அமெரிக்க நீதிமன்றத்தின் விசித்திர தீர்ப்பு
அமெரிக்காவில், கடந்த 2001ல் நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, ஆறு பில்லியன் டாலர் இழப்பீடு வழங்கும் படி, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில், கடந்த 2001ல் செப்டம்பர் 11ம்தேதி ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க்கில் உள்ள இரட்டை வர்த்தக கோபுரம் மீதும், விமானத்தை கொண்டு மோத செய்ததில், 3,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த, 110 பேர் மற்றும் பலியானவர்களின் குடும்பத்தினர், நியூயார்க் கோர்ட்டில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜார்ஜ் டேனியல், "2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம்தேதி நடந்த தாக்குதல் சம்பவத்தில், ஈரான் நாட்டு தலைவர் அயதுல்லா அலி காமெனி மற்றும் அமைப்புகளான அல் குவைதா, லெபனான் நாட்டின் ஹெஸ்புல்லா கட்சி, தலிபான்கள் ஆகியோர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே, இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறு பில்லியன் டாலர் அளவுக்கு, இவர்கள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.
அடப் பாவி, இவன் என்ன தண்ணி போட்டுவிட்டா தீர்ப்பு எழுதுகின்றான்? மன்னாரில் மட்டும்தான் இப்படி என்று நினைத்தால், நியூ யோர்க்கிலும் இன்னொருவனா?
ReplyDeleteஅல் கைதா + தலிபான்களுக்கும், ஹிஸ்புல்லாஹ் + ஈரானுக்கும் இடையில் கொஞ்சமும் ஆகாதே, இது கூடவா இவனுக்குத் தெரியவில்லை?
பிடல் காஸ்ட்ரோ, பிரபாகரனையும் கூட இந்தப் பட்டியலில் சேர்த்திருக்கலாம், பொழுது போகவில்லை என்றால்....
(செய்தி ஆசிரியரே, இது ஒன்றும் புதிதாக வெளிவந்திருக்கும் ஏதாவது ஆங்கிலத் திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சி அல்ல என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்)
அமெரிக்காவிடம் இப்போது பணமில்லை. வழிபறிக்கொள்ளை ஈடுபட்டுள்ளது
ReplyDeleteஅமெரிக்காவிடம் இப்போது பணமில்லை. வழிபறிக்கொள்ளை ஈடுபட்டுள்ளது
ReplyDelete