அக்கரைப்பற்றில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய
அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து, தேசிய காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக 3 பேர் கொண்ட குழுவொன்றை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.
அக்கரைப்பற்றிலுள்ள சுற்றுலா விடுதியை தேர்தல் திணைக்களம் முறைப்பாட்டு நிலையமாக பயன்படுத்தவுள்ளதால் அதைவிட்டு வெளியேறும்படி எழுத்துமூலம் கேட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.
"தேர்தல் பிரச்சாரத்துக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இப்பகுதியில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக நிரந்தர பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரையும் ஏனைய பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் நியமித்துள்ளோம்" என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வெச்சான்டா மகன் ஆப்பு.
ReplyDeleteதேர்தல் ஆணையாளர் சார், அக்கரைப்பற்று அம்பாரை வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றுலா விடுதி ஒன்றிருக்கின்றது. அதிலும் ஏதாவது ஒரு காரியாலயத்தைப் போடுங்கள்.
வாக்கு எண்ணும் போது அம்பாரைக் கச்சேரியிலும் ஒன்றைப் போடுங்கள்.
அப்படியே மொத்தமாக ஒரு போடு போடுங்கள். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.
Mr.Athaullah பெயர் அதிகரிக்க நன்றி, Akkaraipattu ஒற்றுமையின் அடையாளமாக தோன்றும்
ReplyDelete