைய சிறுபான்மை இனங்களும் ஆண்டாண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்த இந்த சமூகங்கள் இன்று ஏன் முஸ்லிம்களாகிய எம்மைப்பற்றி தவறாக புரிந்து கொண்டு எமக்கு ஏதிரகா செயற்படுகின்றார்கள். நாம் விட்ட தவறு தான் என்ன? ஏன் எம்மைபற்றி தவறாக எண்னுகின்றார்கள் ? என்ற கேள்விகளுக்கு இலங்கையில் உள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் இயக்கங்கள் சர்வதேச மற்றும் உள் நாட்டு முஸ்லிம் அரச சார்பற்ற அமைப்புக்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் புத்தி ஜீவிகள் போன்ற அனைத்துத் தரப்பினரும் ஒன்றினைந்து இதற்கான விடைகாண முயற்சிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
இன்று இலங்கையில் எழுந்துள்ள முஸ்லிம் எதிர்ப்பு அலைக்கு முஸ்லிம்களாகிய எம் மத்தியில் முதலில் விடை காண முயற்சித்தால் மிகச் சாலச்சிறந்ததாகும்.
முஸ்லிம்களாகிய நாம் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை சமூகம் உட்பட ஏனைய சமூகங்களது உணர்வுகளை மதிக்கக் கூடியவர்களாக நாம் வாழ்ந்துள்ளோமா ? அல்லது அவர்களது உணர்வுகள் உள்ளங்கள் புன்பட நாம் நடந்துள்ளோமா ? இவ்வினாக்களை எம் மத்தியில் கேட்டு விடைகான முயற்சிப்போமேயானால்... தற்போழுது இந்த நாட்டில் எழுந்துள்ள இஸ்லாம் எதிர்பு அலைக்கு தீர்வு காணமுடியும்.
அது அல்லாது பிரச்சினை எங்கோ இருக்க நாம் எதனைப்பற்றியோ பேசிக்கொண்டிருக்கிறோம்.
பௌத்த மதகுருமார்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பௌத்த சிங்கள சகோதரர்களுக்கும் ரமழான் மாதத்தில் பள்ளி வாயில்களில் இப்தார் ஏற்பாடு செய்வதனால் மாத்திரம் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.
இந்த நாட்டின் வரலாற்றுப் பின்னனியை நோக்கினால் சிங்கள பௌத்த சமூகம் காலத்துக்கு காலம் முஸ்லிம்களோடு கருத்து முரன்பாடுபட்டு முருகல் நிலைகளை ஏற்படுத்திக்கொண்டாழும் பின்பு பெரும்பான்மையான சிங்கள பௌத்த சமூகமும் முஸ்லிம்களாகிய எம்மோடு ஓன்றினைந்து செயற்படுகின்றார்கள்.
இனவாதமும் இனவாத அரசியலும்
இலங்கையின் பிரபல தளபாட நிறுவனமாகிய டொன் கரோலிஸ் என்பவரின் புதல்வாரன டொன் டேவிட் கிலார்க், தனது வியாபார நலனுக்காக போர்திய அனகாரிக்க தர்மபால என்கின்ற பெயரையும் அனகாரிக்கவையும் நாம் நன்கறிவோம். அனகாரிக்க தர்மபாலவுக்கும் முஸ்லிம்களுக்குமிடையேயான முரண்பாடு வர்த்தகரீதியான போட்டியே. அதனை நாம் இனவாதமாக பார்க்க முடியாது. பெரும்பான்மை சிங்கள மக்கள் கூட தர்மபாளவின் கருததுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் அதனை நிராகரித்தனர். ஆரம்ப காலத்தில் தோன்றிய ஜாதிக விமுக்தி பெரமுன, சிங்ஹல மஹஜன பக்ஷய போன்ற இனவாதத்தைத் துண்டும் கட்சிகளையும் மக்கள் நிராகரிக்கவே செய்தனர். இதில் இருந்து ஓரு உண்மை எமக்கு புலப்படுகிறது பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இனவாதத்தை விரும்புபவர்கள் அல்ல என்று.
