இஸ்லாத்தின் பார்வையில் அந்நிய மதத்தவர்களுடனான இப்தார்
சுவைர் மீரான்
இன்று அந்நிய மதத்தவர்களால் முஸ்லிம்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்ச்சிகள்பற்றிய செய்திகள் பரவலாக பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மாற்று தத்தவர்கள் நல்ல எண்ணத்துடன் இவற்றை ஏற்பாடு செய்தாலும் கூட, இவை குறித்து இஸ்லாத்தின் நிலப்பாடு என்ன என்பதனை சற்று நோக்குவதே பொருத்தமாகும்.
இது குறித்து மவ்லவி அஷ்ஷெய்க் அஷ்ரப் அலி (அஸ் சலபி) உரையொன்றின் பகுதியுடன் மேலும் சிறு விளக்கமொன்றை நோக்குவோம். இது இப்த்ரின் அடிப்படை நோக்கம் குறித்த ஓரளவு தெளிவை தரப் போதுமானதாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்.
"அல்லாஹ் சுபானஹுதாலா தனது திருமறையில் ரமலான் பற்றி இரண்டாம் அத்தியாயம் 185ஆம் வசனத்தில் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறான்,
"ரமலான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே எவர் அம்மாதத்தை சாட்சி பெற்றுக்கொண்டாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்கட்டும் . "
பஜ்ர் தொழுகையின் ஆரம்ப நேரம் முதல், சூரியன் மறையும் வரை உள்ள நேரம் நோன்பின் நேரமாகும். நோன்புக் காலங்களில் பின்னிரவில் உண்ணப்படும் உணவு, "ஸஹர் உணவு'. இவ்வுணவை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். "நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் உணவில் பரகத் (அபிவிருத்தி)
உள்ளது'' என அறிவுறுத்துகிறார்கள்.
நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரை என் உம்மத்தினர் நன்மையிலேலே இருப்பார்கள். (ஆதாரம்: புகாரி)
"நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்'' போன்ற நபிமொழிகள் நோன்பின் மேன்மையை எடுத்துக் கூறுகின்றன.
நோன்பு நோற்பதால் ஏற்படும் பலன் பற்றி இரண்டாம் அத்தியாயம் 183ஆம் வசனத்தில் அல்லாஹ் கூறும்போது , "இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும், அது கடமை ஆக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்'' எனக் குறிப்பிடுகிறான்.
இவ்வாறு தெளிவாக சிறப்பித்துக் கூறப்பட்ட, எம்மை தூய்மையாக்க சொல்லப்பட்ட இபாதத்தான் நோன்பாகும். இன்னும் இந்த இபாதத்தில் இப்தார் இன் சிறப்புகள் பற்றியும் அதனுடைய வெகுமதிகள் பற்றி தெளிவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்ட பின்பும் இந்த இபாதத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை தூய்மை அற்றவர்களை கூட்டு சேர்ப்பது, நபி வழிக்கு முரணான செயலாகும். அதாவது அல்லாஹ்வுக்காக செய்யும் இபாதத்தில் அல்லாஹவை மறுப்பவர்களுக்கு இடமளிப்பதாகும். சமூக நல்லிணக்கம் , மாற்று மதத்தவர்களுக்கு அழைப்புப்பணி என்றெல்லாம் சாக்குபோக்கு சொன்னாலும் இதன் அடிப்படை எம்மதமும் சம்மதம் என்ற குப்ரான கொள்கையின் மறு வடிவம் தான்.
இன்னும், நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முற்று முழுதாக காபிர்களுடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் இஸ்லாத்தை எத்தி வைக்கவோ , மாற்று மதத்தவர் மத்தியில் முஸ்லிம்களை பற்றி நல்லெண்ணத்தை ஏற்படுத்தவோ இப்தாரை பயன் படுத்தவில்லை.
நோன்பு நோற்பதால் ஏற்படும் பலன் பற்றி இரண்டாம் அத்தியாயம் 183ஆம் வசனத்தில் அல்லாஹ் கூறும்போது , "இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும், அது கடமை ஆக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்'' எனக் குறிப்பிடுகிறான்.
இவ்வாறு தெளிவாக சிறப்பித்துக் கூறப்பட்ட, எம்மை தூய்மையாக்க சொல்லப்பட்ட இபாதத்தான் நோன்பாகும். இன்னும் இந்த இபாதத்தில் இப்தார் இன் சிறப்புகள் பற்றியும் அதனுடைய வெகுமதிகள் பற்றி தெளிவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்ட பின்பும் இந்த இபாதத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை தூய்மை அற்றவர்களை கூட்டு சேர்ப்பது, நபி வழிக்கு முரணான செயலாகும். அதாவது அல்லாஹ்வுக்காக செய்யும் இபாதத்தில் அல்லாஹவை மறுப்பவர்களுக்கு இடமளிப்பதாகும். சமூக நல்லிணக்கம் , மாற்று மதத்தவர்களுக்கு அழைப்புப்பணி என்றெல்லாம் சாக்குபோக்கு சொன்னாலும் இதன் அடிப்படை எம்மதமும் சம்மதம் என்ற குப்ரான கொள்கையின் மறு வடிவம் தான்.
