ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தால் அரபுநாட்டு நிலை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும்..!
அஸ்ரப் ஏ. ஸமத்
2005ம் ஆண்டில் ஐனாதிபதி வேட்பாளாராக போட்டியிட்ட ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அன்று வெற்றிபெற்றிருந்தால் கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் ஒன்றுக்கு நீங்கள் முகம்கொடுத்திருக்க மாட்டீர்கள். ரணில் அன்றே வடகிழக்கு இணைத்து அம்மாகணத்திற்கு சுயஆட்சியையும் வழங்கியிருப்பார். அதன்பிறகு அமேரிக்கா அரபு நாடுகளில் உட்புகுந்து அமைதியாக இருந்த நாடுகளை சின்னாபின்னமாக்குவது போன்று இலங்கையிலும் ஊடுருவி வடக்கையும் கிழக்கையும் தனிஈழமாக பிரித்துக் கொடுத்திருக்கும. அதன் பிறகு அமேரிக்க படைகள் இலங்கையின் நிலப்பரப்பில் தங்கியிருந்திருக்கும். இங்கு உள்ள வளங்களையும் சூரையாடியிருக்கும். என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அம்பாறை கச்சேரியில் முவினத்தைச் சேர்ந்த 178 குடும்பங்களுக்கு 25.5 மில்லியன் ருபாவை வீடமைப்புக் கடன்களை வழங்கி வைக்கும் வைபவத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ்நாட்டில் கருனாநிதியும், முதலமைச்சர் ஜெயலலிதாவும் இலங்கைத் தமிழர்களுக்காக முதலைக் கண்னீர் வடிக்கின்றனர். இவர்களது தமிழ்நாட்டிலேயே மக்கள் பட்டிணியாலும் மற்றும் அடிப்படை வசதிகளுமின்றியும் மக்கள் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் இவர்களது அரசியல் நிகழ்ச்சிநிரல் இலங்கைத் தமிழர்களுக்காக ஏதேனும் ஒன்றைக் கூறி நாளுக்குநாள் கூறிவருகின்றது.
அதற்கு முட்டுக்கொடுப்பதற்கு இலங்கையில் உள்ள தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் பாவிக்கின்றனர். இந்த தமிழ் நாட்டுத் தலைவர்கள் நாளுக்கு நாள் அரங்கேற்றும நிகழ்வுகளுக்கு இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே உள்ள எந்த ஊடகமும் கணக்கெடுப்பதில்லை. ஆனால் இலங்கையில் உள்ள ஊடகங்கள்தான் இதனை முன்பக்கத்தில பிரசுரித்து முக்கியத்துவம் கொடுக்கின்றது. எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
வடக்கில் வாழும் மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்ற மக்களையும் விட சகல வசதிகளுடனும் இங்கு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது சகல அடிப்படை வசதிகளையும் மகிந்த ராஜபக்ச அரசு செய்து கொடுக்கின்றது. அத்துடன் இப்பிரதேச மக்கள் தமது பிரதேச மாகாண மற்றும் உள்ளுராட்சி பாராளுமன்ற பிரதிநிதிகளை தேர்தல் முலம் தெரிவு செய்து தமது அபிவிருத்திகளைப் பெற்றுக் கொண்டு வருகின்றனர். என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
Post a Comment