தேசியவாதம் என்பது வேறு. இனவாதம் என்பது வேறு. தேசியவாதத்தை இனவாதமாகப் பார்க்கக் கூடாது. ஆசிய நாடுகளில் இனவாதமும் சாதி வேறுபாடுகளும் தேசியவாதத்தைப் படாத பாடுபடுத்தியுள்ளன. இன்று எமது இலங்கை வாழ் முஸ்லீம்கள் தேசியவாதத்தை இனவாதமாக பார்க்க முற்படுகின்றனர்.
சிங்கள இனவாதக் கட்சிகள் செயலிழந்து போகும் தறுனத்தில் 1977ம் ஆண்டு து.சு. ஜயவர்தன என்கின்ற வேட்டியனிந்த முதலாலித்துவ வாதியின் ஆசீர்வாதத்தோடு திட்டமிட்டு தனது சொந்த அரசியல் நலனுக்காக இந்த நாட்டில் சிறுபான்மை கட்சிகள் இன ரீதியாக உருவாக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாலர் காங்ரஸ் போன்றவை.
பிற்காலத்தில் இக்கட்சிகள் அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாவும் மாறின. இவையெல்லாம் சிங்களவர் மத்தியில் பீதியையும் பொறாமையையும் தோற்றுவித்தது. இதனாலேயே சிஹல உறுமய, சிங்ஹலே மாகா சம்மத பூமி புத்ர போன்ற கடசிகள் காளான்களைப் போல தோன்றி இனவாதத்தைக் கக்கி மக்களைத் தூண்டின.
அது இயல்பானதே. முஸ்லிம் தலைவர்கள் என்று கூறிக்கொண்டவர்களின் வீராப்புகள், முன்யோசனையற்ற பிரகடனங்கள், அரசியல் முதிர்ச்சியின்மை போன்றவை அவற்றுக்கு மேலும் எண்ணையூற்றின. முஸ்லிம் காங்ரஸ் தொடக்கம் ஜாதிக ஹெல உறுமய வரை அனைத்து கட்சிகளும் இந்த இன வாதத்தை மையமாக வைத்துத்தான் தங்களது அரசியல் மேடைகளை அலங்கரிக்கவும் தொடங்கின. முஸ்லிம் அரசியல் வாதிகள் கூட தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களுக்கு இன வாத கருத்துக்களால் முஸ்லிம் சமூகத்தை தூண்டி வாக்குப் பெற முயற்சிப்பததையும் நாம் அறிவோம்.
தற்போது முப்பது வருட யுத்தம் முடிவடைந்து அமைதியின் வாசனையை நுகருவதற்கு முன்னர் முஸ்லிம் சிங்கள உறவுகளில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்திருப்பதை நாம் உணருகிறோம்;.
30 வருட யுத்தத்தில் முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும்.
இந்த நாட்டில் இருந்த 30வருட கொடிய யுத்தத்தை வெற்றி கொள்வதில் முஸ்லிம்களது பங்களிப்பு என்ன? வெருமனே 8 & வாழும் முஸ்லிம்கள் 3.500 முஸ்லிம் இரானுவ வீரர்களை இந்த யுத்தத்தில் இழந்து ஏமது தாய் நாட்டிற்காக முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பபை செய்திருக்கிறார்கள். என்பதை இந்த நாட்டு மக்கள் மறந்து விட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றோம்.
உலகில் எந்த ஒரு சமூகமும் அனுபவத்திராத துன்பத்தை இலங்கையில் எமது முஸ்லிம்கள் இந்த யுத்தத்தினால் அனுபவித்தார்கள். சுமார் ஓரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கடந்த 23 வருடகாலமாக தனது சொந்த பூமியை இலந்து அகதி வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கும் துர்ப்பாக்கியம், இந்த சமூகம் அகதி முகாமில் பிறந்து, அகதி முகாமில் வாழ்ந்து, அங்கே படித்து, அங்கே திருமணம் செய்து, அந்த அகதி முகாமிளேயே பிள்ளையும் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கின்ற அவல நிலை. இன்று யுத்தம் முடிந்தும் இவர்கள் தமது சொந்த பூமிக்கு செல்ல முடியாமல் படுகின்ற துன்பங்கள் இன்னோரன்ன.