இன்னும், நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முற்று முழுதாக காபிர்களுடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் இஸ்லாத்தை எத்தி வைக்கவோ , மாற்று மதத்தவர் மத்தியில் முஸ்லிம்களை பற்றி நல்லெண்ணத்தை ஏற்படுத்தவோ இப்தாரை பயன் படுத்தவில்லை.
மாறாக உங்கள் உணவை தக்வா உள்ளவர்களை தவிர உன்ன வேண்டாம் (அபூதாவுத்) என்று வேறு கூறிவிட்டார்கள். யாரேனும் ஒரு காபிர் பசி என்று ஒரு வேளை கேட்டு வந்தால், அண்டை அயலவராக இருந்தால், இதர வேலைகளில் கவனித்தார்களே தவிர மார்க்கத்தின் எந்தவொரு இபாத்திலும் அவர்களை கூட்டு சேர்க்கவோ , அவர்களுடன் ஒன்றர கலக்கவோ இல்லை. இன்னும் எமது அருமை சஹாபாக்களோ , தாபியீன்களோ, இவர்களை பின் தொடர்ந்தசலபுஸ் சாலிஹீன்களோ இந்த வழிமுறையை கையாளவில்லை.
எனவே, இந்த தூய்மையான இபாதத்தில் மாற்று மதத்தவர்கள் அழைக்கப்படுவதும் கூடாது, மாற்று மதத்தவர்களின் ஏற்பாட்டில் நடைபெறுவதில் பங்குபெற்றுவதும் கூடாது. அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அல்லாஹ் அந்த மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்று தான். ''நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும் , எனக்கு எதையும் இணையாக்காதே'' என்பது தான் அது!"
மேலும், நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லாம் அவர்கள் இப்தார் என்பது ஒரு இபாதத் என்றார் அடிப்படையில் அதனை ஊக்குவித்து உள்ளார்கள். யாரொருவர், ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க அகாரம் அளித்து உதவுகின்றாரோ, அவரும் அன்நோன்பாளியின் நன்மையைப் போன்ற நன்மையைப் பெற்றவராவார் என்ற நபி மொழி நாமனைவரும் அறிந்த ஒன்றே.
ஒருவரையோ அல்லது பலரையோ நோன்பு திறக்க வைத்து நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, பெற்றுக் கொள்பவர் உண்மையான முஸ்லிமாக இருக்க வேண்டும். இப்தார் என்பது ஒரு ஆடம்பரமான, பல்சுவை உணவுகளை புசிக்கும் ஒரு நிகழ்வாக மாற்றப் பட்டுள்ளதன் காரணத்தால், இப்தாரின் மார்க்க ரீதியான முக்கியத்துவம் மற்றும் அடிப்படைகள் மறக்கடிக்கப் பட்டுள்ளன.
இப்தாரை வெறுமனே ஒரு நிகழ்வாக கருதாமல், அதனை ஒரு இபாதத்தாக கருதுவோம். இஸ்லாத்தில் இபாதத் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமுரியது என்பதனைப் புரிந்துகொள்வோம்.
இப்தரை வழங்கினால் முஸ்லிம்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது உண்மை தான். ஆனால் இன்று அந்நிய மதத்தவர்கள் ஏன் ஜனாதிபதி கூட முஸ்லிம்களுக்கு இப்தார் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதில் அரசியல் நோக்கங்கள் இருந்தாலும் விருந்துக்கு அழைக்கப் படும் பொது அங்கு செல்வது ஆகுமாக்கப் பட்டுள்ளது. இப்தாரை அன்னியவர்கள் வழங்கினால் அவர்களுக்கு நன்மை கிடைக்காது என்பதட்காக அதட்கு செல்லாமல் இருக்க முடியாது. அப்படி இஸ்லாம் வலி கட்டவில்லை. நபியவர்களும் காபிர்களின் விருந்தொன்றுக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் வழங்கும் உணவு ஹலாலானது என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.
