Header Ads



தம்புள்ளை புண்ணிய பூமி அபிவிருத்தியை துரிதப்படுத்த மஹிந்த ராஜபக்ஸ உத்தரவு

தம்புள்ளை நகர அபிவிருத்தி மற்றும் புண்ணிய பூமி அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ரங்கிரி தம்புள்ளை ரஜமகா விஹாரைக்கு சென்று வெள்ளிக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்தே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். தம்புள்ளை நகர அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ரங்கிரி தம்புள்ளை விஹாராதிபதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கல தேரர், ஜனாதிபதியிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், அதில் சில குறைபாடுகள் உள்ளதாக சுமங்கல தேரர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து தொலைபேசி ஊடாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரை தொடர்புகொண்ட ஜனாதிபதி அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இன்று முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் அங்கு வருகை தந்திருந்த பக்தர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். இதனையடுத்து அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் மஹாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஜனாதிபதி ஆசிபெற்றார்.


குறிப்பு - புண்ணிய பூமி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், அப்பகுதியிலுள்ள அல்லாஹ்வின் இல்லம் அகற்றப்படும் சாத்தியமிருப்பதாக முஸ்லிம்கள் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளமையும், அங்குள்ள பள்ளிவாசலை அகற்ற பௌத்த தேரர்கள் 6 மாத கால அவகாசம் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




6 comments:

  1. ஜனாதிபதியும் அரசும் முஸ்லிம்களை எமாற்றுகின்றதா இல்லையா என்ற முடிவு தெரிந்தாக வேண்டிய நேரம் நெருங்குகின்றது.

    ReplyDelete
  2. Allah Poathumaanavan - Al hamdulillah

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்

    இன்று முஸ்லீம்களின் ஒரு முக்கியமான பிரச்சனை என்னெவென்றால் எமது மத சம்பந்தமான அனைத்து சுதந்திரங்களும் எமக்கு சாதகமாக இருக்கின்றனவா அல்லது எமக்கும் எமது சந்ததிகளுக்கும் எமது பூர்வீக நாடாகவும் காலா காலம் தொட்டு நாம் வாழ்ந்து தொழுது வந்த பள்ளியில் இப்படி எமது நாட்டின் ஜனாதிபதியே இப்படி களவாக இருமுகம் வைத்து பாரபட்சமாக ஆட்சி செய்யும் போது எமது முக்கிய கடமை எமது மத, கலாச்சார, கல்வி, சுகாதார, நீதி,பாதுகாப்பு சம்பந்தமாக அரசுடன் பேரம் பேசக்கூடிய சக்கிதிகளைதான் எமது அரசியல் பிரதிநிதிகளாக்க வேண்டும் இதை விட்டு தொடர்ந்து பாமர மக்களை மாகாண ரீதியாக ஏமாற்றும் கைங்கரியத்தை அனைத்து முஸ்லீம் அரசியல்வாதிகளும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    முதலில் இந்த பள்ளி விவகாரத்த்யும் முஸ்லீம்களுக்கு இளைக்கும் அநீதிகட்கும் ஒரு முடிவை தேடவேண்டும் இதற்க்கு நடுவர்களை சர்வதேச அமைப்புகள் நிதி வழங்கும் நாடுகளையும் நாடவேண்டும் இது எவ்வளவு சாத்தியமோ தெரியாது இந்த உயிருக்குப்பயந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் என்னென்னவோ வாக்குறிதிகளை விட்டுவிட்டார்களோ தெரியாது மொத்தத்தில் அனைபேரும் பூச்சாண்டி விளையாட்டில் இறங்கியுள்ளனர் இதை கிழக்கு தேர்தலுக்கு பின்னர் விளன்கிகிக்கொள்வர் முஸ்லீம் மக்கள்

    ReplyDelete
  4. ivan pillyai killi um vittu thottilayum aattuhiraan

    ReplyDelete
  5. முஸ்லிம்களுக்கு எதிரான மத துவேசம் அண்மைய சனத்தொகை கணிப்பீட்டின் பின்னரே தலைவிரித்தாடுகின்றது.எனவே பௌத்தர்கள் எமது வளர்ச்சியைக்கண்டுதான் அஞ்சுகின்றனர்... இதுதான் இயற்கையின் நியதி என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை...காரணம் அவர்கள் வேதத்தையுடையவர்கள் அல்லர்.சாதாரண ஒரு மனிதனின் கோட்பாட்டை மதமாக ஏற்று அந்த தனிமனிதனை கடவுளாக பின்பற்றி வாழ்பவர்கள்... அவர்களுக்கு எவ்வளவு அழகாக எடுத்துக்கூறினாலும் புரியப்போவதில்லை....இவ்வாறான் பிடிவாதம் கொண்ட எந்தனை சமூகத்தை இஸ்லாம் கண்டுள்ளது...இறைவன் அவர்களை பூண்டோடு அளித்து அவர்களின் சுவடுகளை அத்தாட்சியாக எமக்கு விட்டுவைகவில்லையா..?இன்னும் சில சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தி அவர்களைக்கொண்டு இஸ்லாத்தை வியாபிக்கவில்லையா?......

    இன்ஷா அல்லாஹ் ......

    இன்று அவனது மார்கத்திக்கு எதிராகவும்,அவனது புனித இல்லங்களுக்கு எதிராகவும் செயற்படுபவர்களின் சந்ததியைக்கொண்டு புதிய பள்ளிவாயல்களை நிர்மாணிக்க செய்வான்... இதுதான் இன்று ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறுகின்றது..
    ஏன் இந்த ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவைக்கொண்டே ஒரு பள்ளிவாயலை கட்டுவிக்கலாம்

    அல்லாஹ் மிகப்பெரியவன்..அவனே யாவும் அறிந்தவன்..

    ReplyDelete
  6. இஸ்லாத்த்திற்கு எதிரான யுத்தமொன்றுக்கு துாபமிடும் நிலை சிங்கள்,கத்தோலிக்க மத தலைவபர்கள் சிலரால் முன்னெடுக்கப்படுகின்றது.அதனை தட்டிக் கேட்க முடியாத நிலை காணப்பட்ட போதும்,எமது தரப்பு நியாயங்களளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல நவமணி,விடிவெள்ளி,எங்கள் தேசம்,மீள்பார்வை உள்ளிட்ட முஸ்லிம் நலன்கள் காக்கும் இணையத்தளங்களை பயன்படுத்துவோம்.குறிப்பாக யாழ் முஸ்லிம் செய்யும் பணி அளப்பறியது....வாழ்க

    ReplyDelete

Powered by Blogger.