பஷீர் சேகுதாவூத் பிரதியமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா
TM
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத், உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு பிரதியமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சர் பதவியை பெற்று முஸ்லிம் காங்கிரஸை பிளவுபடுத்த முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் குறித்த பிரதி அமைச்சர் பதவி தனக்கு அவசியமில்லை என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேதாவூத் மேலும் தெரிவிக்கையில்,
"கட்சியை பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் நான் ஈடுபடவில்லை. அரசாங்க வாகனங்களை பயன்படுத்தி அரசுக்கு எதிராக தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவது சிறந்ததல்ல என்ற காரணத்தினாலும் அமைச்சு பதவியை இராஜினாமா செய்கின்றேன்.
இன்று முதல் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடவுள்ளேன். எனது இராஜினாமா தொடர்பில் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமுடன் கலந்துரையாடி பின்னரே இத்தீர்மானத்தினை நான் மேற்கொண்டேன்.
எவ்வாறாயினும் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக செயற்படுவேன்" என்றார்.
உளறல்! > திணறல்! > பதறல்! > உதறல்! > ........ கதறல்?
ReplyDeleteஹஹ்ஹஹ்ஹா.........
நாடகத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் நடக்கின்றன.
ReplyDeleteதவளையும் தன்வாயால் கெடும்.....
ReplyDeleteமக்கள் மத்தியில் மரம் என்கின்ற இயக்கத்திற்குத்தான் செல்வாக்கு இருகின்றதே தவிர தனிமனிதனுக்கு எந்தவித செல்வாக்கும் இல்லை(அது ரவூப் ஹக்கீமாக இருந்தாலும் மரம் எனும் அடையாளம் இன்றேல் செல்லாக்காசுதான்) என்பதை இன்னும் ஏன் புரியவில்லை இந்த மரத்தில் பின்னால் ஒழிந்திருக்கும் குள்ள நரிக்கூட்டம்? தற்போது பிரதி அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்துவிட்டால் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துவிடுமா என்ன?....
இந்த முடிவின் பின்னாலும் ஒரு அமைச்சுப்பதவி ஒளிந்திருப்பது புரிகின்றதே பசீர் சேகுதாவூத் அவர்களே!
manasatchiyulla unmayana manithan...
ReplyDeleteமுஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமை முஸ்லிம்களுக்காக எதை செய்ததோ இல்லையோ? பல அரசியல்வாதிகளை நல்ல நடிகர்களாக உருவாக்கி உள்ளது.
ReplyDeleteRauf Hakeem Resign panninalum aacharyam illai!!!
ReplyDeleteNalla film katturangappa.
ஆஹா என்னமா காய் நகர்துகிறார் அரசியல் சதுரங்கத்தில் செம கில்லாடியாக இருக்காறே ஹகீம் காக்காவுகு இப்ப நல்ல ஆப்பு அவரும் இவர் சொன்ன அதேகாரணத்தவைத்து இராஜினாமா பண்ணாவிடில் மக்களிடையே அவறின் இமேஜுக்கு இருக்கு டெமேஜ்ஜு
ReplyDeleteஒரு அநாகரிகம் நாகரீகமாக நடிக்குகிறது.. சரியான ஆள் என்றால் மக்களால் நிராகரிக்கப்பட்டு ஒரு பிழையான முடிவின் மூலம் கிடைக்கப் பெற்ற எம் பி பதவியையும் ராஜினாமா செய்யுங்கள் பார்க்கலாம்...
ReplyDelete