ReplyDeleteமரதானையில் இடம் பெற்ற இப்தாரில் தேரர் பேசும் பொது இந்த நோன்பு போன்று தமது புத்தருக்கும் நோன்பு அளிக்கப் பட்டிருந்ததாகவும் அது அவரை பக்குவப் படுத்தியதாகவும் கூறியுள்ளார் தெரியுமா. முஸ்லிமுடைய ஒவ்வொரு செயலும் காபிர்களுக்கு கிதாயத்து வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லியுள்ளதே தவிர , இப்தாருக்கு காபிர்கள் அழைத்தால் செல்லாதே என்று எங்காவது கூறியுள்ளதா ? மேலும் தங்கள் கட்டுரையில் குர் ஆனுக்கு மொழி பெயர்கையில் நோன்பு உங்களுக்கு விதியாக்கப் பட்டது நீங்கள் தூய்மையாளர்கள் ஆவதட்காக என்று திரித்து எழுதியுள்ளீர்கள். உண்மையில் அது பயபக்தியுடையவர்கள் ஆவதட்காக என்று வரவேண்டும். இது தவறான கருத்து. லால்லகும் தத்தகூன் என்பது பயபக்தியையே குறிக்கும். எனவே தானறியா விடயத்தை இரண்டுக்கு மேற்பட்ட உலமாக்களிடம் காட்டி சரி பார்த்துக் கொள்ளுங்கள். தனி ஒருவரின் கட்டுரையை நம்பி அதை அப்படியே பிரசுரித்து தாங்கள் தூய்மையற்றவர் ஆக வேண்டாம். மக்களையும் வழி கெடுக்க வேண்டாம்.
காபிர்களையும் இப்தாருக்கு அழையுங்கள் . அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி தெளிவு படுத்துங்கள். அவர்களுடைய விருந்துகளிலும் கலந்து கொண்டு அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி கூறுங்கள். அது தான் முஸ்லிம்கள் சிறு பான்மையாக வாழும் நாட்டில் செய்யக் கூடியது.
முஸ்லிம்களுடைய இபாதத்தும் நல்லொழுக்கமும் கபிர்களுடைய ஹிதாயத்துக்கு காரணமாக வேண்டும். காபிர்கள் வீட்டில் நோன்பு திறந்தாலும் அங்கு நபி காட்டித் தந்த பிரகாரம் நாம் நோன்பை திறந்தாள் அது இபாதத் ஆகி விடும். காபிர்கள் வீட்டிலும் அவர்களில் வணக்க இச்தலங்களிலும் கூட நோன்பைத் திறக்க முடியும். நபியவர்களுக்கும் எதிர்காலத்தில் இப்படி நடக்கும் என்பதை இறைவன் உணர்த்தி இருப்பான். சூழ்நிலைக்கு ஏற்ற முடிவு பிற்கால முஸ்லிம்கள் எடுக்கட்டும் என்பதற்காக நபியவர்கள் காபிர்களின் இப்தாரில் கலந்து கொள்ளாதீர்கள் என்று நேரடியாக ஒரு கதீசை கூறியிருக்க வில்லை.
Mohamed irfan brother try to change hadis.We should avoid this kind unnesessary other religeos people arranging ifthar party completly.Islam is a puor religeon their not good involed specially this month durty religeos peoples.
ReplyDeleteWell Done Irfan Your Correct .......
ReplyDeleteBecz Islam Iz a Peace full Religion, It iz Saying Respect to Others,
I agree with Mohamed Irfan, Unfortunately some ulamas speaking quran sunna,doesn't have common knowledge or where to apply in a multicultural society. there is nothing wrong in having the food a non Muslim provide as long as it is halal and the event is non islamic.
ReplyDeleteமுஹம்மது இர்பான் அவர்களே ....உங்களின் இசைவுக்கு இஸ்லாத்தை மாற்றாமல்.உங்களை இஸ்லாத்தின் கட்டுப்பாடுகளுக்கு அடிபணிந்து நடக்கப் பாருங்கள்....
ReplyDelete@ Mohamed Irfan,
ReplyDeleteசகோதரரே, இப்தார் என்கின்ற இபாதத்தை, எப்படி விருந்தாக மாற்றிக் கொண்டீர்கள்? ஹஜ் என்பதை எப்படி நுவரெலியாவுக்குச் செல்லும் உல்லாசப் பயணம் என்று ஆக்கிக் கொள்ள மாட்டோமோ, அதேபோல இப்தார் என்கின்ற இபாதத்தை விருந்து என்று ஆக்கிக் கொள்ள வேண்டாம்.
மருதானையில் தேரர் கூறியதை வைத்துப் பார்த்தல், அது எம்மதமும் சம்மதம் என்கின்ற கொள்கையைத் தானே சொல்கின்றது. புத்தரும் நோன்பு பிடித்தார், முஹம்மதும் (ஸல்) நோன்பு பிடித்தார், ஆகவே எல்லாம் ஒன்றுதான் என்கின்ற தத்துவமா?
சகோதரரே, உங்களுக்கு தேவையான மாதிரி மார்க்கத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள். இபாதத் விடையத்தில் நபியவர்கள் காட்டித்தந்த வழி முறையைத்தான் பின்பற்ற வேண்டும். உலக விவகாரங்களில்தான் தடை வந்துள்ளதா என்பதனைப் பார்க்க வேண்டும். வேறு பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இபாதத் விடையங்களை கருதினால், பெண்கள் ஜும்மா நடாத்த தடை வந்துள்ளதா, காபிர் ஜமாஅத் நடாத்தினால், அவனுக்குப் பின்னால் நின்று தொழ நேரடித் தடை வந்துள்ளதா, புனித கஅபாவை வலது பக்கம் நோக்கி தவாப் செய்ய தடை வந்துள்ளத என்று கேட்பதல்ல மார்க்கம், இபாதத்களில் நபியவர்கள் காட்டித் தராத வழிமுறைகளை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பதுதான் மார்க்கம்.
