Header Ads



செபஸ்டியனிடம் ஒரு வேண்டுகோள்...!


(தமிழ் இணையமொன்றின் கருத்துப்பகுதியில் வெளியாகியிருந்த குறிப்பையும், அதற்கு முஸ்லிம் சகோதரர் ஒருவர் எழுதியுள்ள் காத்திரமான பதில் குறிப்பையும் இங்கு தருகிறோம்)

மூபா சூளா
sebastian on August 1, 2012 11:57 am
நீதி அமைச்சர் கவனத்துக்கு

இங்கே கீழே தரப்படும் விடங்களை மூதூரிலிருந்து விரட்டப் பட்ட தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கிறேன்.

ஆலஞ்சேனை எப்படி ஆலிம்நகராக மாறியது எப்படி?

மூதூர் ஜெட்டியிலிருந்து புளியடிச்சந்தி வரைக்கும் இருந்த தமிழ் மக்களுக்கு நடந்தது என்ன? இவர்கள் எங்கே எப்படி இருந்த இடம் தெரியாமல் போனார்கள் இந்த வழியே இருந்த நவரத்தினம் மதுபானக் கடை அடையாளமாக இருந்நது எப்படி இப்போ விளையாட்டு அரங்காக மாறியுள்ளது? ஏன்? எப்படி?

முஸ்லீம் பிரதேசங்களில் இருந்த இராணுவ முகாம்கள் எப்படி உடனடியாக அகற்றப்படுகிறது இதற்காக காரணங்கள் என்ன? முன்பு தமிழர்களின் கிராமமான 64ல் இப்போது முஸ்லீம் கிராமமாக மாறியுள்ளது எப்படி? மூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம் உதவி முகாமையாளர் ராமச்சந்திரன் சலீம் தலைமையில் கொல்லப்பட்டது?

ஏன்? எப்படி? மூதூர் பிரதேச சபையில் ஒரு தமிழர் உதவி பிரதி தலைவராக கூட இல்லை ஆனால் வடகிழக்கின் வேறு இடங்களில் உள்ள பிரதேசங்களில் முஸ்லீம்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில்(யாழ்) முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகின்றது முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள தமிழர் சிறுபான்மையாக உள்ள இடங்களில் மூஸ்லீம்களால் வழங்கப்படுவதில்லை.

இப்படியான தமிழர் பிரதிநிதித்துவம் பற்றிய பேச்சின் காரணமாகவே முஸலீம்களால் வி எஸ் தங்கராசா ஜிகாத்தினால் கொல்ப்பட்டார் இது தமிழ் கிராமங்களை இணைத்து பிரதேச சபை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டதாகவும் இது சில பகுதிகளில் முஸ்லீம்களை சிறுபான்மையினராக்குவதாகவும் கருதியியே இவரது கொலை நடைபெற்றதாக பேசப்படுகின்றது. இதே போலவே மூதூரில் விஏ தங்கராசாவும் டாக்டர் அந்தோனியும்(கத்தோலிக்கர்) கொல்ப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.

தமிழர் பிரதேசத்திற்காக பஸ்ஓட அனுமதிகொடாமல் முஸ்லீம் அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டதிற்கான அடிப்படைக்காரணம் என்ன?

பிரதேசங்களில் முஸ்லீம் ஆட்டோகாரர்களின் உழைப்பிற்காகவே அதுமட்டுமல்ல மூதூர் அண்டிய பிரதேசங்களிலும் தமிழ் ஒருவர் இது வரை ஆட்டோ ஓட்ட முடியாது அப்படி ஒருவர் ஆட்டோ ஓடினால் அவர் கொல்ப்படுவார்.(இது சந்தேகத்திற்க்கு இடமில்லாத கருத்து) தமிழர் பெரும்பான்மையினராக உள்ள இடங்களில் இருக்கும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் பாதுகாப்பு முஸ்லீம் பகுதிகளில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்க்கு வழங்கப்படுவதில்லை இத பற்றி கேட்போது முஸ்லீம்களுடன் மக்களுடன் மட்டுமே உறவுகொள் சகோதரன் என்று சொல் மற்வர்களுடன் அல்ல என்ற கருத்துப்பட பதில் வந்ததாம்.

மூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் மனேஜர் நாகரத்தினம் மயில்வாகனம் பள்ளி குடியிருப்பை சேர்ந்தவர் வேலை முடிந்து வரும் போது முஸ்லீம்களால் துரத்தப்பட்டு அடிக்கப்பட்டு இனிமெல் தமிழன் முஸ்லீம் பிரதேசத்திற்க்கு வேலைக்கு வரக்கூடாது என் மிரட்டப்பட்டார் ஏன்?(உறவினர்கள் சாட்சியமாக உள்ளனர்)

1990களில் சலீம் (முஸ்லீம் பயங்கரவாதி) தலைமையில் மூதூரில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது எப்படி? யார் இந்த அலுவல்களுக்கு உறுதுணையாக இருந்தது விலாசங்களை பார்த்து அந்தக் காலங்களில் தமிழ் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு கொலை செய்ப்பட்டனர் விசாரணைகள் எங்கே? ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா?

இந்த பயங்கரவாதிக்கும் இராணுவத்திற்க்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்த முஸ்லீம் கட்சி? எது?இயக்கம் எது?

பல தமிழ்ப் பெண்களை முஸ்லீம் அரச இராணுவத்துடன் இணைந்து வேலை செய்தவர்களும் இவர்களுக்கு ஆதரவானவர்களும் தமிழ்ப் பெண்களை கற்பழித்தனர் அழகான பெண்கள் தெரிவு செய்பயப்பட்டு அவர்களின் கணவர்களை இராணுவ காவலில் வைத்துவிட்டு பெண்களை கற்பழித்துவிட்டு இவர்களது கணவன்மார்களை இராணுவ முகாம்களிலிருந்து விடுதலை செய்தனர்.

எந்த ஒரு முஸ்லீம் பெண்ணோ தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் கற்பழிக்கவோ கேவலப்படுத்தப்படவோ இல்லை என்பதை இங்கு தெரியப்படுத்துகிறேன் எக்காலத்திலும் கிழக்கில் தமிழர்களால் இப்படியான சம்பவங்கள் நடாத்தப்படவில்லை தமிழ் பெண்களை கற்பழித்வர்களில் சலீம், சுரேஸ், காசிம், பாரூக் போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள் இப்படி கற்பழிக்கப்பட்ட பெண்கள் பலர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர் (சாட்சியம் உண்டு) ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா?

காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகளின் பின்னரான – ஆறுமுகத்தான் குடியிருப்பு அகதி முகாம் படுகொலை சத்துருகொண்டான் அகதி முகாம் படுகொலைக்கு இந்த கொலைகளை சலீம், காசிம் தலைமையில் முகாமை சுற்றிவளைத்து ஒவ்வொருவராக ஒருவாசலால் வர அழைத்து கொலை செய்தார்கள் (ஆதாரம்: எமில்டர் பற்றிமாகரன் நொக்சர்3) (மனித உரிமைகள் குழுவினர்க கூறியுள்ளனர்) இது வரையில் எந்த ஒரு முஸ்லீம் தலைவர்களும் இதற்காக மன்னிப்பு கேட்டதில்லை ஏன்? என்ற கேள்வி தமிழர்களிடையே எழுகின்றது? ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்களா..?

இது காத்தான்குடி கொலைகளுக்கு தமிழர் சார்பில் பலர் மன்னிப்பு கேட்டிருந்த போதும் இவற்றிக்கு எந்த முஸ்லீம் தலைவர்களும் மன்னிப்பு கேட்கவில்லையே! ஏன்?

உடையார் குடும்பத்திற்க்கு சொந்தமான நிலம் ஆலங்கேணியில் கைலாசபிள்ளை குடும்பம் செல்வம் குடும்பம் ஆகியோர்களை கடத்தி முஸ்லீம்களே கொலை செய்தனர் என்றும் இவர்களின் சொந்த நிலங்கள் முஸ்லீம்கள் பெயருக்கு மாற்ப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. எப்படி மாற்றப்பட்டது? எந்த அரசியல்வாதி இதன் பின்னால்? (முஸ்லீம்காங்கிரஸ் இதற்க்கு பொறுப்பு)

2006ல் மணற்சேனையில் விறகு வெட்டி விற்கும் தமிழரை முஸ்லீம் பகுதிகளில் விற்பவர் கொலைசெய்து உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (அவர்களது லான்மாஸ்டர் கையளிக்கப்படவில்லை) இந்த லான் மாஸ்டர் இன்றும் முஸ்லீம்களால் பாவிக்கப்படுகின்றதே அது எப்படி முடிகிறது?