இந்த நாடு சந்தித்த மூன்று தசாப்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பாக்கிஸ்தானஇ ஈரான்; போன்ற நாடுகள் நேரடியாகவும் மறை முகமாகவும் உதவி செய்து யுத்தத்திற்கு பாரிய பங்களிப்பை இலங்கை அரசிற்கு செய்த உதவியை யாரும் மறந்திருக்க முடியாது.
1994ம் ஆண்டு இலங்கை ஓரு பாதுகாப்பற்ற நாடு என்று கூறி கிரிகட் உலககோப்பபையை இலங்கையில் விளையாட நாடுகள் மறுக்கும் சமையத்தில் பாக்கிஸ்தான் இந்த நாட்டுக்கு தனது கிரிக்கட் அணியை இலங்கைக்கு அனுப்பி, சர்வதேச உலகிற்கு இலங்கை ஓரு பாதுகாப்பான நாடு என்பதை உணர்த்தச் செய்த உதவியை இந்த நாட்டு மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள்.
சவுதி அரேபியா, குவைட், கட்டார், பேன்ற நாடுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய உதவிகளை செய்து வருகிறது. சவுதி அரேபியா வழங்கிய பாரிய வீடமைப்புத் திட்டம், அத்தோடு ஈரான் கோடிக்கணக்காண அமெரிக்க டலர் பெருமதியான உமா ஓய நீர் திட்டம்இசபுகஸ்கந்தை என்னை சுத்திகரிப்புத்திட்ம்இ மற்றும் நீண்டகால கடன்திட்டத்தில் எமது நாட்டிற்கு மசகு எண்ணை வழங்கி உதவுவதையும் யாரும் மறந்திருக்க முடியாது இந்த முஸ்லிம் நாடுகளின் உதவிகளை.
ஜெனிவாவில் எமது நாட்டுக்கு முஸ்லிம் நாடுகள் செய்த உதவிகளை ஒரு போதும் யாரும் மறக்கவும் மாட்டார்கள்.
ஆனால் இப்படி ஏல்லாம் இந்த நாட்டுக்கு முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் ஆதரவாக இருக்கும் போதும் ஏன் இந்த நாட்டு மக்களுக்கு எம்மைப்பற்றிய அச்சம்.? ஏன் எம்மை ஓரு பயங்கரவாதியக நோக்குகிறார்கள்? என் எம்மை ஒரு அடிப்படை வாதிகளாக பார்க்கின்றார்கள்?.
கசப்பான மற்றும் சில உண்மைகளையும் நாம் இங்கு பேசித்தான் ஆக வேண்டும்.
அரசியல் தொடக்கம் பாதாள உலகம் வரை
ஆரம்ப காலகட்டங்களில் இந்த நாட்டில் வியாபாரிகளாக அறிமுகமாகிய முஸ்லீம்கள் வர்தக வானிப துறைகளில் பெயர் பதித்து சிறந்து விளங்கினார்கள் முஸ்லிம் வியாபாரிகள் என்றால் நன் மதிப்பும் மரியாதையும் இருந்தது.
காலப்போக்கில் முஸ்லிம்களது நடத்தையில் பாரிய மாற்றங்கள் அதாவது விரைவாக பணத்தைக் குவிக்கும் ஆசையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடத் தொடங்கினர். இந்த நாட்டில் இடம் பெற்ற மிகப் பெரிய நிதி மோசடி செயல்களில் எமது முஸ்லிம்கள் சமபந்தப்பட்டிருக்கிறார்கள்இ இந்த நாட்டில் இடம் பெற்ற மிகப்பெரிய கொலைச்சம்பவத்தில் முஸ்லிமகளுக்கும் தொடர்பு இருக்கின்றது. மற்றும் கள்ளக் கடத்தல், பாதாள உலகத் தொடர்பு, பாதாள உலகின் முக்கிய நபர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்கள் போதைவஸ்த்து வியாபாரம், போன்றவற்றில் கூடிய ஈடுபாடு....
முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு கௌரவமும் அந்தஸ்தும் முஸ்லிம்கள் மத்தியிலும் அன்னிய சமூகங்கள் மத்தியில் இருந்தன.
