Header Ads



அரசாங்கம் செய்கின்ற மிகப்பெரிய அநியாயம் - ரவூப் ஹக்கீம்


நூர் ஷிபா

நாங்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் வெறும் போடுகாய் தான் என்ற நிலைமை உள்ளது. போடுகாயா இல்லையா என்பதை இந்த செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின் பிறகு எமது கட்சி நிரூபித்துக் காட்டும்.

இவ்வாறு நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் நகரில் நடைபெற்ற கட்சியின் கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த புனித ரமழான் நோன்பு மாதத்தில் அரசாங்கம் இந்தத் தேர்தலை வலிந்து வரவழைத்திருக்கின்ற நோன்பு நோற்றிருக்கின்ற நிலையில் சுற்றித்திரிந்த பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில், இப்தார் நிகழ்வுகளின் ஊடாக ஆன்மீகத்துடன் சேர்த்து நாம் அரசியலையும் பேச வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளோம்.
இவ்வாறான ஒரு நிகழ்வை அக்கரைப்பற்றில் நடத்த முற்பட்ட போது ஆன்மீகம் எங்கோ போய்விட்டது. எமது எதிராளிகள் மத்தியில் ஆன்மீகம் பற்றிய அச்சம் எதுவுமே இருக்கவில்லை என்பது அன்று துலாம்பரமாக தெரிந்தது. இருந்தாலும் கட்சியுடைய அரசியல் முன்னெடுப்பு அநியாயம், அடாவடித்தனம் ஆகியவற்றில் ஈடுபடுவோரை மிகைத்து மேலோங்கி வருகின்றது.

இதனை அந்த ஊரிலும் அதற்கு அப்பாலும் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் விழிப்புணர்ச்சியையும், மாற்றங்களையும் பார்க்கும் போது நன்கு புரிகின்றது. அரசாங்கத்தின் மேலிடம் ஏதோவொரு தேவைக்காக வலிந்து வரவழைத்த தேர்தலாக இத் தேர்தல் மாறியிருக்கிறது.

இந்த நாட்டிலே முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாதத்தைப் பற்றியும் அதனோடு தொடர்புபடுத்தி வேறொரு விஷயத்தையும் பேசப்போய் நான் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். இதைத் தவிர இன்னொரு விதமான பயங்கரவாதமும் உள்ளது. அது தான் அடிக்கடி தேர்தல் நடத்துகின்ற பயங்கரமாகும். இந்த ஜனநாயக பயங்கரவாதம் அடிக்கடி இந்த நாட்டில் அரங்கேறி வருகிறது.

வேறு யாருக்கும் இந்த தருணத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற தேவையிருக்கவில்லை. ஆனால், அரசாங்கம் தங்களுடைய சர்வதேச அரசியலில் ஏற்பட்டுள்ள சில சரிவுகளை சரிசெய்துகொள்வதற்காக இத் தேர்தலை நடத்துவதாக பரவலாகப் பேசப்படுகிறது.

தேர்தல் நடத்தாமல், தேர்தல்களை பின்போட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்தது போல் அல்லாமல் அடிக்கடி உங்களுக்கு தேர்தலை தருகிறோம் என்று தொண்டைக்குழிக்குள்ளால் தேர்தல்களை வலிந்து திணிக்கின்ற நிலைமையை இன்று பார்க்கின்றோம்.

என்னைப் பொறுத்தமட்டில் கட்சியுடைய பார்வையில், அரசாங்கம் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளுக்கு முரணாகச் செய்கின்ற ஒரு மிகப்பெரிய அநியாயம் இதுவென்று சொன்னாலும் அது மிகையாகாது. நாட்டின் அரசியல் யாப்பில் பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தைக்கொண்டு வந்து, வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்காக அவர்களது வாழ்விடங்களில் அவர்களது ஆட்சியை அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதை நோக்கமாக கொண்டு தான் பதின்மூன்றாவது சட்டத்திருத்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த சட்டத்திருத்தில் உள்ள முக்கியமான அம்சம், ஒரு முதலமைச்சருக்கு ஆட்சியை கொண்டு நடத்தக் கூடிய பெரும்பான்மை இருக்கிற பொழுது அந்த மாகாண சபையை ஆளுநர் தாம் நினைத்தவாறு கலைத்துவிட முடியாது. முதலமைச்சர் தாமாக விரும்பி, கலைத்துவிடுமாறு பதவி விலகினாலே ஒழிய ஆட்சியை களைக்க முடியாது. எங்களது மாகாண சபை உறுப்பினர்கள் ஒரு பிரேரணைக்கு சார்பாக வாக்களித்தார்கள்.

