Header Ads



புத்தரின் எழும்புகளை தந்த இந்தியா, இலங்கைக்கு எதிராக ஏவுகணைகளை தயார் செய்கிறது

இந்தியா, இலங்கையில் பரம விரோதி என்று தேசபற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இலங்கை சீனாவுடன் பாதுக்கப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின் தவிசாளர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையின் மிக முக்கிய பாதுகாப்பு பிரதேசங்களை நோக்கி இந்தியா அக்கினி ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் எமக்கு அறிய கிடைத்துள்ளது. இந்தியாவின் இந்த இரட்டை வேடத்தினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு புறம் தந்த தாதுக்களை அனுப்புகின்றது. மறுபுறத்தில் இலங்கைக்கு எதிராக அக்கினி ஏவுகளைகளை தயார் செய்கிறது. இதிலிருந்து இந்தியா எமக்கு பரம விரோதி என்று புலனாகிறது.

1 comment:

  1. தந்த தாது இருக்குதெண்டு சொல்லி வேள்விப் பூஜையை நிப்பாட்டிப் போட்டினம். உயிரக் கொல்லக்
    கூடாதாம்.
    பேந்து இந்தியா ஏவுகன அடிச்சாலும், தந்த தாது இருக்குது எண்டு சொல்லிப் போட்டு திருப்பி அடிக்க மாட்டினமாக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.