Header Ads



அகதிகளை உள்வாங்க அவுஸ்திரேலியா தயார்

 
அவுஸ்திரேலியாவிற்கு உள்வாங்கப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த அந் நாட்டு அரசு தீர்மானித்திருக்கிறது.   புகலிடக் கோரிக்கையாளர்களை தற்போது உள்வாங்கும் எண்ணிக்கை 13 ஆயிரத்து 700 ஆகவுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை 20 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என அவுஸ்திரேலியப் பிரதமர் யூலியா கிலாட் அறிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணப்பதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைக்கமையை,
அவுஸ்திரேலியாவில் புகலிடத் தஞ்சம் கோருபவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா, அப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் கடந்த 30 ஆண்டுகளில் தற்போது அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து செல்வதாகவும் யூலியா கிலாட் தெரிவித்திருக்கிறார்.

அதேநேரம், ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நவுரு, பபுவாநியுகினியா ஆகிய தீவுகளில் உள்ள நிலையங்களுக்கு அனுப்பப்படுவர் எனவும் அத்துடன், குறிப்பிட்டகாலம் வரை அவுஸ்திரேலியாவில் பல்வேறு இடங்களில் உள்ள மீள்தங்குமிடங்களில் அமர்த்தப்படுவர் எனவும் கிலாட் எச்சரித்துள்ளார்.

1 comment:

  1. அவுஸ்திரேலியா, 20 ஆயிரம் என்பதனை, 2 கோடி என அறிவித்தால், இலங்கையில் ஜனாதிபதி, அமைச்சர்களைத் தவிர பொதுமக்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.