Header Ads



உங்கள் ஆதரவுக்கு எமது நன்றிகள்..!



எமது இணையமானது 29-10-2010 ஆம் ஆண்டு பிரசவமானது. நாம் இப்போது 21 மாதங்களே கொண்ட சிறு குழந்தை.

வாசகர்களாகிய உங்களின் உயர்ந்த ஆதரவுடன் பயணிக்கும் எமது இணையத்தை இதுகாலவரைக்கும் அதாவது 31-07-2012 வரையான காலப்பகுதி வரைக்கும் பார்வையிட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,611,383 (26 இலட்சத்து, 11 ஆயிரத்து 383) அல்ஹம்துலில்லாஹ்...!

கடந்த ஜுலை மாதம் (நேற்று 31 ஆம் திகதி வரை) மாத்திரம்  588,649 (5 இலட்சத்து 88 ஆயிரத்து 649) பேர் எமது இணையத்தை பார்வையிட்டுள்ளனர். (அல்ஹம்துலில்லாஹ்)

பேஸ்புக்கில் இலங்கை முஸ்லிம்கள் அதிகளவு  ''LIKE'' செய்துள்ள முஸ்லிம் சார்பு இணைய வரிசையில் யாழ் முஸ்லிம் இணையம் முதலிடத்தை பெற்றுள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்)

ஒரு பிராந்தியத்தின் பெயரை நாம் சூட்டிக்கொண்டுள்ள போதிலும், எமது இணையத்தை இலங்கை முஸ்லிம்களின் தேசிய குரலாக அங்கீகரித்த உங்களுக்கு எமது நன்றிகள்.

அல்லாஹ்வை தவிர வேறு எந்த மனித சக்திக்கும் அடிபணியாத எமது இணையத்தின் பயணம் இறை உதவியுடனும், உங்களின் ஆதரவுடனும், சிறந்த ஊடக நெறிகளை பின்பற்றியும்,  சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தொடரும்.

வாசகர்களாகிய நீங்கள் எமது இணையத்திற்கு வழங்கிநிற்கும் அதீத ஆதரவுக்கு நாம் நன்றி சொன்னது போன்றே, எமக்கு ஆலோசனைகளை வழங்கும் மூத்த ஊடகவியலாளர்கள், செய்திகளை சுடச்சுட அனுப்பிவைக்கும் பிராந்திய ஊடகவியலாளர்கள், எமது இணையத்திற்கு பிரத்தியேகமாக கட்டுரைகளை எழுதும், செய்திகளை அனுப்பிவைக்கும் உள்ளங்கள் மற்றும் எமது இணையத்தின் நலனின் ஆர்வம் கொண்ட அத்தனை உறவுகளுக்கும் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்.

அதேவேளை எப்போதும், எந்தவேளையிலும் உங்களிடமிருந்து வரும் விமர்சனங்களை உள்வாங்கிக்கொள்ள நாம் தயாராகவுள்ளோம்.  எமது குறைகளை, தவறுகளை நீங்கள் உரிமையுடன் எங்களுக்கு அறியப்படுத்த வேண்டுமென்பதே எமது விருப்பமும் ஆகும்.


Skype ID - jaffnamuslim1990






9 comments:

  1. அல்ஹம்திலில்லாஹ்...!

    வாழ்த்துக்கள் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..
    தொடரட்டும் உங்கள் சேவை.......

    ReplyDelete
  2. உண்மைக்கு அழிவே இல்லை.

    உண்மையாகவும் பக்கசார்ப்பில்லாமலும் நடந்துவருவீர்கள் என்ற நம்பிக்கை இதன் வாசகர்களிடத்தில் உள்ளது என்றும் அதை தக்கவைத்து கொண்டால் இன்ஷா அல்லாஹ் இன்னும் வளர்சியை காண்பீர்கள்.
    உங்கள் வளர்சி தொடர அல்லாஹ்வை வேண்டியவனாக எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.

    ReplyDelete
  3. " அஸ்ஸலாமு அலைக்கும் "
    கனம் JAFFNA MUSLIM இனைய பதிப்பாளர் அவர்கட்கு

    நான் இனைய பத்திரிகையில் மிக முக்கியமாக முதலிடம் கொடுத்து வசிக்கும் ஒரு பத்திரிகை என்றால் அது JAFFNA MUSLIM இனைய பத்திரிகையாகும்.

    உண்மையில் இந்த இனையபத்திரிகை மிகவும் பயனுள்ளதாகவும் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை பதியும் ஒரு இனைய நண்பனாக என்னால் பார்க்க முடிகிறது .