யோகன் மகன் ஜதீஸ்வரனை பஸ்சிலிருந்து இறக்கி தமிழனை கொலை செய்ய வேண்டும் என்று கொலை செய்ப்பட்டது இவற்றிக்காக எந்த மூதூர் இஸ்லாமிய அமைப்பினரும் மன்னிப்போ அனுதாபமோ பேசவில்லை? ஏன்?

இப்போதும் 58 பிரதேசத்ற்க்கு தமிழர்கள் போக முடியாத நிலையே உள்ளதாக அறியப்படுகின்றது நிந்தாவூரில் பிள்ளையார் கோவில் இடித்தும் அதே இடங்களில் மக்கள் குடிசைகள் அழிக்கப்பட்டதும் இப்படியான சம்பவங்களுக்கு பின்னால் பல முஸ்லீம் அரசியல் தலைவர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னணியில் இருந்தாகவும் இதற்கான காரணம் முஸ்லீம்களுக்காக தொடர்ச்சியான பிரதேசத்தை பெறவே எனவும் தெரியவந்துள்ளது. இது சரியானதா?

இந்த கோயிலும் குடியிருப்பு காணிகளும் மக்களிடம் மீள கையளிக்கப்படுமா? இந்த விடயத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடுதான் என்ன?

ஈபிஆர்எல்எப் தோழர்கள் பலர் முஸ்லீம் அமைப்பினரால் வீடு தேடிச்சென்று கொல்ப்பட்டது இதற்காக யாரும் எந்த குரல் எழுப்பவில்லை ஏன்? சலீம்இ காசிம்இ மொக்கனிபாஇ வைத்துல்லா போன்றோர் துறைமுகத்திற்க்கு பக்கத்தே உள்ள புத்தர் கோயிலில் வைத்து தமிழ் பெண்களை கற்பழித்ததாக பெண்கள் கூறினர் அவர்களில் பலர் கற்பழிக்கப்பட்டவர்கள் லண்டனில் இருக்கிறார்கள் (மனித உரிமைகள் குழுவினர்க்கு கூறியுள்ளனர்)இந்த இராணுவத்துடன் இணைந்து இந்த வேலைகளை செய்த, கற்பழித்த, முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு முஸ்லீம் அரசியல் தலைவர்களின் ஆதரவு இருந்துள்ளது.

வைத்துல்லா முஸ்லீம் காங்கிரசின் தேர்தல் பிரச்சாரத்தின்போது கிறீஸ்தவ பெண்களில் மார்பில் கைவைத்து எல்லாரும் முஸ்லீம் காங்கிரஸ்க்கு வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தியதும் இல்லாவிட்டால் தான் மீண்டும் கொலைகளை ஆரம்பித்து விடுவேன் என்று பொது இடத்தில் வைத்து மிரட்டியுள்ளார் (இந்த இடத்தில் நின்ற பலர் சாட்சியங்களாக உள்ளனர்) வைத்துல்லாவுக்கும் முஸ்லீம் காஸ்கிரஸ்க்கும் உள்ள தொடர்பு என்ன?

முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள இடங்களில் தமிழர்களால் முஸ்லீம்கள் இப்படி இம்மிசைக்கப்படவில்லை என்பது ஆழமானகருத்து. மூதூரில் புனித அந்தோனியார் கோவில் தாக்குதலில் முஸ்லீம்கள் யேசுவின் சிலையை உடைத்து கடலில் போட்டனர் இதை மீள எடுத்து வந்து சிலையை திரும்ப நிலை நிறுத்தியதிற்காக டாக்டர் அந்தோனியை முஸ்லிம்கள் கொலை செய்யதனர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதி தலைவர் ரங்கா, சம்பூர் கூனித்தீவு சிவராசாவை தபாற்கந்தோர் பால்ராஜ் ஆசிரியர் வசந்தன் (கணித ஆசிரியர் இவர்களை கடத்தி கொலை செய்தனர்.

