Header Ads



'எங்கோ இருந்து வந்து முஸ்லிம்களுக்கு தென் கிழக்கு அலகு என்று உணர்வூட்டுகிறார்கள்'

TN

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤டன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிய¨ மக்கப் போகிறார்களாம். இதனைத் தமிழ் மக்கள் நம்ப வேண்டுமாம். சம்பந்தனின் இந்நாடகத்தை பகுத்தறிவுள்ள எந்தத் தமிழனும் ஏற்கமாட்டான். இது ஒரு பகற் கனவு.
இவ்வாறு கூறுகிறார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்.

கிழக்கு மாகாண சபைக்கான அம்பாறை மாவட்ட ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் சோ. புஸ்பராசாவை ஆதரித்து சொறிக்கல் முனையில் அவரது பணிமனை முன்றலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காரைதீவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது, 2008 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலை இந்த த. தே. கூட்டமைப்பு புறக்கணித்தது. இதற்கு அப்போது சம்பந்தர் கூறியது, கிழக்கு மாகாண சபை என்று ஒன்றில்லை.

அதனை நாம் ஏற்கவுமில்லை. ஒரு அதிகாரமுமில்லாத சபையை நாம் நிராகரிக்கிறோம். வட- கிழக்கு இணைப்பைக் கூறுபோடும் இச்சபையில் நான் போட்டியிடோம் போன்ற காரணங்களே ஆகும். ஆனால், 04 வருடங்களில் அதே கதையை மாற்றிவிட்டு ஒரேயடியாக பல்டி அடித்து கிழக்கு மாகாண சபையை வென்றே ஆகுவோம். மு. காவுடன் சேர்ந்து ஆட்சியமைப்போம் என்று இன்று கூறுகின்றார்.

மு. கா. வுடன் சேர்ந்து ஆட்சியமைப்ப தென்பது ஒரு ஏமாற்று வித்தையாகும். ஒருபோதும் நடக்காது. மற்றது வட- கிழக்கை அவர்கள் ஏற்பார்களா? யாரை ஏமாற் றப்பார்க்கிறார்கள்?

யார் என்ன சொன்னாலும் இம்முறை வெற்றிலை அணியில் தான் முதலமைச்சர் தெரிவாவார். அம்பாறை மாவட்ட தமி ழர்கள் இங்கிருந்து இரு பிரதிநிதிக ளையாவது தெரிவு செய்து ஆதரவளித்தால் நானே அடுத்த முதலமைச்சர். இல்லா விட்டால், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராவார்.

இதில் எந்த மாற்றமும் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் த. தே. கூட்டமைப்பு 08 உறுப்பிக்களைப் பெறுவார்களாம். நல்ல கற்பனை இங்கு ஒன்றைக்கூற விரும்புகிறேன். மட்டு. மாவட்டத்தில் எந்த ஒரு த. தே. கூட்டமைப்பு வேட்பாளரையும் விட 5 வாக்குகளால் வென்றாலும் அதிகூடிய விருப்புவாக்குகளை நானே பெறுவேன். இதில் எந்த இரண்டாம் கருத்துக்கும் இடமில்லை.

கிழக்குப் பிரிந்த பின் எந்தவொரு முஸ்லிம் தலைவராவது தென்கிழக்கு அலகு தேவையென்று கேட்டனரா? இல்லை.
ஆனால், எங்கோ இருந்து வந்து முஸ்லிம்களுக்கு தென் கிழக்கு அலகு வழங்கப்படும் என்று உணர்வூட்டுகிறார்கள். எமது ஆட்சிக் காலத்தில் மூவினங்களும் இணைந்தே கிழக்கு மாகாண சபையை ஒற்றுமையாக வழி நடத்தினோம். அதில் வெற்றியும் கண்டோம்

2 comments:

  1. MY DEAR FORMER CHIEF MINISTER MR CHANDRA KANTHAN,
    THE MUSLIM COMMUNITY IS THE PEACE MAKING RELIGION AND COMMUNITY THEREFORE WE DO NOT WORRY ABOUT THE CHIEF MINISTER WE NEED ONLY PEACE BETWEEN ALL RELIGION AND ALL COMMUNITY FOR DEVELOPMENT IN EAST EACH AND EVERYTHING.
    BUT TNA, AND SLMC NEED CHIEF MINISTER THEY DO NOT BOTHER ABOUT PEACE,COMMUNITY AND DEVELOPMENT ONLY SHOW???? TO SHOW TO THE WORLD POLITICIAN WE THE KING MAKERS. THIS AIM WILL NEVER HAPPEN GO HEAD!!!!.UPFA WILL WINN!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.RAMAN OR RAVANAN IS THE CHIEF MINISTER WELCOM!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

    ReplyDelete
  2. எப்போதும் நல்லவற்றையே சிந்தித்துக்கொண்டிருப்பவர்களைவிட எதைப்பற்றியுமே கவலைப்படாமல் தன்பாட்டுக்கு ஊரை அடித்து உலையில் போடுகிறவன் ஒருவகையில் பாக்கியசாலிதான்.

    ReplyDelete

Powered by Blogger.