ஆனால் இன்று அரசியல் அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் ஒன்றுசேர அவர்களது நடத்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியலைக் கொண்டு நடத்த குண்டர் படைகள், தனது அரசியல் நலன்களுக்காக தனது சமூகத்தையே ஏலம் போடும் அரசியல் கோமாளிகள், இவர்களை எமது சமூகத்தின் தலைமைகலாக ஏண்ணும் காலமெல்லாம் நாம் இந்த நாட்டில் அரசியல் அநாதைகலாக்கப்படுவோம். இது மட்டுமல்லாது ஏனைய சமூகங்கள் எம்மை எதிரியாகவே பார்க்க முற்படும்.
நிலையான தர்மம் தந்த சாபம்
இந்த நாட்டில் அரபு நாடுகிளின் உதவியுடன் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இஸ்லாமிய இயக்கங்களும் இலங்கையில் இன்று ஏற்பட்டிருக்கும் இந்த இஸ்லாம் எதிர்பு அலைக்கு இவர்களும் பொறுப்பாளிகள்.
இந்த நிறுவனங்கள் தெருவுக்கொரு பள்ளி ஓவ்வொரு இயக்கததுக்குச் சார்பான பள்ளி என்று இந்த நாட்டில் அறபு றியால்களை அள்ளி இறைக்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்து பெரும் பான்மையினர் மத்தியில் எம்மைப்பற்றி தப் அபிப்ராயங்கள் ஆரம்பிக்கத் தொடங்கியது.
நாம் இந்த நாட்டிள் உள்ள சட்ட திட்டங்களை அவமதித்து மார்க்கப்பாடசாலைளுக்கு வழங்கிய சட்டங்களை பயன்படுத்தி அறபு றியால்கலால் மார்க்கப் பாடசாலை என்ற பெயரில் பள்ளிகள் கட்ட முற்பட்டதனால் எமைக்கண்டு பெரும்பான்மை சமூகங்கள் அஞ்சத் தொடங்கின.
இந்த இயக்கங்கள் இலங்கையர்களாகிய எம்மை சோமாலியர்களாக எண்ணி எப்பொழுது அரேபிய உளுகியாவை இங்கு கொண்டுவந்து கொடுக்க ஆரம்பித்தார்களோ அன்றில் இருந்து எம்மைப்பற்றி தப் அபிபராயங்கள் ஆரம்பிக்கத் தொடங்கியது.
இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் மாடு அறுப்பதை பெரும் பாவமாக கருதுகிறது. நாம் இவ்விடத்தில் அவர்களது உணர்வுகளை மதிக்காது எமக்கு மாட்டிறைச்சி சாப்பிடுவது கட்டாய மார்ககக்கடமையப்போல என்னி மாடு அறுப்பதையும் சாப்பிடுவதையும் தவராமல் செய்து வருகிறோம். அது மாத்திரமள்ளாது அரேபியரின் உளுகியாவிற்காக எமது நாட்டில் சமூகங்களுக்கு மத்தியில் வீணான தப்பபிப்ராயங்களை உருவாக்கிக் கொண்டோம்.
இந்த தப்பபிப்பிராயங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய அமைப்புக்களும் இயக்கங்களும் தத்தமது நிறுவனத்திற்கான வெப்சைட்களை ஆரம்பித்து இவர்களது திட்டங்களை அதில் பிரசுரிக்கவும் செய்தது. எத்தனை பள்ளிவாயில்கள் கட்டினார்கள். எத்தனை மாடு உளுகியா கொடுத்தார்கள். எத்தனை கிணறு கட்டினார்கள் என்று முழு விபரத்தையும் அந்த வெப்சைட்களில் பிரசுரித்து தத்தமது இயக்கங்களை விளம்பரப்படுத்த முற்பட்டதனால் ஏனைய சமூகத்தவர்கள் இவற்றைக் கண்டு இந்த நாடு இஸ்லாமிய மதப்படுத்தளுக்கு உட்படுவதாக எண்ணி அஞ்சத் தொடங்கினர். இதன் அடிப்படையில் தான் பெரும்பான்மை சமூகத்திற்கும் எமக்கும் விரிசல்கள் ஆரம்பிக்கத் தொடங்கின..
