Header Ads



''சிறுவர் துஷ்பிரயோகம்'' - பாடசாலைகளில் முறைப்பாட்டு பெட்டி


சிறுவர் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்கள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக பாடசாலைக்குள் முறைப்பாட்டு பெட்டிகளை வைப்பதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய, இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள் தாம் எதிர்நோக்கிய பிரச்சினை தொடர்பான முறைப்பாட்டை எழுதி குறித்த பெட்டிகளுக்குள் இடுவதற்கு முடியும் என அவர் கூறினார். இவ்வாறு கிடைக்கப்பெறும் தகவலுக்கு அமைய அடுத்த கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாலியல் துஷ்பிரயோகம், வேறு விதமான கொடூர வன்முறைகள் மற்றும் சிறுவர்களை கவனத்திற்கொள்ளப்படாமை போன்ற சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தற்காலத்தில் அதிகளவு காணப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக மாணவர்கள் தமது முறைப்பாட்டில் விரும்பினால் பெயரை குறிப்பிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

1 comment:

  1. நல்லதிட்டம்.
    முறைப்பாட்டுப் பெட்டிகள், எல்லா மாணவர்களும் இலகுவில் அணுகக் கூடிய இடங்களில் வைக்கப் பட வேண்டும். மேற்படி பெட்டிகளின் கட்டுப்பாடு, பிரதேச போலிஸ் அதிகாரியின் வசமே இருக்க வேண்டும்.
    ஆசிரியர்களோ, அதிபரோ எக்காரணம் கொண்டும் மேற்படி பெட்டியைத் திறக்கவோ அல்லது அதன் மீது ஆதிக்கம் செலுத்தவோ அனுமதிக்கப்படக் கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.