முதலமைச்சர் முன்மொழிந்த பிரேரணை, நேர காலத்தோடு இந்த மாகாண சபை கலைக்கப்படுவதை உறுப்பினர் அனைவலும் எதிர்க்கிறோம் என்பதாகும். இந்த சபை நேர காலத்தோடு கலைய வேண்டும் என விரும்பவில்லையென்று ஒரு பிரேரணையையே  நிறைவேற்றினார்கள். 

அவ்வாறு நிறைவேற்றி ஒரு மாதகாலம் போகவில்லை, அதை நிறைவேற்றியவர்களே அரசாங்கத்திற்கு ஒரு சத்திய கடதாசியை கையளித்தார்கள். நாங்கள் இந்த மாகாண சபையை முன்கூட்டியே கலைப்பதற்கு சம்மதிக்கிறோம் என அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதனை எங்களிடம் பெறுவதற்கு அவர்கள் முற்படவில்லை. ஏனென்றால், அவர்கள் எங்களை கணக்கில் எடுக்கவே இல்லை.

நாங்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தாலும், முஸ்லிம் காங்கிரஸ் வெறும் போடுகாய் தான் என்ற நிலைமை உள்ளது. போடுகாயா இல்லையா என்பதை இந்த செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதியின் பிறகு எமது கட்சி நிரூபித்துக் காட்டும்.

இப்பொழுது மாற்றுக் கட்சியினருக்கு சாப்பாட்டில் ஊறுகாயை தொடுவது போல முஸ்லிம் காங்கிரஸை தொட்டுக்கொள்ளாமல் திருப்தியே இல்லை. முஸ்லிம் காங்கிரஸை சாடாமல் அல்லது முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை சீண்டாமல் ஒரு கையறு நிலையில் அரசாங்கம் இருப்பதைப் போல அதற்கு சார்பாக பிரசாரம் செய்பவர்கள் காட்டமான விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.

ஆனால், நாங்கள் கடந்த ஒன்றரை வருட காலமாக மாகாண சபைக்குள் இந்த சமூகத்துக்கு நடந்த அநியாயங்களை பற்றி கூறிய பெரிய பட்டியலே உள்ளது. அதனை இப்பொழுது நான் வாசிக்க வரவில்லை. ஆனால், முதலமைச்சர் என்ற பதவி வெறும் பொம்மை தான். அதுவும் ஒரு போடுகாய் தான். பெரிய டாம்பீகமாக பீடிகையோடு பாதிக்கக் கூடிய சட்ட மூலங்கள் வந்தால் அவற்றை எதிர்ப்பதாக சொல்வார்கள். ஆனால், மேலிடம் அழைத்து வற்புறுத்திச் சொன்னால் வாலைச் சுருட்டிக்கொண்டு அந்த சட்டமூலங்களில் ஏதாவது நன்மையைப் பற்றி பேசக்கூடிய ஒரு நிலைவரமும் இருந்தது. முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்தால் தான் அவ்வாறான சட்டமூலங்களை கைவிடுகின்ற நிலை இருந்தது.

சமூகத்தின் மனச்சாட்சியை பிரதிபலிப்பதாகவே எங்களது நடவடிக்கைகள் இருந்தன. கடந்த மாகாண சபைத் தேர்தலில் நான் இந்த திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டது எல்லோருக்கும் தெரியும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையே வந்து திருகோணமலையில் களமிறங்கியதற்கான காரணம், இந்த மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றி, அதனூடாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் அரசியல் செல்வாக்கு என்ன என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தான் நான் பாராளுமன்ற ஆசனத்தை துறந்து வந்து போராடி, இரண்டு ஆசன வித்தியாசத்தில் தான் நாங்கள் மாகாண சபையை இழந்தோம்.

