இராணுவ புல்டோசரால் மோதிக் கொண்டது தப்பில்லை - இஸ்ரேல் அநீதிபதியின் தீர்ப்பு
இஸ்ரேல் இராணுவ புல்டோசரில் மோதி கொல்லப்பட்ட அமெரிக்க செயற்பாட்டாளர் ரசெல் கொரியியின் மரணம் ஒரு விபத்து என இஸ்ரேல் நீதிமன்றம் 9 ஆண்டுகள் கழித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு காசா பகுதியில் உள்ள பலஸ்தீனர்களின் வீடுகளை இஸ்ரேல் இராணுவம் புல்டோசர் கொண்டு தகர்ப்பதற்கு எதிராக செயற்பட்ட 23 வயது கொரியி மேற்படி புல்டோசரில் சிக்கி மரண மடைந்தார்.
இதற்கு எதிராக அவரது பெற்றோர் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அதில் இந்த மரணதுக்காக அவரது பெற்றோர் வெறுமனே ஒரு டொலர் அபராதம் கோரியிருந்தனர்.
ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒடட் கெர்ஷொன், இந்த மரணத்திற்கு நஷ்டஈடு கோர எந்த உரிமையும் இல்லை என்றும் இஸ்ரேல் விசாரணையில் தெரியவந்தபடி இந்த விபத்தில் இராணுவத்தினரின் எந்த தவறும் இல்லை என்றும் நேற்று தீர்ப்பளித்தார்.
‘எனது குடும்பத்திற்கு மட்டுமல்ல. மனிதாபிமானம், மனித உரிமைக்கும் இன்று கெட்ட தினம்’ என்று நீதிமன்ற தீர்ப்பு குறித்து ரசெல் கொரியியின் தாய் சின்டி கொரியி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எனினும் இச்சம்பவத்தில் புல்டோசரை ஓட்டியவர் அப்போது கொரியியை காணவில்லை என இஸ்ரேல் அரச வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட் டுள்ளது. இதில் இந்த விபத்தின் போது புல்டோசரை ஓட்டிய இராணுவ வீரர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப் படவில்லை என்பதோடு அவரது அடையாளமும் வெளிப்படுத்தப்படவில்லை.
கடந்த 2010இல் அவர் மூடிய அறையில் நீதிமன்ற விசாரணைக்கு உள்ளானார். அதன்போது அவர் தாம் கொரியியை காணவில்லை என வாக்குமூலம் அளித் துள்ளார். இது குறித்து கொரியின் தந்தை கிரேக் கொரியி கூறும்போது; ‘முன்னாள் இராணுவ வீரரான நான் வியட்னாமில் புல்டோசர்களை ஓட்டியிருக்கிறேன்.
புல்டோஸருக்கு முன்னாள் இருப்பவை பற்றி ஓட்டுனர் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். நான் நினைக்கிறேன் அவர்களுக்கு அது தெரியும்’ என்றார். பலஸ்தீனத்திற்கான சர்வதேச ஒருமைப்பாட்டு முன்னணியில் பணிபுரிந்த கொரியி தான் கொல்லப்படும் போது ரபா மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலால் பலஸ்தீன் வீடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக வன்முறையற்ற முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார். கொரியியை கெளரவிக்கும் முகமாக காசாவில் ஆண்டுதோறும் நினைவு கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. tn
What’s the name of the Israel Judge? Is it Judson?
ReplyDeleteஅடியடா சக்கை..
ReplyDeleteஜொங் அய்யர் சோக்கா ஒரு கேள்வி கேட்டுப் போட்டார்.
சனத்துக்கு ஜூட்சன் எண்டாலே கள்ள ஜட்ஜு எண்டு விளங்கிட்டுது, கண்டியலே!