இந்த விரிசல்கள் தொடர்ந்தால் இன்னுமொரு பர்மாவை இந்த நாட்டில் நாம் கூடிய விரைவில் கண்டு விடுவோம். எனவே இந்த நாட்டில் அரபு நாடுகிளின் உதவியுடன் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் இஸ்லாமிய இயக்கங்களிடமும் நாம் கேட்டுக்கொள்வது யாதெனில் தயவு செய்து தொடர்ந்தும் இந்த பள்ளி கட்டும் வேலைகளையும் அரபிகளது உளுகியாவை இங்கு கொண்டுவந்து கொடுப்பதையும் உடனடியாக நிறுத்தி விடுங்கள். உங்களது வெப்சைட்டுக்களிள் உள்ள உளுகியா கொடுக்கும் மற்றும் பள்ளிகட்டிய புகைப்படங்களையும் வீடியோ கிளிப்களையும் அறிக்கைகளையும் உடனடியாக அகற்றிவிட வேண்டும்.
அரபு நாடுகளை மையமாவைத்து இயங்கும் இஸ்லாமிய இயக்கங்ளிடமும் முஸ்லிம் அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் அரபு நாடுகளின் தூதுவராலயங்களிடம் இஸ்லாமிய இயக்கங்களிடமும் நாம் விடுக்கும் வேண்டுகோள் பள்ளிகட்டுவதற்கு நீங்கள் செய்த உதவிகளுக்கு எமது நன்றிகள். இதற்கு பிறகு பள்ளிகள் எமக்கு போதும் உங்களால் முடிந்தால் எமது முஸ்லிம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய உதவுங்கள் அல்லது எமக்கு உங்களது உதவிகள் எமக்கு போதும் நிறுத்திக் கொள்ளுங்கள்.
உங்களது உளுகியாக்கள் எமக்கு போதும் இவற்றை சோமாலியாவுக்கு அல்லது ஆபிரிக்காவுக்கு அனுப்புங்கள். உங்களால் முடிந்தால் எமது நாட்டுக்கு என்ன தேவை எமது தேவைகளுக்கு ஏற்ப உள்நாட்டு திட்டங்களுக்கு தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுத்துங்கள் அல்லது அதனை விட்டுவிட்டு அரபு நாட்டு செயற் திட்டங்களை இங்கு நடை முறைப்படுத்த முற்பட வேண்டாம்.
இலங்கையரின் வறுமையும், அரேபியரின் கொடுமையும்
அரபு நாட்டு தூதுவராளயங்களது கவனத்திற்காக எமது நாட்டின் பெண்கள் அரபு நாடுகளில் வீட்டுப் பணிப் பெண்களாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உங்களுக்காக தங்களது குடும்பத்தை பிரிந்துஇ சிறு குழந்தைகளை பிரிந்துஇ தனது உடலை வருத்தி தனது குடும்ப வறுமைக்காக அங்கு வேலை பார்க்கிறார்கள். இந்த ஏழைப் பெண்களுக்கு அங்கு நீங்கள் செய்யும் அநீதிகளும் கொடுமைகளும் இன்நோரன்னஇ ஏத்தனை ஏத்தனை ஆரியவதிகளும் ஏத்தனை றிஸானாக்களும் படும் துன்பம் இவற்றை கண்டு முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்கள் இஸ்லாத்தை ஒரு பயங்கர கொடுர மார்க்கமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அது மட்டுமல்லாது இந்த அரபிகளது மிருகத்தனமாக ஈனச் செயல்களைக் கண்டு இந்த நாட்டில் ஆயிரம் வருடத்துக்கு மேலாக வாழ்ந்த சமூகங்கள் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்இ இன்று இலங்கையில் ஆரம்பித்துள்ள இஸ்லாம் ஏதிர்பு அலைகளுக்கு நிச்சியமாக நீங்களும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
எனது பெரு மதிப்பிற்குறிய இஸ்லாமிய சகோதரர்களே..............!
முஸ்லிம்களின் நடத்தையிலும் பழக்கவழக்கங்களிலும் மாற்றம் ஏற்படாத வரையில் இந்த சமூகம் தலை நிமிர்ந்து வாழ முடியாது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை;.