எப்படியான மோசடிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மோசடிகளுக்கு நிறைய ஆதாரங்களை நாங்கள் சமர்பித்து நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தோம். ஆனால், நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தால் அந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவது இலேசான  விஷயமல்ல என்பதை நீதியமைச்சராகிய நானே சொல்லியாக வேண்டியிருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் தீர்ப்புக் கிடைப்பதற்கு அடுத்த தேர்தலும் வந்து அதற்கு அப்பாலும் சென்றுவிடும். நாங்கள் வீணாக எங்களது காலத்தையும் பணத்தையும் விரயம் செய்யாமல் அந்த மனுவை நாங்கள் வாபஸ் பெற்றுக்கொண்டோம். ஆனால், அந்த மனுவில் இருக்கிற உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. இன்று கூட அதனைச் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையாளருக்கு நான் நீண்டதொரு கடிதத்தை எழுதியுள்ளேன்.

இந்தத் தேர்தலிலும் அப்படியான மோசடிகள் நடக்காமல் மாற்று வழிவகைகளை தேர்தல் ஆணையாளர் கையாள வேண்டுமென்று அந்த கடிதத்தில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

திருகோணமலை மாவட்டத்தில் இந்தத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான போட்டியில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த சந்தர்ப்பத்தில் மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம், ஆட்சி அமைப்பதும், எங்களுடைய செல்வாக்கை வெளிப்படுத்துவதும் என்ற விஷயத்திற்கு அப்பால் இன்றிருக்கின்ற சூழலில் இந்த சமூகத்திற்கென்று பேசுகின்ற, போராடுகின்ற, தனித்துவமான இயக்கமொன்று தேவையா, இல்லையா என்பதாகும். இந்த கேள்விக்கு மக்கள் பதில் சொல்லவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

கடந்த தேர்தலிலும், முந்திய சில தேர்தல்களிலும் நாங்கள் மாற்றுச் சின்னங்களின் முதுகுகளில் சவாரி செய்தோம். அதனூடாக ஆசனங்களை அதிகரித்துக்கொள்கின்ற ஒரு மாயாஜால வித்தையை செய்து வந்திருக்கிறோம். ஆனால், அண்மைக்கால நிகழ்வுகளை பார்க்கின்ற பொழுது இந்த ஆசனங்களைக் கூட்டிக்கொள்கின்ற இந்த விகிதாசார தேர்தல் முறையின் விசித்திரத்தின் ஊடாக நடாத்திக்காட்டும் மாயாஜாலத்தினால் சமூகம் எந்த நன்மையையும் அடையவில்லை.

எங்களுடைய சொந்தக் காலில் தனித்துவமாக நாங்கள் பெறுகின்ற ஆசனங்களின் பெறுமானத்தை கூட்டிக்கொள்வதினால் தான் இந்த சமூகத்தில் இருக்கின்ற நன்மதிப்பையும், சுயகௌரவத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்கான வழியே ஒழிய, மாற்றுச் சின்னங்களில் போய் நாங்கள் சங்கமமாகி ஆசனங்களை கூட்டிக்கொள்ளும் வியூகத்தினால் எங்களுக்கு பெரிதாக நியாயங்கள் நடந்துவிட்டதாக நான் காணவில்லை.

அரசாங்கத்தில் பாராளுமன்றத்தில் ஆளுந்தரப்பில் நாங்கள் எண்மர் இருக்கின்றோம். அமைச்சுப் பதவிகளென எங்களுக்கு அடைமொழிகள் கொஞ்சம் இருந்தாலும், அந்த அடைமொழிகளை வைத்துக்கொண்டு இந்த சமூகத்தின் அரசியலை நாங்கள் சரிவரச் செய்வதற்கு ஏதாவது வழி கிடைத்திருக்கின்றதா என்றால் பகட்டுக்கும், வாகன வசதிகளுக்கும் மாத்திரம் தான் சிறிது இருக்கிறது என்ற பார்வையில் தான் இன்று மத்திய அரசியல் சமன்பாடு காணப்படுகிறது.

