Header Ads



மியன்மார் முஸ்லிம்களுக்காக பிரார்த்தியுங்கள் - ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்



“முஃமின்கள் யாவரும் சகோதரர்களாவர்” இது இறைவாக்காகும். “ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமின் சகோதரனாவான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இதற்கமைய முஸ்லிம்களின் விடயத்தில் சகோதர முஸ்லிம்கள் கரிசனை காட்டுவதும், அவர்களுக்கு உதவி செய்வதும், ஒத்துழைப்பு நல்குவதும், அவர்களுக்காக பிரார்த்திப்பதும் ஈமானில் நின்றும் உள்ளதாகும். மனிதாபிமானத்தின் அடிப்படையில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் உதவி ஒத்துழைப்பு நல்குமாறும் இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

அண்மையில் பர்மா மியன்மாரில் நடைபெற்றுவரும் மனிதப் படுகொலைகள் முழு உலக மக்களின் உள்ளங்களையும் கவலை கொள்ளச்செய்கின்றது. பெருந்தொகையான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டு, உடைமைகள் அழிக்கப்பட்டு, மஸ்ஜித்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வரலாறு காணாத அழிவுகளை அவர்கள் எதிர் கொண்டுள்ளனர். புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க்கக்கூட  முடியாமல் தவிக்கின்றார்கள். 

எனவே, அவர்களுக்காக குறிப்பாக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின் பிரார்த்தனை செய்யுமாறும், பொதுவாக சகல நேரங்களிலும் அவர்களுக்காகவும், சிரியா நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களுக்காவும், மற்றும் அல்லற்படும் சகல முஸ்லிம்களுக்காவும் துஆச் செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டிக்கொள்கின்றது.   


அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்

உதவிப் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

5 comments:

  1. அல்லாஹ் உலக முஸ்லிம்களை முஸ்லிம்களாக வாழவைபானாக தொழுகையைகொண்டும் பொறுமையை கொண்டும் தன்னிடம் உதவி தேடுபவர்களாக முஸ்லிம்களை மாற்றிவிடுவானாக முஸ்லிம்களின் மாற்றங்களை கொண்டு உலகம் முழுக்க முஸ்லிம்களுக்கு சாதகமான விளைவுகளை மகதான அல்லாஹ் தோற்றுவிப்பானாக

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்!
    பாதிக்கப்பட்டவர்களின் துஆக்களை அல்லா நிச்சயம் ஏற்றுக்கொள்வான் நாம் அனைவரும் பிராத்தனை செய்வோம்.
    அல்லாவுக்காக நமது அரசியல்வாதிகளை உலமா சபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள்.அவர்களின் இனவாத பேச்சும்,மார்க்கவிரோத பேச்சும்,அல்லாவின் கோபத்தை நம் சமூகம் மீது சாட்டிவிடும்,சகலவற்றிலும் வரம்பு மீறி நடக்கிறார்கள்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இலங்கை முஸ்லிம்களுக்கு துஆ செய்யலாம் என்கின்ற ஒரு விடையம் இதுவரை கொஞ்சமும் தெரியாமல் போய் விட்டதே, ஐயையோ,.......
    இப்பொழுது உலமா சபை சொல்லிவிட்டார்கள், இதன் பிறகுதான் மக்கள் முதல் தடவையாக துஆ செய்யப் போகின்றார்கள்.

    உலமா சபையினரே, உங்களுக்கு இதைத் தவிர வேறு என்னதான் சொல்லத் தெரியும்?

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்.

    யாராது தூரத்தில் ஒரு குரல். மியன்மாரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடலும் மன்னோடு மன்னாகிப் போயிருக்கும். இவர்களுக்கு இப்போதுதான் ஞானம் வந்ததோ? இவ்வளவு நாளும் தூங்கிக் கொண்டிருந்ததாக்கும். அதற்குள் "அவர்கள் எழுதியிருக்கின்றார்கள். முஃமின்கள் யாவரும் சகோதரர்கள் " என்று இவ்வளவு நாளும் தெரியாமலா போய்விட்டது உங்களுக்கு. இல்லை நமக்கேன் வீண் வம்பு என்று பயத்தில் இருந்ததாக்கும். இனியாவது திருந்தப் பாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.