Header Ads



பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் நித்திரையிலேயே வபாத் - சம்மாந்துறையில் சம்பவம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நேற்று திங்கட்கிழமை சமுகமளிக்க வேண்டிய மாணவன் நித்திரையிலேயே உயிரிழந்த சம்பவமொன்று சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் சம்மாந்துறை முழுவதும் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சம்மாந்துறை சென்னெல் சாஹிராவில் கல்வி கற்ற முகம்மட் இஸ்மாயில் ஆசிக் (19) எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கருவாட்டுக்கல் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த இம்மாணவன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நோன்பு துறந்ததும் உணவருந்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை நோன்பு பிடிப்பதற்காக இம்மாணவனை எழுப்பிய போதே இம்மரணச் சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது.

மரண விசாரணைகள் பொலிஸ் புலனாய்வு பொறுப்பதிகாரி அமரசிறி, பொலிஸ் பரிசோதகர் காதர் ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர்கள் உணவு ஒவ்வாமை காரணமாகவே இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பொலிஸார் இவ்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments

Powered by Blogger.