இப்போதுள்ள அரசியல் சமன்பாட்டில் முஸ்லிம் சமூகத்தின், இந்த தனித்துவமான இயக்கத்தின் ஆசனங்கள் என்பன பெரியதொரு தாக்கத்தை செலுத்தக் கூடியதாக இல்லையென்பது கண்கூடாகத் தெரியும் விஷயம். அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டு அபிவிருத்தியைப்பொறுத்தவரை எங்களை எவ்வாறு ஓரக் கண்ணால் பார்க்கின்றார்கள் என்பது பற்றி நாங்கள் நிறைய விரக்தியோடு பேசலாம்.

சும்மா கையறு நிலையில் இருந்து இந்த அரசியலை இவ்வாறு செய்து கொண்டு போனால், இல்லையென்றால் இந்த தனித்துவமான இயக்கத்தின் அரசியல் ஆற்றலை இப்படியான கிழக்கு மாகாணத்தில் கட்சியின் அரசியல் இருப்பிடம் அல்லது உறைவிடம், அதனுடைய கேந்திர நிலையமாக இருக்கின்ற இந்த பிரதேசத்தில் இந்த சமூகத்தின் அரசியல் செல்வாக்கை அடுத்த ஆட்சியை நாங்கள் இல்லாமல் அமைக்க முடியாது என்பதை நிரூபிப்பதன் மூலம் செய்து காட்ட உள்ளோம்.

அமைச்சுப் பதவிகளோடு சேர்த்து மத்திய அரசில் எட்டுப்பேர் இருந்து பவனி வருவதை விடவும், சொந்தக் காலில் எமது மரச் சின்னத்தில் போராடி ஆளும் கட்சியையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், எந்தத் தரப்பையும் எங்களுடைய ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது என்ற ஓர் உன்னத நிலையை உணர்த்துவது தான் மிகச் சிறந்த மாற்றுவழி என்று தான் இந்த வியூகத்தை நாங்கள் மேற்கொண்டோம்.

பொதுவாக மக்கள் மத்தியில் இன்று தங்களுடைய ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் அள்ளிக்கொட்டுவதற்கு ஓரு வடிகாண் தேவைப்படுகின்றது. அதற்காக முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் தனித்துப் போட்டியிடுவதை பெருமகிழ்ச்சியோடு இந்தச் சமூகம் வரவேற்கின்றது என்பதை எங்கு சென்றாலும் காண முடிகின்றது.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் சொல்லொண்ணாத அடாவடித்தனங்களுக்கு மத்தியில் இந்தக் கட்சி களமிறங்கி ஐக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து வெல்லுகின்ற நிலைமை காணப்பட்டது. ஆனால், இன்று ஐக்கிய தேசிய கட்சியின் நிலைமை உண்மையிலேயே பரிதாபமாக இருக்கிறது. அக் கட்சிக்கு அம்பாறையில் இரண்டு ஆசனங்களும், திருகோணமலையில் ஓர் ஆசனமும் மட்டும் தான் கிடைக்கும். இதைவிட முழு மாகாணத்திலும் அவர்கள் மூன்று ஆசனங்களுக்கு  அப்பால் செல்வது என்பது மிக அபூர்வமான விஷயமாகும்.

இன்று எதிர்க்கட்சி பலவீனமாக இருக்கின்றது என்பதால் தான் ஆளும் கட்சியின் அகங்காரம், ஆணவம் என்பன அதிகரித்திருக்கிறதென அநேகர்; எடைபோட்டிருக்கிறார்கள். ஆனால், என்னதான் ஆணவம், அகங்காரம் என அரசியல்வாதிகள் மத்தியில் இருந்தாலும், கிராமப்புறங்களில் அந்த செல்வாக்கின் தாக்கம் படிப்படியாக சநிவடைந்து கொண்டே செல்கின்றது என்ற யதார்த்தத்தை எங்கு சென்றாலும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தை அடைவதற்கான வழிவகை பதவிகளும், அவற்றோடு சேர்ந்து வரும் அனுகூலங்கள் என்பவற்றை விடவும், இந்த சமூகத்தின் மனச்சாட்சியாக இருக்கிறோம் என்ற விஷயத்தை தான் நாங்கள் முன்னிலைப்படுத்த வேண்டும். அப்படியான ஓர் சூழ்நிலையில் நாங்கள் வாழ்கிறோம்.

