Header Ads



மன்னார் விவகாரம் - சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிப்பு

மன்னார் நீதவானுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பிலான சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  மன்னார் நீதவான் ஜூட்சனால் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றினையடுத்து அவருக்கு அமைச்சர் ரிசாட்டினால் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனால் நாடளாவிய ரீதியில் உள்ள சட்டத்தரணிகள் சம்பவத்தில் தொடர்புடையவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டனர். அதனையடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள நீதிமன்றங்களின்  செயற்பாடுகள் அனைத்தும் முடங்கின. இதனையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய விசாரணைகள்  புலனாய்வுப் பிரிவினரால்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை, சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இச் சம்பவத்துடன் அமைச்சர் ரிசாட்டிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட போதிலும் தனக்கும் இச் சம்பவத்திற்கும்  எந்தவிதமான தொடர்பும் இல்லை. குறித்த நீதவானை தான் பார்த்ததே இல்லை. நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவ தினத்தில் தான் மன்னாரில் இருக்கவில்லை. என ரிசாட் மறுத்துள்ளார்.

அத்தடன் தன் மீது சேறு பூசுவதற்காகவே புலிகளது ஆதரவாளர்களே இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இலங்கையில் மேற்கொள்ளப் படும் எல்லா தொலைபேசி அழைப்புகளும், குறுந்தகவல்களும் பதிவு செய்யப் படுகின்றன.
    நீதிமன்றம் உத்தரவிட்டால்,போலீசார் மேற்படி பதிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

    மன்னார் அநீதிபதியின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு குறிப்பிட்ட நேரத்தில் உண்மையில் வந்ததா, எந்த இலக்கத்திலிருந்து வந்தது என்பதனை மட்டுமல்ல, நடைபெற்ற உரையாடலின் ஒலிப்பதிவையும் பெற்றுக் கொள்ள இன்று வசதிகள் உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்.

    "ரிஷாத் பதியூத்தீன் முஸ்லிம் சமூகத்திற்குத் தேவையான ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை."

    ReplyDelete

Powered by Blogger.