மல்சேனை 64ல் பஸ்சில் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் பலர் ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா? எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்? 1994ல் தேர்தல் காலத்தில் மூஸ்லீம் காங்கிரஸ் வெற்றிக்காக ஆனன்சேனை மூதூர் ரஞ்சன் மோகன் போன்றோர் கடத்தி கொலை செய்ப்பட்டனர் ராஜதுரை நாகேஸ்வரன் ராஜதுரை ரவிச்சந்திரன் சம்பூர் கட்டைப்பறிச்சான் கொலைகள் முஸ்லீம்களால் தமிழர்கள் இழந்த பிரதேசங்கள் உடைமைகள் உயிர்கள் மிகப் பல இதைப்பற்றி முஸ்லிம் தலைவரகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை முஸ்லீம்களால் நடைபெற்ற கொலைகளுக்கும் மன்னிப்பும் கேட்கவுமில்லை. எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்? ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை? இவர்கள் மனிதர்கள் இல்லையா? எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்?

திருகோணமலை லிங்க நகரில் 5 அல்லது 6 முஸ்லீம் குடும்பங்களே இருந்த காலத்தில் இவர்களுக்கு எந்த தமிழர்களும் எந்த இடைஞசல்களும் செய்வில்லை இவர்கள் திரகோணமலையில் பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்தே பள்விவாசல் கட்ட தமிழரே நிலம் வழங்கினார் இந்தப்பள்ளிவாசல் என்றுமே தாக்கப்படவில்லை மூதூரில் பல தமிழர்கள் தமிழர் கோவில்கள் சேர்ச்சுகள் தாகக்பட்டபோதும் இவைகள் பத்திரமாகவே இருந்தன தமிழர்கள் முஸ்லீம்களை இந்தக்காலங்களில் ஜனநாயகமாகவே நடாத்தினர்.

முஸ்லீம்களில் யார் இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் என்பது வெளியே வராத வரைக்கும் மூதூரில் நடைபெற்ற பல கொலைகளின் சாட்டியங்கள் ஜ நா மனித உரிமைக் குழுவிடம் பல பதியப்பட்டுள்ளன அதில் பல ஜரோப்பாவில் உள்ள சில முஸ்லீம் எழுத்தாளர்களுடைய பெயர்களும் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவாகவே முஸ்லீம்கள் தமது மதம் விடயத்தில் மட்டும் அக்கறையை காட்டிக்கொண்டு அதில் தமது எல்லா விடயங்களையும் வைத்து சவாரி செய்து கொள்வார்கள் தேவைப்படும்போது மதம் என்றும் இனம் என்றும் இலங்கை என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

ஆரையம்பதி காத்தான்குடி பிரச்சினைகள்: இந்த பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட முஸ்லீம் அமைப்பினர் யார்? எதற்காக செய்தனர் போன்றன வெளிப்படுத்தப்படல் வேண்டும் நீதி வெளிவர வேண்டும் இப்படியான சம்பவங்களுக்கு நீதி கிடைக்காமல் முஸ்லீம்களை தமிழர்கள் எப்படி சகோதர உறவுடன் அணுக முடியும் இவையே தமிழர்களில் பலர் முஸ்லீம்களுக்கு எதிரான குரோதங்களுக்கான காரணங்களுமாகும்.

அஸ்ரப் காலத்தில் தமிழர்களின் காணிகளில் கேட்காமலே துறைமுகம் கட்டப்பட்டும் அந்த காணி சொந்தக்கார் வழக்கு பதிவுசெய்தும் நட்ட ஈடு கொடுக்காமல் இழுபறிப்பட்டது. இப்டியாக என்றுமே முஸ்லீம் நிலங்களுக்கு அஸ்ரப் செய்யவில்லை.

உவைஸ்ஜை புலிகள் சுட்டதும் பாலைநகர் தமிழர்களை (சுத்திகரிப்பு தொழிலாளிகள்)யும் இந்திய வம்சாவழியினரையும் முஸ்லீம்கள் வீடு புகுந்து கொலைகள் செய்தனர்.