நெருக்கடிகளைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. முடிவுக்கு வந்த யுத்தத்தின் பயனாக இன்று பாரிய அபிவிருத்தி படாடோபமாக நடக்கிறது. இந்த அபிவிருத்தி பாராட்டத்தக்கது தான். ஆனால், முடிவுக்கு வந்த யுத்தம் மக்களுக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறதா? இன்று விதவிதமான அச்சுறுத்தல்கள், நெருக்கடிகளை நாங்கள் அடிக்கடி எதிர்நோக்குகின்றோம்.

சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் ஓருவிதமான பீதி மனப்பான்மையை உருவாக்கி. அவர்கள் அச்ச மேலீட்டினால் எவ்வாறான எதிர் நடவடிக்கைகளுக்கு துணிவார்கள் என்பதை பரீட்சித்துப் பார்க்கின்ற நிகழ்வுகளாகத்தான் கிரீஸ் மனிதன் விவகாரம் சென்ற ஆண்டு புனித நோன்பு காலத்தில் அரங்கேறியதாகக் கூறுகிறார்கள். 

இந்த நோன்பு காலத்தில் அங்குமிங்குமாக சிதறி வாழும் முஸ்லிம் சமூகம் ஆன்மீகக் கடமைகளை நிம்மதியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்த நாடு அமைதியை நோக்கி பயணிக்கின்றதா? என்ற ஒரு கேள்வி யுத்த வெற்றியின் பின்னர் எழுந்துள்ளது. எங்களுடைய அடிப்படை உரிமைகள், சமய கலாசார தனித்துவம் என்பன எங்களிடம் இருந்து பறிக்கப்படுகின்ற ஒரு சூழலில் நாம் வாழ்கின்றோம் என்பதையிட்டு இந்த சமூகம் சஞ்சலமடைகின்றது.

இதற்கு மத்தியில் தான் அரசாங்கம் வலுக்கட்டாயமாக ஒரு தேர்தலை இப்பொழுது திணித்திருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வரும்போது, வடக்கில் தேர்தல் நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் சொல்கிறார். கிழக்கில் தேர்தல் கேட்டால் அவரது கட்சிக்கு கிடைக்கும் பின்னடைவு காரணமாகத் தான் இங்கு தேர்தல் வேண்டாம் என்றும் வடக்கில் தேர்தல் நடாத்துமாறும் அவர் கூறுகிறார். அதேவேளையில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களும், பேச்சாளர்களும் முஸ்லிம் காங்கிரஸை இலக்கு வைத்து தான் பேச தலைப்பட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அந்தஸ்த்து எத்தகையது என்பது தேர்தல் முடிவிலிருந்து தெரிய வரும். இந்த மக்கள் இயக்கம் கிழக்கு மண்ணில் முஸ்லிம்களின் அபிமானத்திற்குரிய பேரியக்கம் என்பது மேலும் உறுதிப்படுத்தப்படும். 

இப் பொதுக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சி அமைப்பாளருமான எம்.எஸ்.தௌபீக், மாகாண சபை வேட்பாளரான ஆர்.எம். அன்வர், ஹஸன் மௌலவி (அஸ்ஹரி), சட்டத்தரணி லாஹிர், சனூஸ், ஜெஸீம் மௌலவி உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 




8 comments:

  1. திருகோனமலை முஷ்லிம் மக்கல் பாவம். ஹகிம் உடைய உனர்ஷ்ஷிப்பெஷ்ஷு தெர்தலோடு முடிந்துவுடும் சந்தெகமெ இல்லை செப்டெம்பெர் 10 ஒரு அரிக்கை விடுவார் அரசு துரோகம் செஇது விட்டது தேர்தல் மோசடி அது நிஷ்ஷயம். அவர்கலுடய இரன்டு உருப்பினர் அரசுடன் அமைஷ்ஷராக இனைவர் அதுவும் உருதி. அதில் ஒன்ரு ஹசன் மொஉலவி. பொருத்து இருந்து பாராருன்கல் கேம் எப்படி போஹுது என்டு. இப்படி ஹகேம் ஒவ்வொரு தெர்தலுக்கும் உனர்ஷ்ஷிஉடன் பெசுவார் மக்கலை மடயர்கலாக்கி மக்கல் பாவம்.

