இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஏற்பாட்டில் உலர் உணவு பொதிகள் விநியோகம் (படம்)
பஷீர் அலி
புனித ரமழானனை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹெம்மாதகம கிளையின் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களது அனுசரனையில் ரூ 3,12,000 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் தும்புழுவாவ, ஹிஜ்ராகம, கொடேகொட பிரதேசங்களை சேர்ந்த வறியவர்களுக்கும் தேவை உடையோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும், கிளை சூறாவின் தீர்மானத்திற்கு இனங்க ஹெம்மாதகம பிரதேசத்தின் ஏனைய பகுதிகளான மடுல்போவ, வாடியதன்ன, அமுருப்ப, பள்ளிப்போருவ போன்ற பகுதிகளுக்கும் மிக விரைவில் உலர் உணவு வினியோகம் இடம்பெற இருப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹெம்மாதகம கிளையின் பொறுப்பாளர் ஹிஷாம் ஜவாத் தெரிவித்தார்.
" MASHA ALLAH " நல்லதொரு பணி செய்கின்றீர்கள் அல்லாஹ் உங்கல்களை போருந்திக்கொள்வானாக ஆமீன்
ReplyDeletekEKUNAGOLLA