கருமலை ஊற்று கிராமம் முஸ்லிம்களிடம ஒப்படைக்கப்படும் - அமைச்சர் றிசாத்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
திருகோணமலை மாவட்டத்தின் வெள்ளை மணல் கருமலை ஊற்று கிராமத்தினை மீள மக்களிடம் ஒப்படைப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தம்மிடம் உறுதியளித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் கிண்ணியா நகர சபை தலைவர் சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன்,அந்தப் பிரதேசத்துக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் நேரடி கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டுவந்தார்.
திகோணமலை மாவட்டத்தில் கருமலை ஊற்று முஸ்லிம்கள் கடந்த யுத்த காலத்தின் போது.அங்கிருந்து பாதுகாப்பு நிமிர்த்தம் இடம் பெயர நேரிட்டது.பின்னர் அப்பிரதேசம் மீட்கப்பட்டு வழமை நிலைக்கு தற்போது திரும்பியுள்ளதால் இங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்களை மீண்டும் இங்கு குடியமர்த்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாபதியிடம் எடுத்துரைத்ததன் பயனாக.இது குறித்து உரிய நடவடிக்கையெடுக்கப்படும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளார்.
அப்போ அந்த கிண்ணியா வீதி வளைவு?
ReplyDeleteஇது வாக்கு வேட்டைக்கான தேர்தல் கால வாக்குறுதி அல்ல, சமூகம் சார்ந்த அக்கறையினால் மேற்கொள்ளப் பட்ட உண்மையான நடவடிக்கை என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு உள்ளது.
ReplyDeleteசகோதரர் Omar Farook கேட்டுள்ளது போல, கிண்ணியா பாலத்திற்கு அண்மையில் உங்கள் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப் பட்டு, இடை நடுவில் தடை செய்யப் பட்டுள்ள வரவேற்பு வளைவு குறித்து என்ன செயப் போகின்றீர்கள், அமைச்சரே?