நபியவர்களும் நோன்பு நோற்றார்கள், அதே போல காபிர்களுகான இஸ்லாமியப் பிரச்சாரமும் செய்தார்கள்,ஆனால் ஒரு பொழுதுமே இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை.
நபியவர்கள் காபிர்களுக்கு இப்தார் வைத்து, நோன்பின் மாண்பு பற்றி, அதனால் கிடைக்கும் உடல் நல இலாபங்கள் பற்றி, கொலஸ்ட்ரோல் கொன்றோல் பற்றி பயான் பண்ணவில்லை. காபிர்களுக்கு நபியவர்கள் சொன்னதெல்லாம் அல்லாஹ்வை ஈமான் கொள்ளும் படியும், அல்லாஹ்வுக்கு இணை வைக்க வேண்டாம் என்றும்தான். இதைச் சொல்லாமல், காபிரிடம் சென்று, இப்தார் என்ற இபாதத்தை செய்துவிட்டு, ''புத்தரும் நோன்பு நோற்றார், நபிகளும் நோன்பு நோற்றார்" என்று கேட்டு விட்டு வருவது காபிருடைய மதத்திற்கும், அவனுடைய நம்பிக்கைக்கும் கொடுக்கும் அங்கீகாரமாக அமைகின்றதேயல்லாமல் வேறில்லை. இதன் ஒரு வெளிப்பாடாகத்தான் சில முஸ்லிம் ஜமாத்துக்கள் கடந்தமுறை வெசாக் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, தன்சல வழங்கியதும் அமைந்துள்ளது.
மார்க்க விடையங்களில் காபிர்களுடன் சமரசமோ, கூட்டோ இல்லை. ''லகும் தீனுக்கும் வலியத்தீன்'' என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.
"காபிர்கள் வீட்டிலும் அவர்களில் வணக்க ஸ்தலங்களிலும் கூட நோன்பைத் திறக்க முடியும். நபியவர்களுக்கும் எதிர்காலத்தில் இப்படி நடக்கும் என்பதை இறைவன் உணர்த்தி இருப்பான்.'' என்று நீங்கள் சொல்லுவது மார்க்கத்தின் பாலுள்ளது அல்ல. மாறாக உங்களின் சொந்தக் கற்பனையே.
நபியவர்களுக்கு இறைவன் ஒரு விடையத்தை உணர்த்தியது சம்மந்தமாக கற்பனை செய்து சொல்வது பெரும் பாவம் ஆகும்.
காபிர்களுக்கு இஸ்லாத்தை சொல்லும் அழகான வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க, அதனை செய்யாமல், இப்தார் என்கின்ற இபாதத்தில், காபிர்களுடன் சமரம் செய்வது, மார்க்கத்துக்கு முரணாகும்.
ReplyDeleteஇஸ்லாமிய வரலாற்றில் அபூ சுபியான், காலித் இப்னு வலீத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹும்) போன்ற பல்லாயிரக் கணக்கான பெரும் பெரும் காபிர்கள் எல்லாம் இஸ்லாத்தை ஏற்றார்களே, இவர்களில் யார் இப்தார் நடாத்தி இஸ்லாம் சொல்லப் பட்டு மார்க்கத்தை ஏற்றவர்கள்?
மிக வெற்றிகரமாக காபிர்களுக்கு இஸ்லாத்தை சொல்லி, லட்சக் கணக்கில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற துணிச்சலான முன்மாதிரியை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க, அதனை புறக்கணித்துவிட்டு, இப்தார் என்கின்ற இபாதத்தில் காபிருடன் சமரசம் செய்கின்ற செயலை எங்கிருந்து கற்றுக் கொண்டோம்?
ஆயிரத்து நாநூறு வருட கால இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் எவ்வளவு பேர்? இப்தார் என்கின்ற இபாத்தில் காபிருடன் கலப்பு ஏற்படுத்தி இஸ்லாத்தை சொல்லும் நடைமுறையை 1400 வருட கால வரலாற்றில் எந்த சஹாபி செய்தார், எந்த நேர்வழி வந்த இமாம் செய்தார்? ஒரு ஆதாரத்தையாவது கொண்டுவர முடியுமா?
கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் பத்து வரையான இப்தார்களில் தவறாமல் கலந்து கொண்ட நபராக மு. கருணாநிதி காணப்படுகின்றார். இன்றைக்கு 88 வயதாகும் கருணாநிதி இதுவரை எத்தனை இப்தார்களில் கலந்து கொண்டிருப்பார், ஆனால் வந்த மாற்றம் என்ன?