மக்களை இனவாதிகளாக பிரதேசவாதிகளாக நடத்துவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் முதலில் நிறுத்தவேண்டும்;. மக்களை சுயமாக சிந்தித்து செயல்பட வைக்கவேண்டும் அதற்கு அவர்கள் கல்வியில் கரிசனை காட்ட வேண்டும். மற்றவர்கள் கருத்துகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மார்க்க நெறி முறைகளை சரியான முறையில் பின்பற்றும் சமூகமாக நமது சமூகம் மாற்றம் பெற வேண்டும். அவையெல்லாம் எம்மிடம் இருந்த காலத்தில் நாங்கள் மதிக்கப்பட்டோம் அவற்றைக் கைவிட்டதனால் நாங்கள் மிதிக்கப்படுகிறோம் அவ்வளவுதான்!
இலங்கையில் உள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் இயக்கங்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு முஸ்லிம் அரச சார்பற்ற அமைப்புக்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் புத்தி ஜீவிகள் இது குறித்து சிந்திக்கத் தளைப்படுவார்களா..?
நன்றி ஹைதர் அலி அவர்களே
ReplyDeleteஇக்காலத்துக்கு அதுவும் தற்போது நடைபெறும் குழப்பங்களுக்கும் இன முறுகளுக்கும் முற்று முழுதான காரணம் மேலே கூறப்பட்ட விடயங்கள் மிகப்பொருந்துகின்றது.
உங்கள் இந்த செய்தியை நாட்டில் உள்ள அணைத்து ஊடகங்களில் வரும்படி அனுப்பி பிரசுரிக்க முடிந்தால் ஏற்பாடு செய்யுங்கள் .
வரும் ஹஜ் பெருநாள் ஒரு பிரச்சினை நிறைந்த திருநாளாக முடியும் . காரணம் இந்த குர்பான் மாடு அறுப்பு ஒரு பெரிய யுத்தத்தில் கொண்டுபோய் விடும் என்று எனக்கு தோன்றுகின்றது . இதற்கு இப்போது இருந்தே அதற்கான நடவடிக்கைகளை அணைத்து பள்ளிவாசல் பரிபாலன சபை எடுக்கவேண்டும் . தங்களது எல்லைக்குள் மாற்றுமத சகோதரர்கள் பார்க்க முடியாதவாறு எம்மத கிரிகைகளை மேற்கொள்ள வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் . எமது இளைய வாலிபர்களுக்கு இதனால் வரும் விபரீதங்களை மிக பக்குவமாக எடுத்து விளக்கவேண்டும் . அடுத்து இக்குர்பன் இந்நிகைழ்ச்சிகளை போட்டோ எடுப்பதை முற்றாக தடை செய்யவேண்டும் . இப்படி எடுக்கப்பட்ட முன்னால் குர்பான் நிகழ்ச்சி போடோக்கள் இன்றுவரை முகப்புதகத்தில் FACEBOOK வீணான வார்த்தை பிரயோகங்கள் இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது . இவைகளும் எமது இஸ்லாத்தை வெருக்கக்கூடிய பாதைக்கு இட்டுசெல்கின்றது.
சொல்வதனால் எவ்வளவோ எம்மவர்களின் அடவடிதநகல் உள்ளது இவைகளை அவரவர்கள் உணர்த்து செயல்படாதவரயில் எமது சமூகத்துக்கு நிம்மதியாக வாழமுடியும் என்பதை கனவிலும் நினைக்க முடியாது.
நான் உண்மையில் பெருமைப்படுகிறேன். இவ்வாறு யதார்த்தபூர்வமாகச் சிந்திப்போர் எம்மத்தியில் இல்லையென நான் தப்புக்கணக்கு போட்டிருந்தேன்.
ReplyDeleteஇவ்வாறு அறிவூபூர்வமாகஇ உண்மையைக் கூறும் வகையில்இ நீதியான முறையில் சிந்திக்கும் இளைஞர்கள் நம்மத்தியில் இருக்கும் போது நிச்சயமாக அல்லாஹ்வின் அருளும்இ அதனைத் தொடர்ந்து அற்புதமான வாழ்ககையூம் அமைந்துவிடும்.
