அஸாம் பிரச்சினை எரிமலை போன்று எப்போது வெடிக்கலாம் - அத்வானி எச்சரிக்கை
இந்தியப் பாராளுமன்றம் புதன்கிழமை கூடியது. இதன்போது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது,
அசாம் இன கலவரங்களுக்கு மூல காரணமே, வங்கதேசத்தவர் ஊடுருவல் தான். அதை சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன. ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை பல ஆண்டுகளாக, காங்கிரஸ் மெத்தனமாக கையாண்டு வருகிறது. உண்மையில் ஒரு எரிமலை போல உள்ளது அசாம் மாநிலம். எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம். அசாமில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், வங்கதேசத்தவர் ஊடுருவல் காரணமாக, அங்குள்ள 11 மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாகி விட்டனர். அதேநேரத்தில், காலங்காலமாக வாழ்ந்து வந்த அசாம் மக்கள் சிறுபான்மையினராகி விட்டனர்.
இது முழுவதுமாக தெரிந்தும் கூட, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. பல ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி இறைத்து, ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு சட்டவிரோதமான அரசு. ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை கூட, இந்த அரசு சிறையில் தான் அடைத்தது. இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டதாக, மத்திய அரசு இருப்பதால்தான், அசாம் பிரச்னை தீவிரமாகியுள்ளது. இவ்வாறு அத்வானி பேசிய போது, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
Post a Comment