ஆயிரத்து நாநூறு வருட கால இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் எவ்வளவு பேர், இதில் "இப்தாரில் கலந்து கொண்டு இஸ்லாத்தைப் பற்றி தெரிந்துகொண்டேன், அதன் மூலம் இஸ்லாத்தை ஏற்றேன்" என்று சொன்ன, எல்லோராலும் அறியப் பட்ட, ஆக குறைந்தது ஐந்து பேரின் பெயர்களையாவது தர முடியுமா?
காபிருக்கு இஸ்லாத்தை சொல்ல வேண்டும், நம் சொல்ல வேண்டிய முதல் விடையம் ஓரிறைக் கொள்கை ஆகும். அல்லாஹ்வையே ஏற்காத ஒருவன், இப்தரை மட்டும் ஏற்றுக் கொள்வதால் என்னதான் பயன்.
இபாதத் விடையங்களில், லகும் தீனுக்கும் வலியத்தீன்.
காபிர்களுடன் சமரசம் செய்யாதீர்கள்.
இதனை இப்படியே தொடர விட்டால், நாளை பெளத்த துறவிகள் தராவிஹ் தொழுகையிலும் நீங்கள் போதி பூஜையிலும் கலந்து கொள்ளும் அவலம் ஏற்படலாம். அல்லாஹ் பாதுகாக்கட்டும்.
இந்த விடயதில் பொதுவாக எவரும் கருத்து சொல்லலாமே தவிர , நபி அவர்ஹல் இதை தவிர்க்கும் படியோ , மார்க்கத்தில் இது கூடாது என்றோ சொல்லும் தெளிவான ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை . இருந்தால் அதனை பிரசுரித்தaல் ஏற்பதில் தாமதம் அவசியமில்லை. எதட்காஹவோ சொன்னதை வேறு எதட்காஹவோ பொருத்தி தன சொன்னதை சரி என்று வாதாடுவதை தவிர்த்து , நன்மை இருந்தால் எடுத்தும், தீமை இருந்தால் தவிர்த்தும் ,இஸ்லாத்தின் நல்லெண்ணம் பாதிகாத விடயthடிலும் நடந்து கொள்வோமாக . ஐரோப்பிய நாடுஹலில் ஜும் ஆ தொழுகைக்கு சில கிறிஸ்தவ ஆலயங்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்துகொடுகபடுஹின்றன , அதில் தொழுவது கூடாதுஎன்றோ , அப்படி தொழுவதால் அவர்ஹல் நாளை பள்ளிக்கு வந்து இடம் கேட்பர்ஹல் என்றோ அங்கு விதண்டாவாதம் நடப்பது இல்லை .
ReplyDeleteடியர் ல வைக்ஸ் என்ற மீரானுக்கு
ReplyDeleteதங்களின் விவாதங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதவை. ரமலான் மாதத்தில் இப்தார் நடத்தி அதில் கலந்து கொண்ட சிங்கள இலைகர்களும் யுவதிகளும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு நான் சாட்சியாக இருந்துள்ளேன். உங்களை போன்ற சிலரின் கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளையே தகர்த்து விடும். இஸ்லாமிய தாவா கொடுக்க இடமோ நேரமோ நிர்ணயிக்கப் படவில்லை. அதனால் தான் ஒரு நாள் இரவு கடும் மணல் புயல் வீசும் சமயம் நபி முஹம்மத் ஸல் அவர்கள் அபு ஜகிளின் வீட்டுக்கு சென்று தாவத் கொடுத்தார்கள். இன்று சில நாடுகளில் இஸ்லாம் வேகமாக பரவி வருவதட்கு காரணம் இப்தார் போன்ற நிகழ்ச்சிகளில் இஸ்லாத்தைப் பற்றி செய்யப் படும் பிரச்சாரங்கள் தான். இன்று சில நாடுகளில் சில மதப் பெரியார்கள் கூட இஸ்லாத்துக்கு வந்துள்ளார்கள். அவ்வாறன இரு மதப் பெரியார்களுடன் நான் உரையாடியுள்ளேன். இன்னொரு கிறிஸ்தவா பாதிரியாரின் இஸ்லாமி பயானையும் நான் கேட்டுள்ளேன். விபரங்கள் இங்கே தருவது சில சிக்கல்களை தோற்றுவிக்கும். நீங்கள் டாக்சி ஓட்டும் நாட்டில் இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெறுவது அரிது என்பதட்காக மற்ற நாடுகளில் அவ்வாறு நடக்காது என்று பிடிவாதம் பிடிக்கலாமா?. please develop some positive thinkiing .
islaathil ethayum murayaaga seythaal ellame ibaadath thaan nonbu waythiruppawarukku nonbutirappathukku alaythu unawu koduppathu nonbu pidikkaatha anniya matha sagotherergalukku unwu koduppathum ibaathathutaan anniya mathathu sagotherer udaya halaalana unawu thanthu nonbuthrappathu maarkathil thaday irukkirathaa?
