கொழும்பில் பாகிஸ்தானின் ஆயுத கண்காட்சி
பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர் லெப்.ஜெனரல் அசிப் யாசின் மாலிக் ஐந்து நாள் பயணமாக இலங்கை வரவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இவர் சபாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் உயர்மட்ட பிரமுகர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
வரும் 11ம் நாள் வரை தங்கியிருக்கும் பாகிஸ்தான் பாதுகாப்புச்செயலர், இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்புக் கருத்தரங்கிலும் உரையாற்றவுள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலருடன், பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளான மேஜர் ஜெனரல் குலாம் குவாமர், பிரிகேடியர் ஹமாயுன் அசீஸ் ஆகியோரும் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக கொழும்பு வரவுள்ளனர் என்றும் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் அறிவித்துள்ளது.
அதேவேளை, நாளை கொழும்பில் ஆரம்பமாகும் இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு ஆயுத தளபாட ஏற்றுமதி நிறுவனங்கள் காட்சிக்கூடங்களை அமைக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment