Header Ads



முஸ்லிம்கள் வாசிப்பில் ஆர்வம் செலுத்த வேண்டும் - என்.எம். அமீன்


இலங்கை முஸ்லிம்கள் வாசிப்பில் ஆர்வம் செலுத்த வேணடுமென முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையடால் நிகழ்விலேயே இவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கை முஸ்லிம்கள் வீடியோ சாதனங்களையும், அதனுடன் தொடர்புடைய ஏனையவற்றையும் கொள்வனவு செய்வதில் காட்டும் ஆர்வத்தை முஸ்லிம் சார்பு ஊடகங்களை வளர்த்தெடுக்கும் விடயங்களிலும் பங்காற்ற வேண்டும். இன்று துரதிஷ்டவசமாக வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில்கூட முஸ்லிம் சார்பு ஊடகங்களின் வாசிப்பு விகிதம் குறை மட்டத்தில் காணப்படுகிறது. இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். வாசிப்பு பழக்கத்தில் பெண்களின் கவனம் அதிகரிக்கவேண்டும். இது நமது முஸ்லிம் சமூகத்திற்கும், அந்த வீட்டுக்கும்கூட பலன்களை பெற்றுக்கொடுக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    முஸ்லிம்களில் அதிகமானவர்கள் பத்திரிகை செய்தி வாசிப்பதை விட தொலைகாட்சி செய்திகளையே
    அதிகம் விரும்புவதை காணக்கூடியதாகவுள்ளது .எனவே முஸ்லிம்களுக்கான தொலைகாட்சி அலைவரிசையினை
    முஸ்லிம் சமூகம் இன்று வேண்டி நிற்கின்றது .சகோதரர் என் .எம் .அமீன் கூட பல வருட காலமாக இந்தக்கருத்தை
    கூறி வருவதை காணக்கூடியதாகவுள்ளது .எமது முஸ்லிம் சமூகத்தில் அதிகமான ஊடகவியலாளர்கள் மற்றும்
    அதிகமான செல்வந்தர்களும் காணப்படுகின்றார்கள் மேலும் முஸ்லிம் அரசியல் வாதிகள் அதிகமாக காணப்படுகின்றார்கள் அப்படி இருந்தும் முஸ்லிம்களுக்கான தொலைகாட்சி அலை வரிசையினை பெற முடியாமைக்கான காரணம் என்ன ?

    ReplyDelete
  2. சகோதரர் Haleem Aswar அவர்களே, உங்கள் கருத்துடன் உடன்படுவதில் சிக்கல்கள் உள்ளன.

    இன்று வெளிவரும் வாசிப்பு ஊடகங்களான பத்திரிகைகளைக் கருதும் பொழுது, முஸ்லிம்கள், சினிமா செய்திகளும், காமவெறியைத் தூண்டும் உண்மைச் உண்மைச்சம்பவங்களும், கதைகளும் நிறைந்த ஏனைய பத்திரிகைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை முஸ்லிம்களின் பத்திரிகைகளுக்குக் கொடுப்பதில்லை.

    நாளை முஸ்லிம் தொலைகாட்சி அலைவரிசை ஒன்று ஆரம்பிக்கப் பட்டாலும் கூட, அதில் ஆபாச சினிமாவும், குத்தாட்ட குலுக்கல் நடன பாடல்களும் இல்லை என்று சொல்லிக்கொண்டு மீண்டும் தாம் பார்த்துப் பழகிப் போன சனல்களுக்கே தாவி விடுவார்களேயானால், முஸ்லிம் தொலைக்காட்சி அலைவரிசையினால் பயன் ஏற்படுமா?

    இன்று பயான் இறுவட்டுக்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. இருந்தும் முஸ்லிம்கள் அதிகமாக நாடிச் செல்வது சினிமா இறுவட்டுக்களைத்தான்.

    முதல் மாற்றம் வரவேண்டியது முஸ்லிம்களின் மனநிலையிலேயே தவிர, அலைவரிசையில் அல்ல.

    ReplyDelete

Powered by Blogger.