ReplyDelete@ Mohamed Irfan,
ReplyDeleteநீங்கள் எதோ ஒன்றை எழுதி இருந்தாலும், முன்வைக்கப் பட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கவில்லை என்பது உங்களுக்கு புரியுமோ, இல்லையோ, இன்ஷா அல்லாஹ் வாசிப்பவர்களுக்கு புரியும் என நம்புகின்றேன்.
இஸ்லாத்தை எத்தி வைப்பதற்கான நேரம், இடம் குறித்து இங்கு பேசப்படவில்லை. மாறாக அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய இபாதத்களில், அல்லாஹ்வையே ஏற்றுக் கொள்ளாத காபிர்களுடன் கூட்டுச் சேர்வதனைப் பற்றியே பேசப்பட்டுள்ளது.
இதனையே ''லகும் தீனுக்கும் வலியத்தீன்" என்பது எடுத்துக் கூறுகின்றது.
ஏற்கனவே சொல்லப் பட்டு, பதிலளிக்காமல் விடப்பட்டுள்ள விடையங்களை மீண்டும் மீண்டும் பதிய விரும்பவில்லை. ஆரம்பத்தில் இருந்து வாசித்தல் நீங்கள் பதிலளிக்காமல் விட்டவற்றை தெளிவாக கண்டுகொள்ளலாம்.
நான் டாக்சி ஓடும் நாடா? அவலை நினைத்து, உரலை இடிப்பது என்பது இதற்குத்தானோ? இந்த சாதாரண உலக விடயத்த்ல் கூட சரியாக புரிந்துகொள்ள முடியாமல், எதையோ எழுதி தடுமாறும் நீங்கள், மார்க்க விடையங்களை எப்படித்தான் சரியாகப் புரிந்துகொள்ளப் போகின்றீர்களோ?
THIS LA VOIX. THE VOICE WAS AS MEAN BEFORE HIS ARGUMENT ABOUT IFTHAAR I AGREE WITH BUT JAFFNAMUSLIM WEBSITE DOING SOME QUEUES JUMPING BETWEEN THE COMMENTS ONCE YOU READ YOUR COMMENT ONE LOCATION THEN LATER IT HAS GONE TO LAST. MY DOUBT IS MEAN AS VOIX MUST BE LINK WITH MUBARAK THANGA AND ONE MORE COMMENTATOR HAS LINK WITH JAFFNAMUSLIM WEBSITE AND UNPUBLISHED COMMENTS USED BY RECYCLING MY COMMENTS AND I COULD FIND SOME WORDS I USED BEEN NOT PUBLISHED.JAFFNAMUSLIM WEBSITE IS ALSO PRO MUSLIM CONGRESS AND ANTI OTHER MUSLIM POLITICIAN WHY THIS WE LIKE TO CONTRIBUTE YOU BUT YOU BEHAVE WITH FAVOR FOR SOME NOT INDEPENDENT PLEASE PUBLISH THIS
ReplyDeleteலகும் தீனுக்கும் வலியதீன் என்பது காபிர்களுடனான ஒரு விவாதத்தில் நபிக்கு இறைவனால் கூறப் பட்ட ஒரு கருத்து. அதாவது எனக்கு எனது மார்க்கம் உங்களுக்கு உங்களது மார்க்கம் என்பது தான் அதன் கருத்து. காபிர்களுடைய இப்தாரில் கலந்து கொள்வதால் முஸ்லிம்கள் ஏக தெய்வ கொள்கையை விட்டு விட்டார்களா என்ன? தாங்கல் சொல்லவரும் அர்த்தம் காபிர்களுடைய இடங்களுக்கு சென்று நோன்பு திறப்பவர்கள் அவர்களுடைய கடவுளையும் வணங்குமாறு நிர்பந்திக்கப் பட்டால் பொருந்தும். இலங்கையில் எங்காவது அப்படி நடந்ததாக தகவல் இல்லையே.
ReplyDeleteமற்றது தாங்கள் காபிர்கள் என்று சொல்பவர்கள் யார்? இஸ்லாத்தைப் பற்றி தாவா கொடுக்கப் பட்டு அதை நிராகரிப்பவர் தான் காபிர் என சொல்லப் படலாம்.
ஏற்கனவே தாங்கள் தக்வா என்பதை மாற்றி தூய்மை என்று அர்த்தப் படுத்தியிருந்தீர்கள். அதே போன்று இதன் கருத்தையும் தவறாக பயன் படுத்துகிறீர்கள். தாங்கள் ஒரு உலமாவாக இல்லவிட்டவிட்டலும் குர் ஆண் மொழி பெயர்ப்புகளை அதன் அர்த்தங்களை சரியாக விளங்கிக் கொள்ள தர்ஜுமா வை பயன் படுத்துங்கள்.