நம்மிடம் எதுவூம் இல்லாதிருக்கலாம்இ ஆனால் உலக அழிவூவரை எடுத்துச் செல்லக்கூடிய இறைவழி ஆம்இ புனித குர்ஆன் இருக்கிறது. அதன்படி நடந்தால் வெற்றி நிச்சயம்.
முதலாவது நமது தலைவர்கள் எனத்தாமே மகுடம் சூடிக்கொண்டு நக்கித்திரியூம் இழிபிறப்புக்கள் முதலில் களையப்படல் வேண்டும். காலத்துக்குக் காலம் தமது பதவிகளுக்காக பல் இழித்துஇ பக்குவமாக எதையூம் நியாயப்படுத்த தமது அறிவையூம்இ ஆற்றலையூம் செலவழித்து அந்நியர் மத்தியில் வெறுப்புணர்வை வளர்த்த பெரும் பங்கு இவர்களையே சாரும். நாம் பங்காளிகள்இ எம்மைவிட்டால் எவரும் ஆட்சி அமைக்கமுடியாது என தம்பட்டம் அடித்தே முஸ்லிம்களுக்குப் புதைகுழி தோண்ட ஆரம்பித்து அக்குழியில் அவர்களே விழுந்தஇ அமிழ்ந்துள்ள நிலையூம் மறக்க முடியாததே!
அன்றைய முஸ்லிம் தலைவர்கள் கௌரவமாக அடுத்தவர் அறியாதுஇ உலகில் எங்குமில்லாதவாறு சலுகை, உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ளனர்.
இன்று அதற்கு நேரெதிராக இஸ்லாத்தை விற்று தம்மை மேம்படுத்த முனைகின்றனர். இது மூலகாரணங்களில் ஒன்று.
கைதர்அலி சொல்லியது சரியான யோசனை எல்லோரும் கேட்டுநடவுங்கள்.பள்ளிவாசல்களை மூடிவிடுங்கள்,எல்லா ஜமாத்துகளும் இஸ்லாமிய பிரச்சாரங்களை விட்டுவிடுங்கள்,சதகா,சகாத் தை கொடுக்க வேண்டாம்,அரசியலை விட்டு விடுங்கள்.35 வருடங்களுக்கு முன்னிரிந்த நிலைக்கு திரும்பி விடுங்கள்.ஆடு,மாடு குர்பானி விட்டு விடுங்கள்,எம்.எச்.முஹம்மத்,அளவி,அஸ்வர் ,போன்றவர்களின் வால்பிடிக்கும் அரசியலை செய்யுங்கள்.வியாபாரங்களை மூடிவிட்டு பேரினவாதிகளுக்கு அடிமை சாசனம் எழுதிகொடுங்கள்.இலங்கையில் வாழும் உரிமையை பௌத்தம் வழங்கும்.இதுதான் இவரின் ஆசை என்று அவரின் எழுத்திலேயே விளங்குகிறது. மனித வள ஆலோசகரே?உங்கள் ஆலோசனை யை உங்கள் திணைக்களத்தில் வைத்து கொள்ளுங்கள்.இஸ்லாத்தின் அழிவிற்கு வேண்டாம். நாட்டில் நடக்கும் விடயங்களுக்கு இந்த அரசும்,சில பௌத்த பிக்குகளுமே காரணம் என்பது இந்த ஆலோசகருக்கு தெரியவில்லையா?தெரியாமல் நடிக்கிறாரா?
ReplyDeleteஹைதர் அலியின் ஆக்கம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு விரோதமானது. முஸ்லிம்கள் தட்போது பல்கி பெருகியுள்ளார்கள். சனத்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப பள்ளிவாசல்கள் குடியிருப்புகள் கிணறுகள் என்பன அமைக்கப் படவேண்டும். இதையெல்லாம் செய்ய வேண்டாம் என கூறுபவர் மனிதவள அபிவிருத்தி நிலையத்துக்கு பொருத்தமானவர் இல்லை. முஸ்லிம் சமூகத்தின் காட்டிக் கொடுப்பாளர்கள் இவர்கள். இவ்வாரனவர்கள் எழுதும் கட்டுரைகள் பிரசுரிக்கப் படக் கூடாது.