திருமலை கிண்ணியா துறைமுகத்திக்கு முன்பாக சலவை செய்யும் தொழிலாளிகள் வாழ்ந்த இடம் அங்கே பிள்ளையார் கோவில் உள்ளது இந்த பிரதேசத்தை பாராளுமன்ற உறுப்பினர் மகுரூப் முஸ்லீம்களுக்கு மட்டும் பிரதேசமாக்கினார்.

எத்தனை தமிழ் பிரதேசங்கள் இஸ்லாமிய பெயர் பெற்றன யார் இப்படி மாற்ற்ம செய்கிறார்கள் இதற்கான அடிப்படைகள் என்ன? அரசில் எப்படி இதற்காக அனுமதி கொடுக்கப்படுகிறது.

மூதூர் கல்வி பணிப்பாளர் ஆர் குணராசாவுடனான பல பிரச்சினைகள் வெளிவரல் வேண்டும்.இந்த பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட முஸ்லீம் அமைப்பினர் யார்? எதற்காகசெய்தனர் போன்றன வெளிப்படுத்தப்படல் வேண்டும் நீதி வெளிவர வேண்டும் இப்படியான சம்பவங்களுக்கு நீதி கிடைக்காமல் முஸ்லீம்களை தமிழர்கள் எப்படி சகோதர உறவுடன் அணுக முடியும் இவையே தமிழர்களில் பலர் முஸ்லீம்களுக்கு எதிரான குரோதங்களுக்கான காரணங்களுமாகும்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கல்வி பணிப்பாளர் கொலையுடன் இவை சம்பந்தப்படுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்ப்படுகின்றத இவற்றிக்கும் முஸ்லீம்களுக்கும் உறவு உள்ளதா போன்ற சந்தேகங்களும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கொலைகளுக்கும் முஸ்லும் அமைப்புக்கும் சம்பந்தங்கள் உள்ளதா போன்ற சந்தேகங்கள் உருவெடுத்துள்ளன.

அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை முஸ்லிம் ஆசிரியர்களால் நிரப்பி அவர்களை தமிழ் பாடசாலைகளில் வைத்து படிப்பித்தல் தொழிலை ஆரம்பித்து விட்டு பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக முஸ்லீம் கல்லூரிகளில் நியமித்தனர். ஜேவிபியினர் திருமலையில் ஒரு கருத்தரங்கு கூட்டத்தில் முஸ்லீம் அதிகாரிகளின் பாகுபாடு பற்றி பேசினர் இதன்போது பேசும்போது புலிகளின் பயங்கரவாத்ததைவிட முஸ்லீம்களின் அடிப்படைவாதம் மிக ஆபத்தானது என்றும் இதில் இலங்கையில் ஜிகாத் அல்கைடா புனித இஸ்லாமிய விடுதலை முன்னணிகள் மிக ஆபத்தானவைகள் எனவும் பேசினார்.

இப்படி பலதரப்பட்ட பிரச்சினைகளை இஸ்லாமியர்களால் இஸ்லாத்தின் பெயரால் திருகோணமலை மூதூர் கிண்ணியா சார்ந்த பிரதேசங்களின் மிகச்சிலவே இங்கு குறிப்பிட்டவைகள் மிகச்சிலவே. நீதி நியாயம் பேசுவது என்றால் இருபக்கமும் பேச வேண்டும்

செபஸ்டியன் அவர்களுக்கு 

தேசம்நெட்' வெளியிட்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் பற்றிய ஆக்கத்துக்கு நீங்கள் எழுதிய பின்னூட்டம் பார்த்தேன். கடந்தகாலத்தில் மூதூரில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்கள் பற்றியும் எழதியுள்ளீர்கள்.