திரும்பத் திரும்ப குர் ஆணுக்கு தவறாக அர்த்தம் கொடுக்கும் உங்களோடன் விவாதிப்பது தேவையற்றது என நினைக்கின்றேன். தயவு செய்து இந்த ரமளானில் பல உலமாக்கள் ஐரோப்பாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் வந்துள்ளனர். அவர்களை அணுகி மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளுங்கள். புத்தகங்களிலும் வீடி ஒவிலும் கேட்பவற்றை இஸ்லாமாக நம்புவதட்கு முன்னர் குர் ஆண் மற்றும் கதீஸ் நூற்களை எடுத்து படித்துக் கொள்ளுங்கள்.
தாங்கள் டாக்ஸி oddaviddaal எனது டாக்ஸி சம்பந்தமான கருத்தை வாபஸ் வாங்கிக் கொள்கின்றேன்.
@ Mohamed Irfan
ReplyDelete"லகும் தீனுக்கும் வலியதீன்" என்பது நபிக்கு கூறப்பட்ட ஒரு கருத்து அல்ல சகோதரே, அது அல் குர்ஆனின் வசனமாகும். அல் குர்ஆன் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது என்றால், அல் குர் ஆனுடைய ஒரு வசனத்தைப் பார்த்து, எப்படி ஒரு கருத்து என்று சொல்லத் துணிந்தீர்கள்?
அடிப்படைகளையே நழுவ விட்டுவிட்டு, அல்லாஹ்வுக்கு மட்டும் செய்ய வேண்டிய இபாதத்களில், அல்லாஹ்வையே ஏற்றுக் கொள்ளாத
காபிர்களை கலந்துவிட்டு, அதனை நியாயப் படுத்துவது நியாயமா?
அல் குர்ஆனுடைய மேற்படி வசனம் இந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என்பதனை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய வணக்கங்களில் நாம் கலந்து கொள்ளவும் முடியாது,அதேபோல நம்முடைய இபாதத்களில் அவர்களுக்கு பங்கும் இல்லை.
நோன்பு, தொழுகை, ஹஜ்ஜு, உம்ரா, சஹர், திக்ரு போன்று இப்தாரும் ஒரு இபாதத், இபாதத் என்பது அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமுரியது, இந்நிலையில், "காபிர்களின் இப்தார்" (?) இப்படி ஒரு பதத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?
அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் காபிர்களை நோக்கி அழைப்பு விடுக்கின்றான். கால நிலை மாற்றங்கள், கடல்கள், படைப்புகள், வானங்கள், மலைகள், குறைசிகளுக்கு கோடை, குளிர் கால பிரயாணங்களை வசப்படுத்திக் கொடுத்தது என்று பல்வேறு விடையங்களைப் பற்றி சிந்திக்கும் படிதானே சொல்கின்றான்.
ஒரு இடத்திலாவது, "முஸ்லிம்களுடன் இப்தாரில் கலந்து கொண்டு நீங்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா" என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்லியுள்ளானா? முடிந்தால் ஒரு ஆதாரத்தைக் கொண்டு வருங்கள், விடையத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுவோம், இன்ஷா அல்லாஹ்.
நீங்கள் கவனிக்காமல் விட்ட, அல்லது கவனித்தும் பதிலளிக்காமல் விட்ட ஏற்கனவே கேட்கப் பட்ட விடையங்களில் சில :
ReplyDelete1. இபாதத் விடையத்தில் நபியவர்கள் காட்டித்தந்த வழி முறையைத்தான் பின்பற்ற வேண்டும். உலக விவகாரங்களில்தான் தடை வந்துள்ளதா என்பதனைப் பார்க்க வேண்டும். வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இபாதத் விடையங்களை கருதினால், பெண்கள் ஜும்மா நடாத்த தடை வந்துள்ளதா, காபிர் ஜமாஅத் நடாத்தினால், அவனுக்குப் பின்னால் நின்று தொழ நேரடித் தடை வந்துள்ளதா, புனித கஅபாவை வலது பக்கம் நோக்கி தவாப் செய்ய தடை வந்துள்ளதா என்று கேட்பதல்ல மார்க்கம், இபாதத்களில் நபியவர்கள் காட்டித் தராத வழிமுறைகளை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பதுதான் மார்க்கம்.
2. மருதானையில் தேரர் கூறியதை வைத்துப் பார்த்தல், அது எம்மதமும் சம்மதம் என்கின்ற கொள்கையைத் தானே சொல்கின்றது. புத்தரும் நோன்பு பிடித்தார், முஹம்மதும் (ஸல்) நோன்பு பிடித்தார், ஆகவே எல்லாம் ஒன்றுதான் என்கின்ற தத்துவமா?
3. இஸ்லாமிய வரலாற்றில் அபூ சுபியான், காலித் இப்னு வலீத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹும்) போன்ற பல்லாயிரக் கணக்கான பெரும் பெரும் காபிர்கள் எல்லாம் இஸ்லாத்தை ஏற்றார்களே, இவர்களில் யார் இப்தார் நடாத்தி இஸ்லாம் சொல்லப் பட்டு மார்க்கத்தை ஏற்றவர்கள்?
