அமைச்சர் றிசாத்தை புகழ்கிறர் ஜயரத்ன ஹேரத்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
எங்கு பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றார்களோ, அங்கு சென்று மக்களுக்கு பணியாற்றும் ஒருவர்,எமது அமைச்சர் றிசாத் பதியுதீன் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பிரதி அமைச்சருமான ஜயரத்ன ஹேரத் தெரிவித்துள்ளார்.
மன்னார் உப்புக்குளம் பள்ளிவாசில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.மன்னார் நீதி மன்றில் தொடரப்பட்ட வழக்கினையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியயையடுத்து பிரதி அமைச்சர் நேற்று மாலை உப்புக்குளம் பள்ளிவாசில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து பிரார்த்தனை நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார்.
அங்கு தொடர்ந்து அவர் பேசும் போது,
இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் முக்கிய பங்கை வகிப்பவர்.அமைச்சரவையில் மிகவும் சிலாகித்து பேசக் கூடியவர்.அதே போன்று எமது நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்சிக்கு எமது அமைச்சர் சார்ந்துள்ள அரமைச்சின் செயற்பாடு மிகவும் முக்கியமானது.இவ்வாறு மக்களால்,அரசாங்கத்தினால் விரும்பப்படும் ஒருவரின் செயற்பாட்டை முடக்குவதற்கு சில சக்திகள் செயற்படுவதை யாவரும் அறிவீரகள்.அரசாங்கத்தின் மீது சேறு பூசுவதற்காக பல்வேறு சோடிக்கப்பட்ட கதைகளை கட்டவிழ்த்து விட்டு நடக்காததை நடந்ததாக கூறுவது நியாயமற்ற செயல்.
எமது நாட்டின் நீதிமன்றம் அதனது சுயாதீன செயற்பாட்டை செய்கின்றது.அதில் எவருக்கும் தலையைிடும் உரிமையில்லை,அந்த விடயத்தில் எவ்விதமாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.எமது அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து நீதி மன்றம் அவருக்கு அழைப்பாணைவிடுத்திருந்தது.அமைச்சர் நீதி மன்றத்தின் செயற்பாட்டுக்கு மதிப்பளிப்பவர் என்பதால்,இந்த நாட்டில் நீதித் துறையின் சட்டவாக்கத்தின் தளமாக விளங்கும் பாராளுமன்றத்தின் அங்கத்தவர் என்பதினாலும்,அதனை மதித்து மன்றில் ஆஜராகியது,எமது அரசாங்கத்திற்கு பெருமையளிக்கின்றது.
அதே போல் நீதித்துறையும் நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதை தமது இலக்காக கொண்டு செயற்படுவதால்,மன்றில் ஆஜரான சட்டத்தரணிகளின் வாதங்களை நன்கு கேட்டறிந்து தமது தீர்ப்பை வழங்கியதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.இந்த நாட்டில் சட்டமும்,ஒழுங்கும் உயர் ஸ்தானத்தில் இருக்கின்றதை என்பதை நாம் தெளிவாக கூறி வைக்கவிரும்புகின்றோம்.
சில எதிர்கட்சிகள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்லும் வகையில் செயற்படுவதைன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கப்படுகின்றன.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் நேர்மையான செயற்பாடுகள் வடக்கு மக்களுக்கு எவ்வித தடங்களும் இல்லாமல் சென்றடைவதை நாம் உறுதிப்படுத்துகின்றோம்.இன்று அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் அணிதிரண்டுள்ள வடக்கு மக்களின் அனைத்து நலனோம்பும் திட்டங்களுக்கு எமது பங்களிப்பு என்றும் உள்ளது என்றும் பிரதி அமைச்சர் ஜயரத்ன ஹேரத் கூறினார்
Post a Comment