நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை பள்ளிவாசல்களை உடைக்க அனுமதிக்கமாட்டேன் (படங்கள் இணைப்பு)
கல்முனையிலிருந்து எம். இர்பான்
நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்த பள்ளிவாயலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன். இன்று பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதாக கதைவிடுகின்றனர். அதை நம்பவேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கல்முனையில் தெரிவித்தார்.
கிழக்குமாகாணசபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் பெஸ்டர் ஏ.எம். றியாசின் ஏற்பாட்டில் கல்முனை கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றும்போது,
நான் இந்த நாட்டு மக்கள் அணைவருக்குமான ஜனாதிபதியாகும். முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ, பௌத்தர் என்ற வேறுபாடு காட்டி நான் ஆட்சி செய்ய முடியாது. எல்லா மதங்களைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் நான் மதிப்பளிக்கின்றேன்.
நான் கூறுகின்றேன் எமது அமைச்சர்கள் இருக்கின்றார்கள் இந்த பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதென்று இந்தமேடையிலே இருக்கின்ற சிரேஷ்ட அமைச்சர் பௌஸி முதற்கொண்டு சகலரும் இருக்கின்றார்கள் இவர்கள் கூறினார்களா? இல்லை சிலர் என்னை உங்களிடமிருந்து துரப்படுத்துவதற்காக கூறிவருகின்றார்கள். ஆனால் அவர்கள் என்னிடம் வந்தால் அவ்வாறு நான் கூறவில்லை என்று கூறுவார்கள் இது என்ன நியாயம். எனவே மக்களை ஏமாற்ற வேண்டாம். நான் இந்த இடத்திலே கூறிவைக்க விரும்புகின்றேன்.
மக்களுக்கு மத்தியில் விசமப் பிரச்சாரங்களை மேற்கொண்டு எம்மை மக்களின் எதிரிகளாக்குகின்ற விடயத்தை சிலர் செய்து வருகிறார்கள். இதற்கு ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன். இனவாதம் பேசி என்ன பலம் அதுதான் அரசியல் இலாபம். அதற்காகவே இன்று இனவாதம் பேசித்திரிந்து மக்களுக்கு தோர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் என்றும் ஏமாளிகளாக வாழ மாட்டார்கள் என்று நான் நம்புகின்றேன்.
ஏற்கனவே வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். அபிவிருத்திக்காக இப்பிரதேச மக்களுக்கான சகல தேவைகளும் தேசத்துக்கு மகுடம் மூலம் பெற்றுக்கொடுக்கப்படும். இங்குள்ள விவசாயிகளுக்கு போதிய உரமானியம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு தேவைகளை நாம் செய்து கொடுத்திருக்கின்றோம்.
இதற்கு மேலாக நாம் எல்லா மக்களையும் நிம்மதியாக வாழ வைத்திருக்கின்றோம் என்பதில் நான் நிம்மதிப் பெருமிதத்துடன் இருக்கின்றேன். மக்களின் அர்ப்பணிப்பாலும், நாட்டு மக்களின் தியாகத்தாலும் கட்டி எழுப்பப்பட்டுள்ள இன ஐக்கியத்தை எவரும் சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை. சகல இன மக்களும் இங்கு சகோதரத்துவத்துவத்துடன் வாழ்கின்றனர். நாம் அர்ப்பணிப்புடன் அரும்பாடுபட்டு வளர்த்த இன நம்பிக்கையையும், மத ஒற்றுமையையும் சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.
சில பிரிவினர் இந்த இன ஒற்றுமையை விரும்பவில்லை. அவர்கள் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என இனங்களைப் பிரித்துப் பார்க்கின்றனர். எம்மால் அப்படிப் பிரிந்து நின்று செயற்பட முடியாது. இந்த நாட்டு மக்கள் கடந்த 30 வருடங் களாக பல துன்பங்களையும், கஸ்டங்களை யும் அனுபவித்து, எமது படைவீரர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்தும் நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சகல இன மக்களும் அமைதியுடன் வாழக்கூடிய சூழ்நிலையைக் கட்டியெழுப்புவது எமது பொறுப்பும் கடமையுமாகும்.
நாம் அபிவிருத்தியில் மட்டுமன்றி அமைதியிலும் ஒற்றுமையிலும் நாட்டைக் கட்டியெழுப்பி வருகின்றோம். நாம் தேர்தலுக்காக அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாது.அரசியல் செய்வதோடு, சகல பிரதேசங்களினதும் அபிவிருத்திக்கும், முன்னேற்றத்திற்குமாக செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அத்துடன், எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காகவும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இப்பிரதேசத்தின் குடிநீர்த்திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் எனப் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
இம்முறை கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கையான வேட்பாளர்களை நாம் நிறுத்தியுள்ளோம். அவர்கள் தொடர்பான முழுப் பொறுப்பையும் எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கைவைத்து எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும். எனவும் தெரிவித்தார்.
தம்புள்ளை புனித புமி அபிவிருத்தியை பார்வையிட மீடியாக்களை அனுமதிக்கலாமே!
ReplyDeleteCan we believe you again?
ReplyDeleteஜனாதிபதியார் சரியாத்தான் சொல்லிப் போட்டார்.
ReplyDeleteபள்ளிவாசல்கள உடைக்க விடமாட்டாராம். பள்ளிவாசலுக்கு கல்லால எறியுங்கோ , உள்ளுக்கே பூந்து பிரித் ஓதுங்கோ,
பூட்டி வைங்கோ, சண்டித் தனம் பண்ணுங்கோ, ஆனால் உடைக்க மட்டும் விடமாட்டன் எண்டு ஜனாதிபதியார் அவற்ரை ஆக்களுக்கு சொல்லிப் போட்டாராக்கும்.
What ever you said eastern people won't believe you & government. UPFA can't win eastern province this the truth
ReplyDelete