யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களில் வடிகால் அமைப்பு
பா.சிகான்
யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட முஸ்லீம் பிரதேசங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் கிராம சேவகர் ஜே-86 பிரிவில் உள்ள ஹாதி அபூபக்கர் வீதி ரூபா 12 இலட்சம் செலவில் வடிகால் அமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கான நிதியுதவியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வழங்கியுள்ளது.
யாழ் சொன்கதேருவின் வடிகால்கள் எல்லாம் அப்படியே உள்ளனவே. வீடுகளும் வீதிகளும் தானே அழிவடைந்து உள்ளன. ஏன் வீணாக கான் கட்ட செலவழிக்கும் பணத்தை வீதிகளை திருத்தவோ அல்லது வீடமைக்கவோ வழங்கலாம் அல்லவா?
ReplyDeleteஉங்கள் கருத்தில் ஒருவகையில் நியாயம் உள்ளது. எனினும், வெறும் 12 லட்சம் ரூபா மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். சுவர்கள் மட்டும் உடைக்கப் படாமல் எஞ்சியிருக்கும் வீடொன்றை திருத்தி, மின்சார இணைப்பையும் மீளப் பெறுவதற்கு 8 லட்சம் ரூபா வரையான தொகை செலவாகின்றது. சொனகதேருவில் பெரும்பாலான வீடுகளில் சுவர்கள் கூட இல்லை.
ReplyDeleteவீடுகளும், வீதிகளும் அழிவடைந்துள்ளது போலவே, வடிகால்களும் அழிவடைந்தே காணப்படுகின்றன. நாவலர் வீதி, ஜின்னா வீதி,
மானிப்பாய் வீதி போன்ற சில பகுதிகளில்தான் வடிகால்கள் நல்ல நிலையில் உள்ளன. (ஜின்னா வீதி என்பது சொனகதெருவிலிருந்து நீங்கிவிட்ட பகுதி போன்று முஸ்லிம் வாசம் குன்றிக் காட்சியளிக்கின்றது) ஏனைய வீதிகளில், கான் என்ற பெயரில்
வீதியோரமாக கழிவு நீர் தேங்கி நின்று நுளம்புப் பெருக்கத்திற்கு இடமளிப்பதனைக் காணலாம்.
அதிகமான வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுகின்றன, ஒரு சில வீதிகளில் மின்விளக்குகள் இல்லை.
இதில் எதையாவது முன்னேற்ற எடுக்கப் படும் முயற்சிகளை வரவேற்று, முழுப் பயனைப் பெற முயல்வோம்.