Header Ads



இஹ்வானுல் முஸ்லிமின் இஸ்ரேலுக்கு கடிதம் அனுப்பியதா..?


TN

எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி, மத்திய கிழக்கு அமைதிக்கு இணைந்து செயற்படுவதை வலியுறுத்தி தமக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. எனினும் அதனை முர்சி அலுவலகம் மறுத்துள்ளது.

இந்நிலையில் இது உணர்வுபூர்மான விடயம் என்பதால், முர்சி அலுவலகம் இதனை மறுக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான் என இஸ்ரேல் அதிகாரி ஒருவர் ராய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த ஜனாதிபதி மொஹமட் முர்சியிடம் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்றதாக இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமொன் பரிஸ் அலுவலகம் நேற்று முன்தினம் அறிவித்தது. அந்த கடிதத்தில், “இஸ்ரேலியர் உட்பட மத்திய கிழக்கு பிராந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான அமைதி செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பை எதிர் பார்க்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த செய்தி வெளியாகி ஒரு மணி நேரத் திற்குள் இந்த கடிதம் போலி யானது என மொ ஹமட் முர்சி யின் பேச்சாளர் குறிப் பிட்டுள்ளார். “ஜனாதிபதி முர்சி இஸ் ரேலுக்கு அனுப்பியதாக ஊடகங்கள் கூறும் கடிதம் போலியானது. ஜனாதிபதி முர்சி இஸ்ரேலுக்கு எத னையும் அனுப்பவில்லை” என்று அவரது பேச்சாளர் யாசிர் அலி ராய்ட்டருக்கு கூறியுள்ளார்.

ஆனால் இந்த கடிதம் உண்மையா னது என இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. “இந்த கடிதம் எகிப்து தூதுவரால் கைய ளிக்கப்பட்டது. எகிப்து, இஸ்ரேல் ஊடகங்கள் இதனை பெரிதுபடுத் தியதால் அதற்கு மறுப்பு தெரி வித்திருப்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்’’ என இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது.

இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் இந்த கடிதத்தின் பிரதி ஒன்றை ஊடகங்களுக்கும் அனுப்பியது. இது தொடர்பில் இஸ்ரேலுக்கான எகிப்து தூதரகம் எந்த கருத்தையும் வெளி யிடவில்லை.

முன்னதாக முர்சி தமக்கு கருத்து தெரிவித்ததாக ஈரான் ஊடகம் வெளியிட்ட செய்தியையும் அவரது செய்தியாளர் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியவாதியான மொஹமட் முர்சி எகிப்து ஜனாதிபதியானதைத் தொடர்ந்து எகிப்தின் இஸ்ரேலுடனான உறவு குறித்து கேள்வி எழுப்பப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. "இஸ்ரவேலுக்கான எகிப்துத் தூதரகம்" ??????

    அப்படி ஒன்று இன்னுமுமா இருக்கின்றது???

    எதோ நடக்காது, என்னமோ நடக்குது, ஒண்ணுமே புரியல்லே....

    ReplyDelete

Powered by Blogger.