    என்றாலும் நீங்கள் குறிப்பிட்டது போல் இது ஒரு பிராந்திய பெயருக்கு உட்பட்டதாயினும் நாடு தழுவிய ரீதியில் எல்லா விடயங்களும் பதியப்பட்டு முஸ்லிம்களின் தேசிய குரலாக ஒலிக்கின்றது என்கிறீர்கள்.

    ஆனால் ஒட்டுமொத்தமாக இதை முஸ்லிம்களின் தேசிய குரலாக என்னால் ஏற்றுகொள்ள முடியாது காரணம் நான் வடமேல் மாகாணத்தை சேர்த்தவன் இம் மாகாணத்தில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் ஒரு மாகாணமாக பார்க்கலாம் அதேநேரம் இங்கு முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக இரண்டு முக்கிய தேசிய பாடசாலைகள் அரும் பங்காற்றி வருகின்றது. குறிப்பாக கணித மருத்துவ துறையில் முஸ்லிகளின் பக்கத்தில் தற்போது கூடுதலான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பல்கலைக்கழகம் செல்வதை காணலாம் . இது தவிர இம்மாகாணத்தில் எவ்வளவோ முஸ்லீம்கள் சம்பந்தப்பட்ட நல்ல கெட்ட விடயங்கள் நடக்கின்றது ஆனால் இப்பத்திரிகையில் அந்த விடயங்கள் எதுவும் இதுவரை எனக்கு வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்க வில்லை . சாதரணமாக பள்ளியில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சி போடோவுடன் இங்கு பிரசுரமாகின்றது. ஆனால் அதைவிட மிகமுக்கியமான விடயங்கள் இம்மாகாணத்தில் நடக்கின்றது. இது தவிர தென்மாகாண முஸ்லீம்கள் மற்றும் ஏனைய மாகாணம் சம்பந்தமான விடயங்கள் இப்பத்திரிகையில் காணமுடியாது அப்படி வந்தாலும் அது அத்திபூத்தமதிரி ஒரு சில விடயா ங்களே வாசிக்க முடியும்.

    எனது கருத்துப்படி இது இன்னும் பிராந்திய மட்டத்தில் உள்ள ஒரு இனைய பத்திரிகையாகவே என்னால் காணமுடிகின்றது இதற்கு முக்கிய காரணம் உங்கள் பதிப்புக்களில் 99.9 வீதம் வடக்கு மற்றும் கிழக்கு சம்பந்தப்பட்ட விடயங்களே அல்லது விடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது .

    எனவே எனது பார்வையில் இதை எல்லா முஸ்லிம்களின் குரலாக எடுக்க முடியாது. அப்படியாயின் நாடு தழுவிய ரீதியில் உங்கள் செய்திகள் இதில் இடம்பெற வேண்டும்.

    உண்மையில் உங்கள் இந்த உழைப்புக்கு எனது மணமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் அதேநேரம் படைத்த அல்லாஹ் மேலும் நல்ல அறிவையும் விடாமுயச்சியையும் யாருக்கும் அஞ்சாத மனவலிமையையும். நேர்மையான உழைப்புக்கும் உங்கள் நிறுவனத்துக்கு அவன் அருள்புரிய வேண்டும் துணை நிற்க வேண்டும் துஆச் செய்கின்றேன் .

    வஸ்ஸலாம்

    இஷாக் ரஹீம்

    கேகுனகோல்ல

    ReplyDelete
  4. Can you remember this news of Anti Islam and poisonus hateness

    Now, Sri Lanka goes after jihadis




    P K Balachandran
    First Published : 22 Jun 2009 02:42:00 AM IST
    Last Updated : 22 Jun 2009 08:21:17 AM IST

    COLOMBO: The Sri Lankan government was moving against armed jihadis, a new menace in the Eastern part of the island country, which just ended a long drawn out war against the LTTE, claimed a front-page report in the weekly Lakbimanews on Sunday.

    Official Indian sources told The New Indian Express that presence of jihadis had begun to cause concern to both Sri Lanka and India. India was glad that the Sri Lankan authorities had, at long last, begun a crackdown on the Tablighi Jamaat members, who were getting funds and ideological inputs from abroad especially Saudi Arabia and Pakistan, the sources added.

    There have been instances of the armed clashes between Jamaatis and Tamils, a community the Eastern Muslims have been at odds with over questions of land for the last two or three decades.

    Lakbimanews quoted unnamed intelligence sources to say that there could be about 500 jihadis in the three districts in the Eastern parts of Sri Lanka.

    Batticaloa alone is believed to have 250 of them.

    SPURT IN CRIME USING FIREARMS: In recent months, Eastern parts have witnessed a spurt in crimes such as abductions and extortions. At first it was thought that the perpetrators were members of the Tamil Makkal Viduthalai Puligal, a breakaway group of the LTTE. Later, the LTTE itself was blamed. But investigations later revealed that jihadis were behind most of these crimes.

