Header Ads



மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்படுகின்றார் - அஸாத் ஸாலி

TM

"முஸ்லிம் சமுதாயத்திற்காக எனது பதவியை தூக்கி எறிந்து விட்டு இன்று கிழக்கு மாகாண சபை தேர்தல் களத்தில் குதித்துள்ளேன். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக யார் எதைச் செய்தாலும் எதைக் கூறினாலும் அதற்கு எதிரக குரல் கொடுப்பேன்''  என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான அஸாத் ஸாலி கூறினார்.
 
காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அஸாத் ஸாலி,
 
 "முஸ்லிம் சமுதாயத்திற்காக எனது பதவியை தூக்கி எறிந்து விட்டு இன்று கிழக்கு மாகாண சபை தேர்தல் களத்தில் குதித்துள்ளேன். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக யார் எதைச் செய்தாலும் எதைக் கூறினாலும் அதற்கு எதிரக குரல் கொடுப்பேன்.
 
 சரத் பொன் சேகா அன்று இராணுவ தளபதியாக இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கூறிய கருத்துக்களை கண்டித்தவன் நான். அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது சரத் பொன்சேகாவை எதிர்த்தேன். அந்த நேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்தேன். தற்போது மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்படுகின்றார். அதற்காக நான் எனது பதவியை தூக்கியெறிந்து விட்டு இங்கு வந்துள்ளேன்.
 
 தம்புள்ள பள்ளிவாயலை உடைப்பதற்கு 24 மணித்தியாலயங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசி ஊடாக பள்ளிவாசல் விடயமாக கதைத்தேன். நீங்கள் போற இடமெல்லாம் பள்ளிவாசல் கட்டுகிறீர்கள் அதற்கு ஜனாதிபதி என்னிடம் பதிலளித்தார்.
 
 அந்த பள்ளியால் 65 வருடங்களாக அவ்விடத்தில் இருக்கின்றது இதை அங்குள்ள அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோனிடம் கேளுங்கள் என கூறினேன். இதையடுத்து இந்த பள்ளிவாயல் விடயமாக ஜனாதிபதியிடம் அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் கதைத்த போது அப்பள்ளிவாயலை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் என உத்தரவிட்டார் இதையடுத்து இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறினேன்.
 
 அநுராதபுரத்தில் தொடங்கிய பள்ளிவாசல் உடைப்பு தெஹிவளையில் பள்ளிவாசலை மூடிய சம்பவம் வரைக்கும் தொடர்ந்துள்ளது. தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தில் அந்த தேரோவை கைது செய்யவில்லை ஆனால் நான் அவ்வாறு ஒரு பௌத்த விகாரைக்கு முன்பாக நடந்திருந்தால் என்னை இது வரைக்கும் மறியலில் வைத்திருந்திருப்பார்கள்.
 
 எனவே தான் நமது முஸ்லிம் சமுதாயத்தின் தனித்துவத்தையும் அடையாளங்களையும் பள்ளிவாயல்களையும்  பாதுகாக்க நாம் அனைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.

1 comment:

  1. Dear Asath Saly, if you are really honest in your speech, please tell your leader Hakeem to resign from government because in your point of view, Mahinda and his government (SLMC is also included in it enjoying ministerial posts)are against muslims.

    What I can't understand is why you joined the SLMC which is also a part of this government, I mean if you really hate this Mahinda government, then you hate SLMC too as it is also a part of it. So please please don't decieve the people, people are not that fool as you think. We still remember your honest role in the Hajj committee under Mahinda government.

    ReplyDelete

Powered by Blogger.