Header Ads



வடக்கில் மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு காணிகள் - மஹிந்த ராஜபக்ஸ உறுதி வழங்கினார்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து மீண்டும் மீள்குடியேறும் மக்களை பழைய, புதிய அகதிகள் என்று பார்க்கும் நிலை காணப்படுவதாகவும் அது அகற்றப்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான  ஹூனைஸ் பாருக், வெள்ளிக்கிழமை வவுனியாவில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற வன்னி மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது முன்வைத்ததையடுத்து ஜனாதிபதி இனிமேல் பழைய, புதிய அகதிகள் என்று எவரும் இல்லை எல்லோரும் ஒரே நிலையில் உள்ளவர்கள் என்று பார்த்து அவர்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான பணிப்புரையினை ஜனாதிபதி விஷேட செயலணிக்கு  வழங்கியுள்ளார்.

கைத்தொழில் வணிகத் துறை அமைச்சரும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான றிசாத் பதியுதீனின் ஒழுங்குபடுத்தலுடன் இந்த கூட்டம் இடம் பெற்றது.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், வடக்கில் மீள்குடியேறும் மக்கள் தமக்கான காணிகளின்றி பெரும் சிரமப்படுவதாகவும், அவர்களுக்கு வேண்டிய காணிகளை பெற்றுக் கொடுக்க அவணம் செய்யுமாறும் முன்வைத்த வேணடுகோளையும் ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்றை உடன் நியமிப்பதாகவும் இது குறித்து தேவையான வசதிகளை இக்குழு முன்னெடுத்துச் செல்லும் என்றும் இங்கு கூறியுள்ளார்.

வன்னி மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாக ஆயராயப்பட்டதுடன் அமைச்சர் றிசாத் பதியுதீனினால் முன்மொழியப்பட்ட அனைத்து திட்டங்களும் நடை முறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி இங்கு கூறினார்.

அமைச்சர்கள் அதிபர்கள் பிரதேச செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்


2 comments:

  1. This is election time in the East,so this kind of promises are not surprising. We can only hope that our muslim ministers would follow this up and make sure that these promises are promptly implemented.

    ReplyDelete
  2. janathipathi niyayamulla emathu pakkam ullar iverin kalaththil em muslim makkal yavarum kudiyeravendum ilantha mannai meedpathu em anaivarin kadamai,,,,,puththalathil ulla 10 perch nilamum veedum perithu ena ninaiththu irintheerkalanal palanootrukkanakkana ekar nilaththai ilappathudan ...em santhathikkum,kudiyeriya muslimkalukkum seitha varalatruththurohamahum.......musaliyur kcm.ashhar

    ReplyDelete

Powered by Blogger.