செரண்ட்டிப் ஹஜ், உம்ரா முகவர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு
ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள செரண்ட்டிப் ஹஜ், உம்ரா முகவர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பு கலதாரி ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
செரண்ட்டிப் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்.எம்.ட்ரவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தேசமான்ய எம்.எஸ்.எச்.முஹம்மட் முகவர் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் குறித்து விளக்கமளித்து உரையாற்றினார். இதன் போஷகராக நியமிக்கப்பட்டுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஏ.எம்.இஷாக் அங்குரார்ப்பண உரை நிகழ்த்தினார். அல்ஹாஜ் ஹாஜ் மொஹம்மட் புவாத், அல்ஹாஜ் நஸீர் மௌலானா, அல்ஹாஜ் அல்தாப் நவாஸ் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட ஹஜ், உம்ரா முகவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து உரையாற்றினார்கள்.
குறிப்பாக புனிதமான ஹஜ், உம்ரா கடமை நிறைவேற்றும் விடயங்களில் அரசியல் செல்வாக்குகள் தலைதூக்கியுள்ளதால் ஹஜ், உம்ரா முகவர் நிறுவனங்களின் கோரிக்கைகள் கணக்கிலெடுக்கப்படுவதில்லை. இது சம்பந்தமாக ஏற்கனவே இருக்கின்ற முகவர்கள் நிறுவன சங்கம் தீர்க்கமான நடவடிக்கை எதுவும் எடுக்க முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகின்றது.
இதன்காரணமாகவே செரண்ட்டிப் ஹஜ்,உம்ரா என்ற புதிய முகவர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சங்கம் பெரிய இலாபத்தை எதிர்பார்க்காது ஹஜ், உம்ரா செல்பவர்களுக்கு சிறந்த சேவை செய்ய முன்வந்துள்தாக இதன் செயற்பாட்டளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹஜ் முகவர்கள் சங்கம் ஒரு பக்கம், அரசியல்வாதிகளின் தலையீடும், செல்வாக்கும் மறுபக்கம், ஆனாலும் கடைசியில் பாடாய்ப் படுவது அப்பாவி யாத்திரீகர்கள் தான்.
ReplyDeleteபெரும்பாலான ஹஜ் முகவர்கள் இங்கே வைத்து வழங்குவதாக சொல்லும் வசதிகளுக்கும், அங்கே சென்றதும் வளங்குபவற்றுக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கும். கஃபாவுக்கு அருகில் ஹோட்டல் என்று சொல்வார்கள், அங்கே சென்று பார்த்தல் பெரிய ஒரு தூரம், கடும் சூட்டில் நடக்க வேண்டி இருக்கும், அது ஹோட்டல் போன்று இருக்காது. வழிகாட்டியாகச் செல்லும் மெளலவிமார், அங்கே வைத்து முடிந்த மட்டும் பணத்தை கறக்கும் நிகழ்வுகளும் நடக்கும்.
எல்லாம் முடிந்து, திரும்பி வரத் தயாராகும் பொழுது, பொறுமை பற்றியும், தியாகம் பற்றியும், கடன்களை ஹலால் சொல்லுவது பற்றியும், தவறுகளை மன்னிப்பது பற்றியும் மனதை உருக்கும் பயான் நடக்கும்.........அத்தோடு எல்லாம் சரி, அனைத்து தில்லு முள்ளுகளும் பூசி மெழுகப் பட்டு விடும்.............
மீண்டும் அடுத்த group அழைத்துச் செல்லும் பொழுது 'பழைய குருடி கதவைத் திறடி' கதைதான்...