    Last Friday, Security Forces commander (East) Maj Gen Srinath Rajapakse, the Security Forces and the police held a meeting with moulavis and Muslim politicians and civil society leaders at the Hisbullah Centre, Lakbimanews said.

    While Lakbimanews said that the Muslim political leaders had been funding the jihadis for the past 15 years, Indian sources contended that local Muslim political leaders were not involved. They also noted that there has been a significant spurt in the establishment of Madrasas where the radical Wahabi ideology is inculcated. Lakbimanews reported that the police in Kanthankudi, a Muslim town in Batticaloa district, had recently seized seven T-56 rifles, SMGs, communication sets and anti-personnel mines.

    The paper said that the Defense Ministry had given the jihadis time until July 2 to surrender their weapons. “Thereafter, we will have no mercy on them,” the paper quoted a Defense Ministry official as saying.

    The Muslim dignitaries who had attended Friday’s meeting with the Security Forces had admitted that some Muslim youth were armed and promised to persuade them to give up their weapons.

    MIDDLE EASTERN INDOCTRINATION: Meanwhile, employment opportunities in the oil-rich Middle East had facilitated religious indoctrination in Sri Lanka. The new Saudi-returned Wahabists began to take on the Sufiists.

    Apparently, Pakistan also stepped in to give money and training to radical Islamists here. According to Indian sources, the South Eastern University at Oluvil in the district of Amparai has become a hotbed of radical Islamists.

    ReplyDelete
  5. ஒவ்வொரு இஸ்லாமிய குடிமகன் இருக்கும் வரை இந்த இணையத்தளம் அழியாது உங்கள் இந்தப்பயணம் மேலும் சிறப்பாக அமைய என்றும் எங்கள் அஸ்ரோ இஸ்லாமிய இளைஞ்சர் அமைப்பு உதவியாக நிற்கும்
    "உங்கள் உள்ளத்துள் வாழும் ஈமான் ஆனது தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கிகளை விடவும் பலமானது - அஹ்மத் சேய்க் யாசீன் "

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அழைக்கும்
    தங்களின் சேவை மென்மேலும் வளர எமது பிரார்த்தனை என்றும்!!!வாழ்த்துக்கள் !!!!

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ்.

    உங்கள் போராட்டப் பயணம் மிகச் சரியான பாதையில் தொடர வாழ்த்துக்கள். முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் பிரயோசனமில்லாத, கலாச்சார சீரழிவுக்கு வழிகோலும் சில செய்திகள் ஆடிக்கொருதடவை, கோடைக்கொருதடவை என்று தலை காட்டுகின்றன. அவற்றையும் நீங்கள் செய்தி என்று கருதி வெளிட்ட பொழுதும், அவற்றால் சமூகத்தில் தவறான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர்த்துக் கொள்வது நல்லது.

    சில சந்தர்ப்பங்களில் பொருத்தமில்லாத சொற் பிரயோகங்கள் செய்திகளில் / தலைப்புகளில் காணப்படுகின்றன. வாசகர்கள் சுட்டிக்காட்டுமிடத்து மாற்றிக் கொள்வதே சிறந்தது.

    ReplyDelete
  8. masha allah wish youa all tha best

    ReplyDelete
  9. சகோதரர் இஷாக் ரஹீம் அவர்களே,

    நான் அறிந்த வரையில் யாழ் முஸ்லிமின் ஆரம்பம் ஓர் தனி நபர் முயற்சியே.யாழ் முஸ்லிம் என்பது நிதிவளம் மிக்க ஒரு அமைப்பு அல்ல. நல்லுள்ளம் கொண்ட சில செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள் வழங்கும் செய்திகளைக் கொண்டே மேற்படி இணையத் தளம் செயல் படுகின்றது.

    இந்நிலையில் நீங்கள் கூறும் பகுதிகளில் செய்தியாளர்களை நியமித்து, ஊதியம் வழங்குவது என்பது யாழ் முஸ்லிம் நிர்வாகத்திற்கு சாத்தியப் படும் என்று நான் நினைக்கவில்லை.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரதேசங்களில் இருந்து செய்திகள், நிகழ்வுகளை, தன்னார்வமுள்ள யாராவது அனுப்பி வைப்பார்களேயானால், அவற்றிற்கு யாழ் முஸ்லிம் இடம் தரும் என நம்புகின்றேன்.


    To Jaffna Muslim editor,

    Please see your e-mail ID here.
    What is the correct one,
    jaffnamuslim@yahoo.com
    or
    jaffnamuslim1990@yahoo.com?

    ReplyDelete

Powered by Blogger.