Header Ads



அமைச்சர் அதாவுல்லாவை வெளியேறுமாறு உத்தரவு

ஒமர் பாருக்
அமைச்சர் அதாஉல்லாவை அக்கரைப்பற்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் வாடி வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு தேர்தல்கள் ஆணையத்தினால் உத்தரவிடப்பட்டிருக்கின்றது.
 
அக்கரைப்பற்றில் தபால் மூல வாக்களிப்புக்களின் போது முறைகேடுகள் நடைபெறுவதாகக் கிடைத்த தகவல்களையடுத்து அங்கு அதிரடி விஜயம் மேற்கொண்ட தேர்தல்கள் ஆணையத்தின் அதிகாரிகளினாலேயே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
 
அமைச்சர் அதாஉல்லா அவர்கள் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை,
மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் அக்கரைப்பற்று வாடி
வீடுகளை தனது சொந்தத் தேவைகளுக்கும், தேர்தல்கால முஸ்தீபுகளுக்கும்
பயன்படுத்தி வருகின்றார்.
 
இதேவேளை அமைச்சர் அதாவுல்லா அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் சட்டங்களை கடுமையாக மீறி பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான சுற்றுலா விடுதி ஒன்றை பலவந்தமாக கைப்பற்றியுள்ளமை, இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பிரதேச வானொலி ஒன்றில் அமைச்சரின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நேரடியாக ஒலிப்பரப்பபடுகின்றமை,  தனக்கு தடையேற்படுத்தும் அதிகாரிகளை தேர்தல் முடிந்தவுடன் இடமாற்றம் செய்ய போவதாக பகிரங்கமாக தெரிவித்து வருகின்றமை ஆகிய முறைப்பாடுகள் இதில் அடங்கும் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. "கெட் அவுட் ஐசே" எண்டு சொல்லிப் போட்டினம் போல.
    பேந்து சனமும் "கெட் அவுட் ஐசே" எண்டு சொல்லுவினமோ?

    ReplyDelete
  2. அதாவுல்லவின் ஆட்டம் அடங்க ஆப்பு.

    ReplyDelete

Powered by Blogger.