உலகில் தூக்கம் தொலைத்தவர்கள்..!
உலகம் முழுவதும் நாள் தோறும் 15 கோடி பேர் தூக்கம் இன்றி தவிக்கின்றனர். இரவில் பலர் தூக்கமின்றி தவிர்க்கின்றனர். இதனால் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே, இது குறித்து அமெரிக்காவின் வார்விக் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கானா, தான்கானியா, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, வங்காளதேசம், வியட்நாம், இந்தோனேசியா, கென்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் 24, 434 பெண்களும், 19,501 ஆண்களும் ஆய்வுக்குட் படுத்தப்பட்டனர். அவர்களில் உலகம் முழுவதும் சுமார் 15 கோடி பேர் நாள்தோறும் தூக்கமின்றி தவிப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு மனம்அழுத்தம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம், கவலையே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. இதனால் இவர்கள் தினசரி 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகின்றனர். இதனால் அவர்களின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இவர்கள் தூங்குவதற்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தூக்கமின்றி தவிப்பவர்களில் வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கத்திய நாடுகளிலும் இது ஓரளவு உள்ளது. அதே நேரத்தில் இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
Post a Comment