முதலில் நாம் ஒன்றை மனங் கொள்வோம். இணையதளம் என்பது மக்கள் மத்தியில் சரியான கருத்துருவாக்கத்தைச் செய்யும் பணியை மேற்கொள்கின்ற ஊடகமாகும். அது எமக்குத்தருகின்ற வாய்ப்பை நாம் நேர்மையாகப் பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் போட்டள்ள முதூர் வன்முறைகள் தொடர்பான பல விடயங்களுள் சிலவற்றுடன் நான் உடன்படுகின்றேன். ஒரு வேளை மூதூராட்கள் 'தேசம் நெட்'ஐ பார்க்க மாட்டார்கள் என்ற எண்ணத்துடன் நீங்கள் எழுதியள்ளவற்றுடன் என்னால் உடன்பட முடியாதுள்ளது ஏனெனில் நான்மூதூரைச்; சேர்ந்தவன்.

கடந்த காலங்களில் மூதூர் முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையே வன்முறைச் சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. அது யாவரும் அறிந்த உண்மை. இதனை ஒரு வாதப் பொருளாக எடுத்தால், அதன்பின்னணி, நோக்கம் பற்றியெல்லாம் என்னால் உங்களோடு தாராளமாக வாதிட முடியும். உண்மையில் வாதப் பொருள் நடைபெற்ற விடயங்களாக மாத்திரமே இருக்கவேண்டும். கற்பனைக்கு இடந்தரலாகாது. அப்படியாயின் அதற்கு நான் தயார். என்பதை இங்கு கூறி வவைக்க வீரும்பகின்றேன். ஆனால் இங்கு நான் எடுத்துக்; கொண்ட விடயம் இதுவல்ல.

பொதுவாக பொய்கள் மூன்றுவகைப்படும் என்பர். 1. புளுகு 2. ஆண்டப்புளுகு 3. புள்ளிவிபரம் என்பர்.

அது இருக்க, செபஸ்டியன் என்பவர் மூதுர்ர் சேச் ரோட்டில் ஜெகதீசன் சேரின் வீட்டுக்கு முன்னால் வைத்து எனக்கு அடித்துவிட்டார் என வைத்துக் கொள்வோம். உடனே நான் கிறிஸ்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள் அவர்கள் ஒன்றில் தண்டிக்கப்படவேண்டியவர்கள் அல்லது தண்டித்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டியவர்கள் என நான் கூறினால் அது எந்த வகையில் நியாயமாகும் அதுவொரு பாசிச கருத்தியல் அல்லவா?

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் முஸ்லிம்களுக்கு அநீதியிழைத்தால் முஸ்லிம்கள், மொத்த தமிழினத்தையும் எவ்வாறு குற்றம் சுமத்துவது முட்டாள் தனமோ அவ்வாறுதான் முஸ்லிம் ஒருவர் ராணுவத்தை சேர்ந்தவராக இருந்தால் அவரை ஒரு ராணுவ வீரராகப் பார்க்கவிரும்பாது அதற்குமப்பால் அவர்சார்ந்த சமுதாயத்தை குற்றஞ்சாட்டவிளைவதுமாhகும்.
செபஸ்தியன் உங்களது பல குற்றச்சாட்டுக்கள் இந்தப்பணியிலேயே கற்பனையின் உச்சத்தை தொட்டு நிற்கின்றன.

 அவை வருமாறு,

1. அறுபத்திநாலாம் கட்டை என்ற தமிழ்கிராமத்தை முஸ்லிம்கிராமமாக மாற்றி விட்டார்கள் என்று குற்றம் சாட்டியள்ளீர்கள். அறுபத்திநாலாம் கட்டை எப்போது தமிழ்கிராமமாக இருந்தது. இப்பிரதேசத்தில் முஸ்லிம்களுடன் தமிழ்மக்களும் வாழ்ந்தார்கள். என்று எழுதுங்கள்.; சில காணிகளை தமிழ்மக்கள் முஸ்லிம்களிடம் வாங்கி அதற்கு சகாய புரம் என்றும் பெயர்வைத்து இப்போது இரண்டு இனமக்களும் மீள்குடியேறி வாழ்கின்றனர்.என்ற உண்மையை இன ஒற்றுமையை கருத்தில் கொண்டு எழுதுங்கள். (உள்ளுரில் இருந்தால் போய்ப்பாருங்கள். வெளியூரில் இருந்தால் வந்து பாருங்கள்)

2. ஜெட்டியில் இருந்த புத்தர்சிலைக்கு அருகில் இருந்த தமிழ் மக்கள் விரட்டப்பட்டார்கள் என்கிறீர்களே .ஜெட்டியில் எப்போது செபஸ்டியன் புத்தர் சிலையும் அதற்கு பக்கத்தில் தமிழ்மக்களும் இருந்தனர்??? இது ஒரு புதிய கண்டபிடிப்பல்லவா மட்டுமல்லாமல் இது முன்றாம் வகைப் பொய்யல்லவா? வெளியுலக வாசகர்கள் உண்மையென நம்பிவிடுவார்களல்லவா? இன ஒற்றுமையில் உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை உள்ளதா?