ReplyDeleteமக்காவில் காபிர்கள் எதிர்த்த பொது இவர் அங்கிருந்தால் நபியவர்களை இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருப்பார் போலும்.
இஸ்லாமிய எழுச்சி ஏற்படும் பொது அன்னியவர்களின் எதிர்ப்பும் கிளம்பும். இதனை சமயோசிதமாக திட்டமிட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமே ஒழிய ஹைதர் சொல்லுவது போல் செய்ய முடியாது. முஸ்லிம்கள் தமது வாழ்க்கையை இஸ்லாம் கூறும் பிரகாரம் அமைத்துக் கொண்டால் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் இறுதியில் இஸ்லாமே வெல்லும். சில சோதனைகள் வரத் தான் செய்யும் . அவற்றை முஸ்லிம்கள் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும்.
சமயோசிதமாக திட்டமிட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த சில ஆலோசனைகள்:
சிங்கள துறவிகள், பொலிசார், இராணுவ கப்டன்கள் , சிங்கள வியாபாரிகள் முக்கிய பிரமுகர்களை நோன்பு இப்தார் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றிய தெளிவை ஏற்படுத்த வேண்டும்.
ஆடு மாடுகளை அறுக்கும் பொது பகிரங்கமாக கட்டி வைத்து அறுக்கக் கூடாது. மறைவான இடங்களில் வைத்து அறுக்க வேண்டும்.
சிங்களவர்களுடன் பழகும் முஸ்லிம்கள் தமது நற்பண்புகளை அவர்களுக்கு காட்டி அவர்களின் கிதயத்துக்கு வித்திட வேண்டும்.
சதகா போன்ற உதவிகளில் ஒரு பங்கை சிங்கள இனத்தவருக்கும் தமிழர்களுக்கும் ஒதுக்க வேண்டும். (ஹிதயத்துடைய நோக்கை அடிப்படையாகக் கொண்டு)
இவ்வாறு எல்லா முஸ்லிம்களும் செய்து வந்தால் இஸ்லாமும் வளரும். எதிர்ப்புகளும் அடங்கி விடும்.
நாட்டில் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் ஆங்காங்கே நடக்கும் சிறு சிறு குளப்பங்களைவைத்து சீண்டிவிட்டு நிறந்தர பகையாளிகளாக்கி குரோதங்களை கொளுந்துவிட்டு வளர்க தமிழ் ஊடகங்கள் ஆங்காங்கே நடக்கும் சிறு குளப்பங்களையும் பென்னம் பெரிதாக ஊதி காண்பிக்க அதனை நம் முஸ்லிம் ஊடகங்களும் ஈயடிச்சான் கொப்பிபோல் அதே ஆவேசதோடு வெளிபடுத்திகொண்டிருக்க சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுதான் ஆண்டி என்ற கதையாக நிலமை மாறுகிறதோ என அச்சமாக உள்ளது நடக்கும் சம்பவங்கள் குறித்து நமது நிதானமற்ற அறிக்கைகளும் பேச்சுகளும் சிங்கள் கடும் போக்குவாதிகளுக்கு தீனியாகி அவை சாதரண சிங்கள மக்களிடையே துவேசத்தை வளர்க்க துணை புறிகின்றன எனவே எல்லா நிலமையிலும் அவதானமாக இருப்போம் எதையும் அவதானமாக நிதானமாக அனுகுவோம்
ReplyDeleteyes mr. saleem mohideen
ReplyDeleteUmmayai chonnal shila pervalikalukku kashakkumam.Ithu mika thelivaka Sh.Saleemin ulakkumuralil velippadukirathu.Enne madaththanamana pithatral? Muslimkal ippadi shindikkum varaikkum vidivu illai. Ithu nichchayam.
ReplyDeleteஹைதர், பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது! நாய்கள் குரைக்கத்தான் செய்யும் பயணத்தை நிறுத்த முடியுமா? தொடருங்கள் உங்கள் பயணத்தை!
ReplyDeletewell analyzed and truth factors are here. everybody need to accept the truth.
ReplyDeleteWhere is my coment???????????????????????????????
ReplyDeletehat r u doing??????????????????????????????????
where is mu coment??????????????????????????????????????
???????????????????????????????????????????????????????
>???????????????????????????????????????????????????????