Header Ads



இலங்கையை நோக்கி இந்தியா ஏவுகணைகளை நிறுத்தவில்லையாம் - வெளிவிவகார அமைச்சு

நெடுந்தூரம் பாயக்கூடிய இந்திய அக்னி வகையான ஏவுகணைகள் இலங்கை உட்பட தெற்காசியாவில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களுக்கு குறி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசைல் த்ரெட் டொட் கொம் என்ற இணையத்தளத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இலங்கையில், கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்கள் கட்டுநாயக்க, ரத்மலானை மற்றும் மத்தளை வானுர்தி நிலையங்கள், இராணுவ தலைமையங்கள், புத்தளம் அனல்மின் நிலையம், மற்றும் கெரவலபிட்டிய, களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலையங்கள் உட்பட பல முக்கிய இடங்களை இந்த ஏவுகணைகள் குறி வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

அமெரிக்க கலிபோர்னியாவை தளமாக கொண்டுள்ள இந்த இணையத்தளம் இன்று விடுத்துள்ள அறிக்கையின்படி இந்திய ரோ எனப்படும் புலனாய்வு பிரிவில் இருந்து உயர் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையிலே இந்த ரகசியம் வெளியாகியுள்னது.

சீன தலைநகர் பீஜிங்கில் இந்தியா சார்பாக பணியாற்றிய வேளையிலே இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
 
இதேவேளை, மிசைல் த்ரெட் டொட் கொம் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானவை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.