3. மூதூரில் தமிழர் ஒருவர் ஆட்டோ ஓட்டமுடியாது. ஓட்டினால் கொல்லப்படுவார் என்றொரு அபாண்டத்தை கூறியிருக்கின்றீர்கள். இதனை நீங்கள் முதூருக்கு வந்து சேச்சுக்கு முன்னால் நின்று அங்கு காட்சியளிக்கும் குழந்தை ஏசுவைப்பார்த்து சொல்ல முடியுமா? அல்லது முதூரில் உள்ள ஒரு தமிழ் அன்பரை இதற்கு சாட்சி சொல்லச் வைக்க முடியுமா?

4. முஸ்லிம்கள் கோவிலை உடைத்தார்கள். ஆனால் லிங்க நகரில் பிள்ளையார் கோவிலுக்கு அருகிலேயே உள்ள பள்ளிவாசலை விட்டுவைத்திருக்கின்றோம். ஏங்கள் பெருந்தன்மை பார்த்தீரோ என்கிறீர்கள். ஐயா செபஸ்டியன்! எனக்கும் லிங்கநகர் தெரியும் .நண்பர்களைத்தெரியும். நீங்கள் சொல்வது போலொரு காட்சி எங்கே ஐயா இருக்கிறது? வாசகர்களை என்ன நினைத்துக் கொண்டீர்கள். இப்படி ஏரோப்பிளேன் ஓட்டுகிறீர்களே!!!!!உங்கள் பின்னுட்டத்தை லிங்க நகர் வாசியொரவர் வாசித்தால் பரவாயில்லையா?

5. கிண்ணியாவில் பழைய இறங்கதுறைக்கருகே உள்ள கோவிலை மஹ்ருப் அவர்கள் அருகிலேயுள்ள பள்ளிவாhசலுக்கு எடுத்துவிட்டார். இது என்ன நிதி. இதற்கெல்லாம் யார் பதில் சொல்வது? முஸ்லிம்களும், முஸ்லிம் காங்கிரசும் தான் பதில் சொல்ல வேண்டும். என்கிறீர்கள். இப்படி பின்னூட்டத்தின் பெயரில் பற்பல கற்பனைகளை எடுத்து விட்டிருக்கின்றீர்கள்.
அன்பின் செபஸ்டியன் அவர்களே, நீங்கள் மூதூரை நன்கு தெரிந்தவராகையால் கிண்ணியாவையும் தெரிந்து தான் இருப்பீர்கள். பள்ளிவாசலுக்காக எடுக்கப்பட்டுவிட்தென்று கூற்றம் சாட்டிய கோவில் எந்த விக்கினமுமின்றி அதே இடத்தில் அப்படியே இருக்கிறது. அந்த நீண்ட கிண்ணியாப்பாலத்தில் நின்றேனும் அல்லது தாராளமாக காலாற நடந்து அருகில் சென்றேனும் அப்புண்ணியஸ்தலத்தைப்பார்த்தச் செல்லுங்கள். தயவு செய்து உங்கள் கற்பனைக் குதிரையை கட்டுக்குள் கொண்டுவாருங்கள். இது மகா ஆபத்தான சண்டிக்குதிரை.

இனங்களின் நல்லுறவின் பெரில் அன்பர் செபஸ்டியனிடம் ஒரு வேண்டுகோள் செபஸ்டியன் அவர்களே ஏதோவொரு ஆவேசத்தில் இப்படியெல்லாம் நீங்கள் எழுதிவிட்டதாகத்தான் நான் நினைக்கின்றேன். உலகம் முழுவதும் பார்க்கப்படுகின்ற இணையதலங்களில் எழுதும் போது தயவு செய்து ஆறுதலாக எழுதுங்கள்.

