Header Ads



ராஜகிரியவில் பொலிஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு சிங்கள இனவாதிகள் மீண்டும் அச்சுறுத்தல்



மொஹமட் ஹபீஸ்

ராஜகிரிய ஒபயசேகரபுரல் அமைந்துள்ள ஜாமியுத் தாருல் ஈமான்' பள்ளிவாயல் பொலீஸ்பாதுகாப்புடன் திறக்கப்பட்ட போதும் (2.8.2012)  இரவும் பௌத்தர்கள் சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் வந்த ஒரு கோஷ்டி பள்ளிவாயலை மூடுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து அச்சத்தால் ராஜகிரிய பகுதி பௌத்த விகாரையொன்னறின் மதகுருவின் ஆலோசனைப் படி ஒரு நாளைக்கு மூடுமாறு இணக்கம் காணப்பட்டது.

பின்னர் அது தொடர்கதையாகி வியாழக்கிழமை வரை  வரை தொடர்ந்து மூடப்படடிருந்தது.

மிரிஹான பொலீஸாரின் உதவியுடன் வியாழக்கிழமை இரவு மீண்டும் திறக்கப்பட்டு நோன்புகால தராவீஹ் தொழுகை இடம் பெற்ற போதும் சுமார் 50 பேர் அளவிலான ஒரு கோஷ்டி அங்கு வந்து குழப்ப நிலையைத் தோற்றுவிக்க முயற்சித்ததாகத் தெரிய வருகிறது. இருப்பினும் பொலீஸாரின் உதவியுடன் தொழுகை நடத்தப்பட்டது.

மேல்மாகாண சபை ஐ.தே.க. அங்கத்தவர் முஜீபுர் றஹ்மான் அங்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்ததுடன் ஒரு சிறிய குழு மேற்கொள்ளும் இந்நடவடிக்கைக்கு அரசு நடவடிக்கை எடுக்காது இருப்பது சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.



1 comment:

Powered by Blogger.