    ReplyDelete
  2. எல்லாம் சரி. என் மரமண்டைக்கு புரியாத சில விடயங்களுக்கு விடை தருவீகளா அமைச்சர் அவர்களே!
    தற்போதைய அரசாங்கத்தில் நீங்கள் வெறும் போடுகாய் மட்டும் தான் என்றால் ஏன் இந்த அரசாங்கத்திலும் அமைச்சுப்பதவியிலும் ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள். விலகிவிடலாமே?
    இந்த அமைச்சுப்பத்வியால் கிடைக்கும் கௌரவம், இராணுவப்பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சலுகைகளைத் தவிர சமூகத்திற்கு என்ன நன்மை ?
    தேர்தல் மேடைகளில் கூறுவதை எப்போதாவது பாராளுமன்றில் முழங்கியிருக்கிறீர்களா?
    ஏன் கிழக்கில் மரத்திலும் மற்ற இடங்களில் வெற்றிலையிலும்? ஏன் இந்த இரட்டை வேடம்?
    முழுக்க நனைந்தாகி விட்டது முக்காடு (அமைச்சுப்பதவி) எதற்கு? வீசி விடுங்கள் மரம் தலை நிமிர்ந்து நிற்கும் இன்ஷா அலலாஹ் நீங்கள்தான் கிழக்கின் முதலமைச்சர்!

    ReplyDelete
  3. MR. ABU AAMIDH,
    YOUR OPINION IS CORRECT BUT I LIKE ONLY PARLIAMENTARIAN POST. PROVINCIAL POST FACILITY NOT ENOUGH THEREFORE MORE FACILITY I CAN GET IT FROM THE PARLIAMENT ALSO I AM CABINET MINISTER MORE AND MORE CAN BE ENJOY WITH MY LIFE THIS IS MY TARGET.THANKS

    ReplyDelete
  4. அமைச்சர் அவர்களே பதின்எட்டாம் சரத்துக்கு ஆதரவு அளித்ததை பற்றியும் பேசுங்களேன்

    ReplyDelete
  5. Both of you, Ramalan and Aamid, are absolutely correct. Before blaming the government Hakeem should resign from the government. The truth is that he, being a cabinet Minister, enjoys all the privileges from the government and speaks nothing against it in Parliament or in the presence of H.E. the President Mahinda Rjapaksha. He defends the government there but here in the Eastern Province he pretends that he defends the Muslims. I believe that the Muslims in the East will teach him a good lesson in the election rejecting him and his men.

    ReplyDelete
  6. ரமளானுக்கு சிறந்த தமிழ் கண்டுபிடிப்பாளருக்கான கலாநிதி பட்டத்தையும் (தமிழை புரியாத முறையில் புதிய புதிய மொழியில் கூறுவதற்காக)
    போங்க சார் புரியும் மொழியில் கருத்து சொல்லுங்க
    உங்கள திருத்திட்டு மற்ரவர திருத்த வாருங்க ஊர் குருவி பருந்தாக முடியாது உலக மகாசணங்கள் உங்கட ஊத்த கருத்துக்களையும் பார்ஹ்து சகிக்க வேண்டியுள்ளது.

    மற்றவர்களிடம் குறை தொடர்பில் நீங்கள் விரல் நீட்டும் போது உங்களை சுட்டி நான்கு விரல்கள் இருப்பதை மறந்து விடவேண்டாம்.
    உங்களிடம் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம் அதனை நாகரியமான முறையில் செல்வதுதான் நாகரிகம்

    ReplyDelete
  7. OK My dear brothers MUHAMMAD RAMALAN Also ABU AAMIDH. So what your going to saying?tell us to whom we have apply our votes.and witch party if come to power to roiling batter to help our Muslims?????

    ReplyDelete
  8. தம்பி யுசுஃப் இஷ்லாம்,
    உன்கலைப்போல முலு முட்டால் இந்த இலன்கயில் இருக்கும்வரைக்கும் கக்கிமுன், கட்ஷியும், வாலும். எப்ப நின்கல் எல்லாம் திருந்துவேன்க்லொ அல்லாதான் அரிவான்??????????????ஹகேமுடய காதில உன்கட இந்த் கருதுகல சொல்லிப்பாருன்க எதாவது விலன்குதா என்டு அவருக்கு எல்லாம் விலன்கும்.னேன்கதான் மடயர்கல்............?

    ReplyDelete

Powered by Blogger.