3 comments:

  1. செபஸ்தியான் அவர்களே நீங்கள் சொல்லும் கட்பனைக் கதைகளில் ஒருபக்கம் மட்டுமே சொல்லப் படுகிறது. புலிகளாலும் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் முஸ்லிம்களுக்கு இணைக்கப் பட்ட அநீதிகள் அட்டூழியங்கள் கோழைத் தனமான படுகொலைகள் எதையும் நீங்கள் சுட்டிக் காட்ட வில்லை. எனவே தாங்கள் ஒரு நடுநிலை தவறிய எழுத்தாளன் என்பது புரிகிறது. அதனால் தங்கள் கட்டுரையில் உள்ள உண்மைத் தன்மைகள் கேள்விக்கு உரியவை.

    நீங்கள் எழுதியுள்ள விடயங்கள் எல்லாம் 1990 இக்கு பிறகே நடந்துள்ளதாக கதை காட்டியுள்ளீர்கள். ஆனால் 1990 இல் இடம் பெற்ற காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலை (103 பேர்) ஏறாவூர் சதாமியபுரம் படுகொலை (122 பேர்) இப்படி கொள்ளப் பட்ட 950 முஸ்லிம்களை பற்றி கூறப் படவில்லையே. பஸ்ஸில் வந்தவர்களை எரித்தீர்கள் (38 பேர்) கடத்தி கடத்தி சுட்டீர்கள் இதையெல்லாம் பார்த்துக் கொடிருக்க நாங்கள் என்ன பாறாம் கற்கலா ? புலிகள் தொடக்கி வைத்தார்கள் அதை யாரவது சொரனையுல்லவன் முடித்து வைக்கத் தானே செய்வார்கள்.

    நாம் சொல்வதெல்லாம் நடந்தது நடந்து முடிந்து விட்டது. இனிவரும் காலங்களில் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து முன்னேற முயற்சிக்கவும்.

    ReplyDelete
  2. கடைசியாக புலிகள் செய்த மூதூர் படுகொலைகள், இதையும் சொல்லவில்லை.

    ReplyDelete
  3. புலிகள் பொய்களின் மூன்று வகைகளையும் திறமையாகப் பயன் படுத்தியுள்ளனர். புலிகளின் அடிவருடிகள் இப்பொழுது அதே வேலையை செய்கின்றனர்.

    ''கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய தமிழ்'' என்பது கூட அண்டப் புளுகு வகையைச் சேரும்.

    அண்டப் புளுகையும், புள்ளி விவரப் பொய்களையும் புலிகளும், புலிவால்களும் தாராளமாகப் பயன் படுத்துகின்றனர்.

    முள்ளிவைக்காளில் மூன்று லட்சம் தமிழர் பேர் படுகொலை செய்யப்பட்டனர், முல்லைத்தீவில் 50 000 ஏக்கர் தமிழர் காணிகளை
    அரசு உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் ஆக்கிரமித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 15 லட்சம் பெண்களை இராணுவம் பாலியல் பலாத்காரத்திட்கு உள்ளாக்கியுள்ளது, யாழ்ப்பாண முஸ்லிம்கள் இராணுவத்திற்கு தகவல் கொடுத்ததால் தான் புலிகளால் வெளியேற்றப் பட்டனர், யாழ்ப்பாணத்தில் ஐந்து பேருக்கு ஒருவர் என்ற ரீதியில்
    இராணுவத்தினர் உள்ளனர் போன்ற வகையில் வருபவை எல்லாம் இரண்டாம், மூன்றாம் வகைப் பொய்கள் ஆகும்.

    இதைத்தான் இவ்வளவு காலமும் புலிகள் செய்து வந்துள்ளனர்.
    விஷயம் தெரியாதவர்கள் இதனை நம்பிவிடுகின்றனர்.

    மூதூர் மக்கள் பார்க்க மாட்டார்கள் என்ற துணிச்சலில் எழுதிய செபஸ்தியன் இப்பொழுது மாட்டிக் கொண்டதனைக் காண்கின்றோம்.
    புலிகளின் யுக்தியே இப்படித்தான். அப்பாவித் தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.