மிக வெற்றிகரமாக காபிர்களுக்கு இஸ்லாத்தை சொல்லி, லட்சக் கணக்கில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற துணிச்சலான முன்மாதிரியை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க, அதனை புறக்கணித்துவிட்டு, இப்தார் என்கின்ற இபாதத்தில் காபிருடன் சமரசம் செய்கின்ற செயலை எங்கிருந்து கற்றுக் கொண்டோம்?
ஆயிரத்து நாநூறு வருட கால இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் எவ்வளவு பேர்? இப்தார் என்கின்ற இபாத்தில் காபிருடன் கலப்பு ஏற்படுத்தி இஸ்லாத்தை சொல்லும் நடைமுறையை 1400 வருட கால வரலாற்றில் எந்த சஹாபி செய்தார், எந்த நேர்வழி வந்த இமாம் செய்தார்? ஒரு ஆதாரத்தையாவது கொண்டுவர முடியுமா?
4. "காபிர்கள் வீட்டிலும் அவர்களில் வணக்க ஸ்தலங்களிலும் கூட நோன்பைத் திறக்க முடியும். நபியவர்களுக்கும் எதிர்காலத்தில் இப்படி நடக்கும் என்பதை இறைவன் உணர்த்தி இருப்பான்.'' என்று நீங்கள் சொல்லுவது மார்க்கத்தின் பாலுள்ளது அல்ல. மாறாக உங்களின் சொந்தக் கற்பனையே.
நபியவர்களுக்கு இறைவன் ஒரு விடையத்தை உணர்த்தியது சம்மந்தமாக கற்பனை செய்து சொல்வது பெரும் பாவம் ஆகும்.
5. ஆயிரத்து நாநூறு வருட கால இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் எவ்வளவு பேர், இதில் "இப்தாரில் கலந்து கொண்டு இஸ்லாத்தைப் பற்றி தெரிந்துகொண்டேன், அதன் மூலம் இஸ்லாத்தை ஏற்றேன்" என்று சொன்ன, எல்லோராலும் அறியப் பட்ட, ஆக குறைந்தது ஐந்து பேரின் பெயர்களையாவது தர முடியுமா?
(எல்லோராலும் அறியப்பட்டு இஸ்லாத்தை ஏற்றவர்கள், வரலாற்றில் - தற்பொழுது வாழ்பவர்கள் மட்டுமல்ல - லட்சக் கணக்கில் உள்ளனர். மேற்படி நிகழ்வு மூலம் இஸ்லாத்தை ஏற்ற ஐந்து பேரின் பெயர்களைத்தான் கேட்கின்றேன். "எனக்குத்தெரிந்த இரண்டு பேர் இருக்கின்றார்கள், ஆனால் பெயரை சொல்ல முடியாது" என்ற பதிலுக்கு, பகிரங்கக் கருத்துப் பரிமாற்றக் களத்தில் எந்தப் பெறுமதியும் இல்லை.)
சகோதரரே, என்மீது தொடர்ந்தும் வீணாக குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றீர்கள். உங்களுக்கு எதில் அறிவில்லையோ, அதில் வீணாக தலையிடாதீர்கள்.
ஏற்கனவே, நான் டாக்ஸி ஓடும் நாடு என்று எதையோ நீங்களாக சொன்னீர்கள், பின்னர் நீங்கள் நினைத்த மாதிரி அதனை வாபஸ் வாங்கிக் கொள்கின்றேன் என்கின்றீர்கள்.
இப்பொழுது தக்வா என்பதனை மாற்றி தூய்மை என்று அர்த்தப் படுத்தியதாக ஒரு அபாண்டத்தை என்மீது சுமத்தியுள்ளீர்கள். "லகும் தீனுக்கும் வலியத்தீன்" என்பது குர்ஆன் வசனமா அல்லது கருத்தா என்று கூடத் தெரியாத நீங்கள், 'திரும்பத் திரும்ப குர் ஆனுக்கு தவறாக அர்த்தம் கொடுப்பதாக' வேறு என்மீது முத்திரை குத்துகின்றீர்கள், இவற்றை எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டன் என்றா நினைக்கின்றீர்கள்?
ஏன் என்மீது வீணாக, உங்களுக்கு அறிவில்லாத விடையங்களை இட்டுக் கட்டுகின்றீர்கள்? ஐரோப்பாவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் சென்றுள்ள உலமாக்களை அணுகும்படி ஏன் வீணாக சொல்கின்றீர்கள்? நான் எங்கே இருக்கின்றேன் என்பதில் கூட உங்களுக்கு எந்தத் தெளிவும், அறிவும் இல்லை. ஆனால், வார்த்தைகளை அள்ளி வீசுவதில் எவ்விதக் குறைச்சலும் இல்லை. இட்டுக் கட்டுவதை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்.
உரியவர் மன்னிக்காமல் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?